மாதனூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
மாதனூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தின் 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]ஆம்பூர் வட்டத்தில் அமைந்த மாதனூர் ஊராட்சி ஒன்றியம் 36 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மாதனூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,09,885 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 38,932 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,074 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுமாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அகரம் ஊராட்சி
- அகரம்சேரி
- அக்ரஹாரம் ஊராட்சி
- ஆலன்குப்பம்
- அரிமலை
- ஆசனாம்பேட்
- செங்கிலிகுப்பம்
- சின்னசேரி
- சின்னபள்ளிக்குப்பம்
- கொல்லமங்கலம்
- குருவராஜபாளையம்
- கண்ணாடிகுப்பம்
- கீழ்முருங்கை
- கூத்தம்பாக்கம்
- குளிதிகைஜமீன்
- குப்பாம்பட்டு
- குப்பாமபாளையம்
- மாதனூர்
- மேல்பள்ளிப்பேட்
- மின்னூர்
- நாச்சார்குப்பம்
- நாய்க்கனேரி
- பக்கம்பாளையம்
- பள்ளிக்குப்பம்
- பாலூர்
- பெரியன்குப்பம்
- இராமநாயனிகுப்பம்
- சோலூர்
- சோமலாபுரம்
- திருமலைக்குப்பம்
- தொழப்பள்ளி
- தொட்டலம்
- வடபுதுப்பேட்
- வெங்கிலி
- வேப்பன்குப்பம்
- விண்ணமங்கலம்