மார்ட்டி ஆத்திசாரி
மார்ட்டி ஒய்வா கலெவி ஆத்திசாரி (Martti Oiva Kalevi Ahtisaari, ⓘ, 23 சூன் 1937 – 16 அக்டோபர் 2023) என்பவர் பின்லாந்தின் முன்னாள் குடியரசுத் தலைவரும் (1994–2000), ஐக்கிய நாடுகள் அமைதித் தூதுவரும் ஆவார். 2008 இல் கொசோவோ பேச்சுக்களில் ஐ. நா சார்பில் முக்கிய பொறுப்பு வகித்தார். கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக பல கண்டங்களிலும் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டமைக்காகவும் கொசோவோ, வட அயர்லாந்து உட்பட பல பன்னாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியமைக்காகவும், 2008 ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கினர்[1].
மார்ட்டி ஆத்திசாரி Martti Ahtisaari | |
---|---|
பின்லாந்தின் 10வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் மார்ச்சு 1, 1994 – மார்ச்சு 1, 2000 | |
முன்னையவர் | மவுனோ கொய்விஸ்தோ |
பின்னவர் | தர்யா ஹலோனென் |
தான்சானியா, சாம்பியா, சோமாலியா, மொசாம்பிக் நாடுகளுக்கான பின்லாந்து தூதுவர் | |
பதவியில் 1973–1977 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பின்லாந்து | சூன் 23, 1937
இறப்பு | அக்டோபர் 16, 2023 எல்சிங்கி, பின்லாந்து | (அகவை 86)
தேசியம் | பின்லாந்து |
அரசியல் கட்சி | பின்லாந்து சமூக மக்களாட்சிக் கட்சி |
துணைவர் | ஏவா அஹ்திசாரி |