தமிழ்நாட்டு இடதுசாரி அமைப்புகள்

(மார்க்சிய கட்சிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாட்டில் இடதுசாரி கொள்கைகளை தீவரமாக வலியுறுத்தும் அமைப்புகளை தமிழ்நாட்டு இடதுசாரி அமைப்புகள் எனலாம்.

பட்டியல்

தொகு

திராவிட இயக்கமும் இடதுசாரி அமைப்புகளும்

தொகு

திராவிட இயக்கம் பல இடதுசாரிக் கொள்கைகளை ஏற்றுச் செயற்பட்டாலும், அவை பல தீவர இடதுசாரிக் பொருளாதாரக் கொள்கைகளை என்றும் முறையாக நடைமுறைப்படுத்தியது இல்லை. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம் கேரளா மேற்கு வங்காளம் போன்று தீவரமாக நடைமுறைப்படுத்தாமல் அண்மை வரை கிடப்பிலேயே கிடந்தன. இருப்பினும் இட ஒதுக்கீடு, பெண்கள் உரிமைகள், மொழி உரிமைகள், அனைவருக்கும் இலவசக் கல்வி போன்ற இடதுசாரிக் கொள்கைகளை திராவிட இயக்கம் பெரிதும் ஏற்றுக் கொண்டே உள்ளன.


எனினும் அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றை கவனிக்க திராவிட அரசுகள் தவறி விட்டன என்று இடதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபரிகளின் நலன்களை பேணாவில்லை என்று குற்றம் சாட்டுகின்றன (ஆதாரம் தேவை). மாற்றாக சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற ஏற்பாடுகளை ஏற்படுத்தி மறுகாலனித்துவத்துக்கு உதவுவதாக குற்றம் சாட்டுகின்றன.


சமூக மொழி உரிமைத் தளங்களிலும் திராவிட இயக்கம் மீது பல்வேறு குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளன. எடுத்துக்காட்டாக தாய்மொழிக் கல்வி முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை, அல்லது அனைவருக்கும் இணையான ஆங்கில வழிக் கல்வி வாய்ப்புக்கள் இல்லாமை.


திராவிட கட்சி அரசியலையும் இடதுசாரி அமைப்புகள் விமர்சனம் செய்கின்றன. குறிப்பாக பலர் அடிப்படை பிரச்சினைகளை ஏதிர்நோக்கியுள்ள சமயத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் தொலைக்காட்சி போன்ற populist அரசியலை விமர்சிக்கின்றன (ஆதாரம் தேவை). மேலும் உறவினருக்கு தனிச்சலுகை காட்டும் குடும்ப அரசியலையும் விமர்சிக்கின்றன (ஆதாரம் தேவை).

ஆதரவும் அதிகாரமும்

தொகு

கேரளா மேற்கு வங்காளம் போலன்றி தமிழ்நாட்டில் தீவர இடதுசாரிக் கொள்கைகள் என்றும் பெரும்பான்மை அரசியல் ஆதரவும் அதிகாரமும் பெறவில்லை.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு