பிரசன்னா ஜி. கே.
பிரசன்னா ஜி. கே. (Prasanna GK) என்பவர் ஒரு இந்திய திரைப்பட படத் தொகுப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரிகிறார். இவர் திரைப்பட படத்தொகுப்பாளர் ஏ. ஸ்ரீகர் பிரசாத்தின் உதவியாளராக இருந்தவர் ஆவார். இவரை பாலாஜி மோகன் மாரி படத்தில் அறிமுகப்படுத்தினார்.
பிரசன்னா ஜி. கே. | |
---|---|
பிறப்பு | 16 திசம்பர் 1986 |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னை கிறித்துவக் கல்லூரி |
பணி | திரைப்படத் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2010-தற்போது வரை |
தொழில்
தொகுபிரசன்னா ஜி. கே [1] சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர், எல். வி. பிரசாத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அகாதமியில் படத்தொகுப்பு மற்றும் ஒலி வடிவமைப்பில் பட்டயப் படிப்பை முடித்தார். பின்னர் படத்தொகுப்பாளர்கள் லியோ ஜான் பால் மற்றும் டி. எஸ். சுரேஷ் ஆகியோரிடம் பிரசன்னா உதவியாளராக இருந்தார். பின்னர் ஏ. ஸ்ரீகர் பிரசாத்திடம் உதவியாளராக இணைந்தார். ஆரம்பம், ஃபைண்டிங் ஃபன்னி, யான் போன்ற படங்களில் ஸ்ரீக்கர் பிரசாத்தின் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் பாலாஜி மோகனின் மாரி மூலம் இவர் படத்தொகுப்பாளராக அறிமுகமானார். [எப்போது?] தனுஷ் இயக்குனராக பணியாற்றிய பவர் பாண்டியைத் தவிர, தற்போது செல்வராகவன் நெஞ்சம் மறப்பதில்லை [2] மற்றும் மன்னவன் வந்தானடி ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார்.
திரைப்படவியல்
தொகுபடத் தொகுப்பு
தொகுஇதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது |
ஆண்டு | படம் | குறிப்புகள் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2015 | மாரி | ||||||||||
2016 | அவியல் | ||||||||||
2017 | பவர் பாண்டி | ||||||||||
ரங்கூன் | |||||||||||
மரகத நாணயம் | |||||||||||
யானும் தீயவன் | |||||||||||
வேலையில்லா பட்டதாரி 2 | இருமொழி படம் (தமிழ், தெலுங்கு ) | ||||||||||
2018 கஜினிகாந்த் | |||||||||||
மாரி 2 | |||||||||||
2019 | சத்ரு | ||||||||||
2019 | இஃக்லூ | ||||||||||
2020 | டாணா | ||||||||||
சர்பத் | |||||||||||
எஃப். ஐ. ஆர் | |||||||||||
2021 | டி 43 (2021 படம்) / டி 43 | 2021 | நானே வருவன் | 2021 | நட்சத்திரம் | 2021 | யாக்கை திரு |
விருதுகள்
தொகுஆண்டு | விருது | படம் | முடிவு | மேற்கோள் |
---|---|---|---|---|
2021 | சிறந்த படத்தொகுப்பாளருக்கான பிளாக்ஷீப் டிஜிட்டல் விருதுகள் | டிப்பிள்ஸ் (2020 வலைத் தொடர்) | வெற்றி | [3] |
குறிப்புகள்
தொகு
- ↑ "Prasanna GK". moviebuff.com. 2016-12-06. http://www.moviebuff.com/prasanna-gk. பார்த்த நாள்: 2017-03-17.
- ↑ "I GOT THE FILM BECAUSE OF DHANUSH SIR". behindwoods.com. 2016-09-13. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/editor-gk-prasanna-on-selvaraghavans-nenjam-marappathillai.html. பார்த்த நாள்: 2017-03-17.
- ↑ "'Chikati Gadilo Chithakotudu': The Adult comedy to hit the screens on this day - Times of India". The Times of India.