மாந்தா தேவி
மாந்தா அல்லது தாமினி இந்து சமயத்த்தில் குறிக்கப்படும் கலைகளின் தெய்வமும் சனியின் இரண்டாவது மனைவியும்,(சமக்கிருதம்: मान्दा -சமக்கிருதம்: धामिनी) மாந்தி என அழைக்கப்படும் குளிகனின் தாயும் ஆவார். மாந்தா சித்ரரதன் என்ற ஒரு காந்தர்வரின் மகளும் இளவரசியும் அவார். அவள் அறுபத்து நான்கு ஆய கலைகளின் தெய்வம். அவரது நிருத்யா / நடனம் முழு அண்டத்திலும் யாரையும் ஈர்க்கவல்லது. சில நேரங்களில், இந்தியாவில் சனிஸ்வரனின் தெய்வீகப் பிரதிநிதி என மாந்தா குறிப்பிடப்படுகிறார்.
மாந்தா அல்லது தாமினி | |
---|---|
அதிபதி | நடனம் மற்றும் பிற கலைகளில் தெய்வம் |
தேவநாகரி | धामिनी |
சமசுகிருதம் | தாமினி |
வகை | தேவி, சரசுவதிதேவியின் பக்தர் |
இடம் | Gandharvaloka |
மந்திரம் | ॐ मान्दायै धामाना नमः oṁ māndāyai dhāmānā namaḥ |
ஆயுதம் | வீணை (Indian Harp) |
துணை | சனீஸ்வரன் |
பெற்றோர்கள் | சித்திரரதன் (தந்தை), திவ்யங்கா (தாய்) |
குழந்தைகள் | குளிகன்/மாந்தி (மகன்)[1] |
பெயரிடுதல்
தொகுமந்தா சிறியதாக இருந்தபோது ஒரு அசுரப்பாம்பு மாந்தாவைக் கொல்ல வந்தது மந்தாவின் தாய் திவ்யங்கா குழந்தையைக் காக்கப்அசுரப் பாம்புடன் போராடி உயிரைத் தியாகம் செய்து மாந்தாவைக் காப்பாற்றினார். அவரது மரணத்திதால் மாந்தாவின் தந்தையான சித்ரரதன் மிகத் துயரம் கொண்டார். எனவே அவர் அந்த நினைவாக மாந்தாவுக்கு தாமினா என்ற அந்தப் பாம்பின் பெயரை தாமினை எனத் தனது மகள் மாந்தாவுக்குச் சூட்டினார்.
சாபம்
தொகுஒரு பழங்கால கதையின்படி, அவரது குழந்தை பருவத்திலிருந்தே சனி சிவபெருமானின் தீவிர பக்தராக இருந்தார். அவரது தந்தையானசூர்ய தேவன், சித்ரரதனின் திறமையான மகள் மாந்தாவை சனிக்குத் திருமணம் செய்துவைத்தார். அவர் (சனி) சிவபெருமானின் ஆழ்ந்த எண்ணங்களை உள்வாங்கி எப்பொழுதும் சிவனின் நிணைவிலேயே இருந்தார். சனி பகவானின் மனைவியும், சித்திரதன் என்ற கந்தர்வன் மகளுமான தாமினிக்கு குழந்தையில்லையே என்கிற கவலை தொடர்ந்து இருந்து கொண்டிருந்தது. சனி பகவான், சிவனை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது மனைவி (தாமினி) மாதவிடாய் காலத்திற்குப் பிறகு குளித்தபின்,அவரிடம் வந்தார், அந்த நேரத்தில் சனி தனது தெய்வத்தின் (சிவபெருமானின்) ஆழமான எண்ணங்களில் உள்வாங்கப்பட்டார். அவர் தனது மனைவியைப் பார்க்கக்கூடவில்லை. அதனால் அவரது மனைவி மாங்கல்ய தோசத்தால் பாதிக்கப்பட்டார். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய தாமினி, தியானத்தில் இருந்த சனி பகவானிடம், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டுமென்று கேட்டாள். தியானத்தில் ஆழ்ந்திருந்ததால் அவளின் கோரிக்கையை சனீஸ்வரன் கவனிக்கவில்லை. அவள் மேலும் சிலமுறை தனக்குக் குழந்தைப்பேறு அளித்திட வேண்டுமென்று கேட்டும், பதில் ஏதும் கிடைக்காததால் வருத்தமடைந்தாள். மனைவியான தன்னைக் கவனிக்காமல், தியானத்தில் இருப்பது போல் தனது வேண்டுகோளைப் புறக்கணிப்பதாக அவளுக்குத் தோன்றியது. ஆகையால் பொறுமை இழந்த அவள் கோபத்துடன், ‘மனைவியான என்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றித் தராமல், என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் புறக்கணித்த நீங்கள், இனி யாரையும், எப்போதும் நேர்ப்பார்வையில் பார்க்கக் கூடாது. அப்படி நீங்கள் யாரைப் பார்த்தாலும், அவர்கள் அழிந்து போகட்டும்’ என்று சாபமிட்டாள். அவள் கோபம் நீங்கியபோது, தனது சாபத்தை எண்ணி மனந்திரும்பினாள், ஆனால் சாபத்தை நீக்க முடியவில்லை, எனவே சனி பகவான் பார்வை என்றென்றும் கீழ்நோக்கி உள்ளது. இதனால் சனிபகவான் யாரையும் நேரடியாகப் பார்க்க முடியாமல், பூமியைப் பார்த்து தலை குனிந்தபடியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.ஆனால், சனி தனது பூலோகத்திற்குச் சென்று செயல்கள் மூலம் இறைவன் சிவனை வழிபட்டு ஏற்றுக்கொள்ளும்போது, அவர் இந்த சாபத்திலிருந்து விடுபடுகிறார்.
சனியின் மனைவிகளின் பெயர்களை முழக்கமிடுவது
தொகுவழிபாட்டுப்பாடல்களில் சனியின் மனைவி தாமினி முதன்மையாகக் குறிப்பிடப்படுகிறார்.. சனியின் மனைவிகளின் பெயர்களை உச்சரிப்பதும் சனியை சமாதானப்படுத்த உதவுகிறது. அந்தப் பாடல் ‘த்வாஜனி தாமினி சாய்வா கன்காளி கலாப்பிரியா கண்டகி காலஹி சாதா தரங்கி மகிஷி அஜ சனேனர்மனி மட்டினமேதனி சஞ்சபானி புமன் தக்கனி நாசயேந்திய சுப கியமத்தே சுகம்’. [2]
இந்தியாவின் கேரளாவில் மாந்தாவின் மகனின் கோயில்கள்
தொகுமாந்தாவின் மகன் மாந்தி என அழைக்கப்படுகிறார். மாந்தியின் கோயில் குளிகன்கோவில் என அறியப்படுகிறது அங்கு சிவபெருமான் அங்கே வணங்கப்படுறார். இந்தியாவின் கேரளாவில் சில பிரபலமான குளிகன் கோயில்கள் உள்ளன:புல்லூர் குளிகன் கோயில்,(ஆயஅச்சுகள்: 12°21′30″N 75°07′37″E / 12.3582543°N 75.1270049°E), பொன்னியத்தில் கானலிரிக்கண்டியில் குளிகன் கோயில்(ஆயஅச்சுகள்: 11°46′20″N 75°31′54″E / 11.7721874°N 75.5317746°E ), வயநாட்டில் ஸ்ரீ திருநெல்லிக் குளிகன் காவு,(ஆயஅச்சுகள்: 11°40′04″N 76°16′41″E / 11.6678867°N 76.278175°E ), பேரளத்தில் ஸ்ரீ குளிகண் தேவஸ்தானம்(ஆயஅச்சுகள்: 12°10′51″N 75°12′31″E / 12.1809261°N 75.2086553°E ), நைதலூர் தலச்சிலோன் குளிகன் சேத்திரம்(ஆயஅச்சுகள்: 11°27′29″N 75°44′44″E / 11.4579709°N 75.7455826°E ), ஆகியவை கேரளாவில் உள்ள கோயில்கள் ஆகும்.
மேலும் காண்க: குளிகன் தேயம்
தொலைக்காட்சியில்
தொகுகலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் என்ற தொடரில் தாமினி காட்டப்பட்டார். அவரது கதாபாத்திரத்தில் தினா தத்தா நடித்தார். [3]
குறிப்புகள்
தொகு- ↑ "Gulikan". uni5.co. பார்க்கப்பட்ட நாள் 18 June 2018.
- ↑ "Shani Jayanti". www.astrospeak.com. பார்க்கப்பட்ட நாள் 18 June 2018.
- ↑ "Tina Dutta finally said about her role in karmphal Data Shani". televisionsworld.com. பார்க்கப்பட்ட நாள் 18 June 2018.