மாத்ரிமந்திர்
மாத்ரிமந்திர் (Matrimandir, சமசுகிருதத்தில் அன்னை ஆலயம் என்று பொருள்) என்பது ஒருங்கிணைந்த யோகா பயிற்சியாளர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவத்தின் ஒரு மாளிகையாகும். இது ஆரோவில்லின் மையத்தில் அமைந்துள்ளது. இதை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின், அன்னை நிறுவினார். சமய, சமயச் சடங்குகள் கடந்த நிலையில் பிரபஞ்ச அன்னையாகிய மகாசக்தியை உணரும் வண்ணத்தில் உருவாக்கப் பெற்ற இக்கோள வடிவிலான மனஒருமை அரங்கு, 1971 ஆம் ஆண்டு அன்னையின் பிறந்த நாளன்று அடிக்கல் நாட்டப் பெற்றுக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப் பெறுகின்றன.[1]
மாத்ரிமந்திர் | |
---|---|
ஆரோவில் மாத்ரிமந்திர் | |
மாத்ரிமந்திர் | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | ஆரோவில், தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 12°00′26″N 79°48′38″E / 12.007208°N 79.810658°E |
அடிக்கல் நாட்டுதல் | 21 பிப்ரவரி 1971 |
நிறைவுற்றது | பிப்ரவரி 2008 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | அன்னை ரோஜர் ஆங்கர் |
வலைதளம் | |
Description of the Matrimandir from Auroville's website |
மாத்ரி மந்திரின் அமைப்பு
தொகுஅன்னையின் 93வது பிறந்த நாளான, பிப்ரவரி 21, 1971 அன்று அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து, மே 2008இல் இது நிறைவடைந்தது. இதனை கட்ட சுமார் 37 ஆண்டுகள் ஆனது.
மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல் வடிவங்களை ஸ்ரீஅரவிந்தர் உணர்த்தும் வகையில் இம்மண்டபத்தை முறையே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன. மாத்ரிமந்திர் சிறிது தட்டையான கோளவடிவிலான ஆலயமாகும். தரைமட்டத்திலிருந்து 29 மீ. உயரத்தில் உள்ள இக்கோளத்தின் விட்டம் 36 மீ. முக்கோண வடிவச் சட்டங்களால் ஆன இக்கோளத்தின் புறப்பகுதி, தங்க ரேக்குகள் பதிக்கப்பெற்ற வட்ட வடிவத் தட்டுகளால் அமைக்கப் பெற்றுக் காண்போரைக் கவர்கின்றது. கோளத்தின் உட்புற மேற்பகுதியில் ஒரு பெருங்கூடம் உள்ளது. அதன் விக்கிரகங்களோ, படங்களோ கிடையாது. பன்னிரு பக்கங்களைக் கொண்ட அந்த அறையின் தளப்பகுதியும் சுவர்களும், வெண் சலவைக் கற்களால் ஆனவை. பன்னிரு தூண்களைக் கொண்ட அந்த அறையில் சன்னல்கள் இல்லை. நுழையவும், வெளியேறவும் கூடிய வகையில் இரு வாசல்கள் உண்டு. அறையின் மையத்தில் அன்னையின் சின்னமும், அதன் நடுவில் நான்கு புறமும், அரவிந்தரின் சின்னங்கள் பொருத்தப் பெற்ற பொன்முலாம் பூசிய மேடையின்மீது உருண்டை வடிவிலான ஒளி ஊடுருவக்கூடிய படிகம் ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது. அதன் நேர் மேற்கூரையிலுள்ள ஆடியின் வழியாகச் சூரிய ஒளிக்கீற்றுகள் உள் புகுந்து படிகத்துள் பிரதிபலிக்கும் அழகு நேரில் தரிசித்து அனுபவிக்கத்தக்கது. சூரிய ஆற்றலை மின்கலங்களில் சேகரித்து வைத்துச் சூரிய ஒளி இல்லாத பொழுதுகளில் அப்படிகத்தின் மீது செலுத்தப் பெறும். இப்படிகம் உலகிலேயே மிகப்பெரிய செயற்கைப் படிகமாகும்.
பிரபஞ்ச அன்னையின் நான்கு மகாசக்தியின் செயல்பாடுகளைக் குறிக்கும் வண்ணம் இங்கு நான்கு தூண்கள் அமைக்கப்பெற்றுள்ளன.[2]
பெயர் | குறியீடு |
மகேசுவரி (தெற்கு தூண்) | "...her personality of calm wideness and comprehending wisdom and tranquil benignity and inexhaustible compassion and sovereign and surpassing majesty and all-ruling greatness".[2] |
மகாகாளி (வடக்கு தூண்) | "...her power of splendid strength and irresistible passion, her warrior mood, her overwhelming will, her impetuous swiftness and world-shaking force".[2] |
மகா லட்சுமி (கிழக்கு தூண்) | "...vivid and sweet and wonderful with her deep secret of beauty and harmony and fine rhythm, her intricate and subtle opulence, her compelling attraction and captivating grace".[2] |
மகா சரசுவதி (மேற்கு தூண்) | "...equipped with her close and profound capacity of intimate knowledge and careful flawless work and quiet and exact perfection in all things".[2] |
இருப்பிடம்
தொகுசென்னை- புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், பொம்மையார் பாளையம்மற்றும் முதலியார் சாவடியிலிருந்து சுமார் 6.கி.மீ. தொலைவில் உள்ளது. திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hundreds flock to Matrimandir bonfire". தி இந்து (மார்ச் 01, 2019)
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Aurobindo, Sri. The Mother p36-37 (Sri Aurobindo Ashram Trust, 1987, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7058-059-5)