பண்டிட் மாதவ் குடி (Madhava Gudi) (23 திசம்பர் 1941 - 22 ஏப்ரல் 2011) இவர் ஒரு இந்துஸ்தானி இசைப் பாடகராவார். கயலிலும், பக்தி இசையின் விளக்கங்கள், குறிப்பாக தசவானியிலும் நிபுணத்துவம் பெற்றவர். [2]

மாதவ குடி
பிறப்பு(1941-12-23)23 திசம்பர் 1941
தார்வாடு, கருநாடகம்
இறப்பு22 ஏப்ரல் 2011(2011-04-22) (அகவை 69)
தார்வாடு, கருநாடகம்[1]
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை - கியால் & மெல்லிசை வடிவம்
தொழில்(கள்)இந்துஸ்தானி இசைப் பாடகர்

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும் தொகு

இவர், 1941 ஆம் ஆண்டில் கர்நாடகாவின் தார்வாடு [3] என்ற ஊரில் சுபத்ரா மற்றும் குருராஜாச்சார் குடி ஆகியோருக்கு ஹரி கீர்த்தங்கர்களின் இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாத்தா சேசாச்சார் கர்நாடக இசை பாடகராவார். மேலும், இவரது தந்தை தார்வாட்டில் நன்கு அறியப்பட்ட கீர்த்தங்கர் ஆவார். இவர் மிகச் சிறிய வயதிலேயே இசைக்கு அறிமுகமானார். அடிக்கடி தனது தந்தையுடன் தனது கீர்த்தனை நிகழ்ச்சிகளுக்கு செல்வார். அது இவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், இவரது இசை வாழ்க்கையை நோக்கி வழி வகுத்தது.

இசை பயிற்சி தொகு

பாரம்பரிய இந்துஸ்தானி இசையில் தனது முறையான துவக்கத்தைப் பெற சிறந்த இசி மேதையான பண்டிட் நாகேசுராவ் தேசுபாண்டேவின் கீழ் பயிற்சியில் சேர்தார்.

இவரதுகுரல் இந்துஸ்தானி இசை மற்றும் மெல்லிசைக்கும் (தசவானி மற்றும் அபங்கம்) மிகவும் பொருத்தமானது. ஒரு உயர்தர அகில இந்திய வானொலி கலைஞரான இவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும், பண்டிட் பீம்சென் ஜோஷியுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல நிகழ்ச்சிகளில் நிகழ்த்தினார். அவரது மெல்லிசை மற்றும் சக்திவாய்ந்த குரலுக்கு பெயர் பெற்ற மாதவ் குடி பல மொழிகளில் பலவிதமான பாணியிலான இசையமைப்பின் இணையற்ற தொகுப்பைக் கொண்டிருந்தார்.

பீம்சன் ஜோஷி பிரபலப்படுத்திய 'சிறீநிகேதன்' மற்றும் 'பாக்யாத லட்சுமி பாரம்மா' என்ற பக்தி பாடல்களின் இசையமைப்பாளராகவும் இவர் இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

தனது 30 வயதில் இரமாபாய் என்பவரை மணந்தார். இவர்களுக்கு அனுபமா, பிரசன்னா, பார்கவி , காயத்ரி என நான்கு குழந்தைகள் இருந்தனர்.

விருதுகள் தொகு

இவருக்கு கிடைத்த பல பாராட்டுக்களில் , கர்நாடக அரசின் சங்கீதா நிருத்யா அகாடமி விருது, சுராசிரி, கான பாஸ்கர் விருது, புகழ்பெற்ற இந்திய செவ்வியல் குரலிசைக் கலைஞர் பிரபா ஆத்ரேவிடமிருந்து, கான கலா திலகா விருது , யசவந்த் ராவ் சவுகான் சமதா கௌரவ் புரஸ்கார் ஆகியவை வழங்கப்பட்டது.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவ_குடி&oldid=3086518" இலிருந்து மீள்விக்கப்பட்டது