மாரோ பியோர்

இத்தாலிய-அமெரிக்க திரைப்படக் கலைஞர்

மாரோ பியோர் (ஆங்கில மொழி: Mauro Fiore) (பிறப்பு:நவம்பர் 17, 1964)[1][2] என்பவர் இத்தாலி நாட்டு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் டிரெய்னிங் டே (2001), தி ஹைர்: டிக்கர், டியர்ஸ் ஆஃப் தி சன் (2003), ஸ்மோக்கின் ஏசஸ் (2007) மற்றும் தி கிங்டம் (2007) போன்ற படங்களில் பணியாற்றினார். அதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் என்ற திரைப்படத்திற்காக 82ஆவது அகாதமி விருதுகளில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான அகாடமி விருதை வென்றார்.

மாரோ பியோர்
பிறப்புநவம்பர் 17, 1964 (1964-11-17) (அகவை 60)
மர்சி, கலாப்ரியா, இத்தாலி
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1986–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கிறிஸ்டின் வோல்மர்
(தி. 2000)
பிள்ளைகள்3

இவர் ட்ரேசி டேக்ஸ் ஆன் என்ற தொலைக்காட்சி தொடரின் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றினார். அத்துடன் இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் படத்திற்கான புகைப்பட இயக்குனராக இருந்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Daily Herald". www.dailyherald.com. பார்க்கப்பட்ட நாள் April 2, 2010.
  2. "Mauro Fiore". www.cinematographers.nl. Archived from the original on பிப்ரவரி 25, 2020. பார்க்கப்பட்ட நாள் March 9, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரோ_பியோர்&oldid=3680569" இலிருந்து மீள்விக்கப்பட்டது