மாரி 2

பாலாஜி மோகன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாரி 2, பாலாஜி மோகன் இயக்கி 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும் . இது 2015 ஆம் ஆண்டில் வெளியான மாரி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். தனுஷ், தனது நிறுவனம் வந்தர்பார் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்து, தலைப்பு பாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் & கிருஷ்ணா குலசேகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

மாரி 2
இயக்கம்பாலாஜி மோகன்
தயாரிப்புதனுஷ்
கதைபாலாஜி மோகன்
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்புதனுஷ்
சாய் பல்லவி
டோவினோ தாமஸ்
வித்யா பிரதீப்
கிருஷ்ணா குலசேகரன்
வரலஷ்மி சரத்குமார்
ரோபோ ஷங்கர்
ஒளிப்பதிவுஓம் பிரகாஷ்
படத்தொகுப்புபிரசன்னா ஜி. கே.
விநியோகம்லைகா புரொடக்சன்ஸ்
வெளியீடு21 திசம்பர் 2018 (2018-12-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதாப்பாத்திரங்கள்

தயாரிப்பு

ஆகஸ்ட் 2018 ல் படப்பிடிப்பு முடிந்தது.

இசை

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

தனுஷ் மற்றும் தி  பாடிய "ரவுடி பேபி" என்ற பாடல், நவம்பர் 27, 2018 அன்று வெளியிடப்பட்டது. தனுஷால் எழுதப்பட்ட "மாரியின் ஆனந்தி" என்ற பாடலானது, இளையராஜா மற்றும் எம்.எம்.மனாசி ஆகியோரால் பாடப்பட்டது, டிசம்பர் 10, 2018 அன்று வெளியிடப்பட்டது.

வெளியீடு

மாரி 2, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரி_2&oldid=3941297" இலிருந்து மீள்விக்கப்பட்டது