சர்பத் (திரைப்படம்)
சர்பத் (Sarbath) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் தொலைக்காட்சித் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநர் பிரபாகரன் எழுதி இயக்கியிருந்தார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோவின் இலலித் குமார் தயாரித்திருந்தார். உடன் Viacom18 நிறுவனமும் தயாரிப்பில் உதவி புரிந்தது.[1] இந்த படத்தில் கதிர், சூரி, ரகசியா கோரக், அஸ்வத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2][3] திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளப்பட்டி பகுதியை பின்னணியாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.[4] இந்த படம் இரண்டு குடும்பங்களின் கோமாளித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் விளைவாக வேடிக்கையும் கொந்தளிப்பும் ஒன்றாக ஏற்படுகிறது. படம் 11 ஏப்ரல் 2021 அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடப்பட்டது.[5][6][7]
சர்பத் | |
---|---|
வகை | நகைச்சுவை நாடகம் |
இயக்கம் | பிரபாகரன் |
நடிப்பு | கதிர் சூரி ரகசியா கோரக் அஸ்வத் |
இசை | அஜீஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | இலலித் குமார் |
ஒளிப்பதிவு | பிரபாகரன் |
தொகுப்பு | பிரசன்னா ஜி. கே. |
தயாரிப்பு நிறுவனங்கள் | 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ Viacom18 |
விநியோகம் | நெற்ஃபிளிக்சு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி |
ஒளிபரப்பு | |
ஒளிபரப்பான காலம் | ஏப்ரல் 11, 2021 |
நடிப்பு
தொகு- அறிவாக கதிர்
- அறிவின் நண்பராக சூரி
- அருணாவாக ரகசியா கோரக்
- செந்திலாக அஸ்வத்
- அன்பாக விவேக் பிரசன்னா
- ஆளவந்தானாக சித்தார்த் விபின்
- அறிவு, அன்பின் தந்தையாக ஜி. மாரிமுத்து
- அருணாவின் தந்தையாக புளோரண்ட் பெரேரா
- இந்துமதி அறிவு மற்றும் அன்புவின் தாயாக
- குழந்தை ஜாய்
- சுஹாசினி
தயாரிப்பு
தொகுஇந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபாகரன் தான் இயக்குவதாக அறிவித்தார். அவர் முன்பு பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.[8] கதிர் ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதே நேரத்தில் சூரி படத்தில் கதிரின் நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இது கதிர் மற்றும் சூரிக்கு இடையேயான முதல் ஒத்துழைப்பைக் குறித்தது. படத்தின் தலைப்பு மற்றும் முதல் சுவரொட்டி 17 சூன் 2019 அன்று வெளியிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படப்பிடிப்பும் நிறைவடைந்தது.[9] இந்தப் படம் முக்கியமாக திண்டுக்கல்லில் படமாக்கப்பட்டது. மேலும், படத்தின் சில பகுதிகள் சென்னையில் படமாக்கப்பட்டன.[9]
ஒலிப்பதிவு
தொகுபடத்திற்கு அஜீஸ் இசையமைத்தார்.
வெளியீடு
தொகு2019 ஆம் ஆண்டில் படப்பிடிப்பு நிறைவடைந்த போதிலும், கோவிட் -19 தொற்றுநோயால் படத்தின் திரையரங்கு வெளியீடு பல மாதங்கள் தாமதமானது. படம் 11 ஏப்ரல் 2021 அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது [10][11]
சான்றுகள்
தொகு- ↑ "Kathir's 'Sarbath' teaser - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
- ↑ "Sarbath Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes".
- ↑ "Sarbath (2021) - IMDb".
- ↑ "Kathir to play hero in 'Sarbath'". News Today | First with the news (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-06-19. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
- ↑ "நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் கதிரின் 'சர்பத்'! தேதி, நேரம் விவரம் இதோ". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
- ↑ "கலர்ஸ் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் கதிர், சூரி நடித்த சர்பத்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ 9.0 9.1 "Kathir and Soori join hands for Sarbath". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "நேரடி தொலைக்காட்சி வெளியீட்டில் அடுத்த படம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.