மார்டன் சான்சன்

இடச்சு கல்வியாளர் மற்றும் இடைஅமெரிக்கன் தொல்லியல் மற்றும் வரலாற்று பேராசிரியர்

மார்டன் எவர்ட் ரெய்னூட் செரார்ட் நிக்கோலாசு சான்சன் (Maarten Evert Reinoud Gerard Nicolaas Jansen) இடச்சு கல்வியாளர் மற்றும் இடைஅமெரிக்கன் தொல்லியல் மற்றும் வரலாற்று பேராசிரியர் ஆவார். இவர் 1952 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதியன்று சீசுட்டில் பிறந்தார். 2007 ஆம் ஆண்டு நிலவரப்படி, சான்சன் நெதர்லாந்து நாட்டின் லைடன் பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் பீடத்தின் டீன் பதவியை வகித்தார். சான்சன்,கொலம்பியனுக்கு முந்தைய மெசோ அமெரிக்கன் ஆய்வுகளில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நபராக உள்ளார். மத்திய-தெற்கு மெக்சிக்கோவின் ஓக்சாகன் பகுதியிலிருந்து மிக்சுடெக் நாகரிகத்தின் கலாச்சாரம், வரலாறு மற்றும் கையெழுத்துப் பிரதிகள் தொடர்பான நிபுணத்துவத்தின் குறிப்பிட்ட துறைகளில் இவர் பங்களித்துள்ளார் . [1]

மார்டன் சான்சன் (2010)

குறிப்புகள்

தொகு
  1. CNWS (n.d.)

மேற்கோள்கள்

தொகு
  • CNWS Research School (n.d.). "Prof. dr. M.E.R.G.N. Jansen". School of Asian, African and Amerindian Studies. Leiden University. பார்க்கப்பட்ட நாள் 2007-08-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்டன்_சான்சன்&oldid=4140925" இலிருந்து மீள்விக்கப்பட்டது