மாம்புரம் பள்ளிவாசல்

இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்கள்

மாம்புரம் பள்ளிவாசல் (Mampuram Mosque) தென்னிந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திருரங்கடியில் அமைந்துள்ள ஒரு பிரபலமான பள்ளிவாசலாகும். வரலாற்று ரீதியாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக 1921 ஆம் ஆண்டு மாப்பிலா லகலா எனப்படும் மலபார் புரட்சியுடன் தொடர்புடையதாகும்.

மாம்புரம் பள்ளிவாசல்
Mampuram mosque
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்திரூரங்காடி, இந்தியா
சமயம்இசுலாம்
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம் மாவட்டம்
நிலைபள்ளிவாசல்
இணையத்
தளம்
www.mampurammaqam.com
மாம்புரம் பண்டிதரின் பழைய வீடு இப்போது வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்படுகிறது.

புனித மையம்

தொகு

கேரளாவின் சன்னி வகை இசுலாமியர்களின் மிக முக்கியமான புனித மையங்களில் மாம்புரம் பள்ளிவாசலும் ஒன்றாகும். தினசரி 5,000 பார்வையாளர்கள் இங்கு வருகிறார்கள். வேலை செய்யும் நேரம்: காலை பிரார்த்தனைக்கு 20 நிமிடம் முன்பும் மாக்ரிப் பிரார்த்தனைக்கு 20 நிமிடங்களுக்கு முன்னரும் பள்ளிவாசல் இயங்குகிறது. [1]

வாராந்திர பிரார்த்தனை

தொகு

ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளிவாசல் தர்காவில் சுவாலத் மச்லிசு எனப்படும் ஒரு கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.[2]

பண்டிகைகள்

தொகு

ஒவ்வொரு ஆண்டும் முகரம் மாதத்தின் முதல் ஏழாம் தேதி வரை இங்கு உரூசு திருவிழா நடத்தப்படுகிறது. நிகழ்ச்சிகளில் இசுலாம் பற்றிய பேச்சுக்கள் மற்றும் இலவச உணவு விநியோகம் ஆகியவை அடங்கும். இறுதி நாளில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றும் நடக்கிறது. [3]

படத் தொகுப்பு

தொகு

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://twocircles.net/2012jun21/mampuram_maqam_%E2%80%93_shrine_two_epic_lives.html#.V7OR4jWkFEU
  2. http://twocircles.net/2012jun21/mampuram_maqam_%E2%80%93_shrine_two_epic_lives.html#.V7OR4jWkFEU
  3. http://twocircles.net/2012jun21/mampuram_maqam_%E2%80%93_shrine_two_epic_lives.html#.V7OR4jWkFEU

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாம்புரம்_பள்ளிவாசல்&oldid=3195043" இலிருந்து மீள்விக்கப்பட்டது