மார்த்தாண்ட வர்மா (திரைப்படம்)
மார்த்தாண்ட வர்மா என்பது சி. வி. இராமன் பிள்ளையின் இதே தலைப்பிலான வரலாற்றுப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பி.வி.ராவு இயக்கி 1933-ல் வெளியான ஒரு பேசாத கருப்பு வெள்ளை மலையாளத் திரைப்படமாகும். மலையாளத் திரைப்படத் துறையில் வெளியான இரண்டாவது படம் மற்றும் ஒரு இலக்கியப் படைப்பை அடிப்படையாகக் கொண்ட முதல் திரைப்படம் இது[1][2].
மார்த்தாண்ட வர்மா | |
---|---|
இயக்கம் | பி. வி. ராவு |
தயாரிப்பு | ஆர். சுந்தர் ராச் |
மூலக்கதை | மார்த்தாண்டவர்ம்மா படைத்தவர் சி. வி. இராமன் பிள்ளை |
திரைக்கதை | பி. வி. ராவு |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பாண்டுரங்க். இ. நாயிக் |
விநியோகம் | சிறீ இராசேசுவரி பிலிம்சு |
வெளியீடு | 1933 (திருவனந்தபுரம்) |
ஓட்டம் | 118 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | ஊமைத் திரைப்படம் மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் இடைத்தலைப்புகள் |
கதைப் பின்னல்
தொகுசி. வி. இராமன் பிள்ளையின் மார்த்தாண்ட வர்மா நாவலை அடிப்படையாகக் கொண்ட கதை.[1][2][3]
நடிப்பு
தொகுஇத் திரைப்படத்தில் நடித்தவர்கள்[4]:
- செய்தேவ் - மார்த்தாண்ட வர்மா
- எ.வி.பி மேனன் - அனந்த பத்மநாபன்
- வி. நாயிக் - பத்மநாபன் தம்பி
- பத்மினி - பாறுக் குட்டி
- தேவகி
- வி. சி. குட்டி
- எச். வி. நாத்
- சுந்தரம் ஐயர்
வெளியீடு
தொகுஇந்தத் திரைப்படம் வெளியிட்டபோது அக் காலகட்டத்தில் நாவலின் பதிப்பாளர் கமலாலயா புக் டிப்போவுடன் காப்புரிமை பிரச்சனையில்[2] சிக்கி முதல் காட்சிக்குப் பிறகு இத்திரைப்படம் பின்வாங்கப்பட்டு கேரள திரைப்படத்துறையில் மற்றும் இலக்கிய பதிப்பகத் துறையில் முதலாவது[3] காப்புரிமை வழக்கைப் பதிந்தது.
இத் திரைப்படத்தின் ஒரு பதிப்பு புனேயிலுள்ள தேசிய திரைப்பட ஆவணக்காப்பக மையத்தில் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது [5].
தென்னிந்தியாவில் வெளியான பேசாத கருப்பு வெள்ளை திரைப்படங்களில் இத்திரைப்படம் மட்டுமே பாதுகாக்கப்படும் பெருமையைப் பெற்றுள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 கெ. வி, ராமன் குட்டி (1999). "Malayalam Cinema -The Pageant and the Parade". Essays on the Cultural Formation of Kerala literature, Art, Architecture, Music, Theatre, Cinema. கெ.சி.எச்.ஆர் பப்லிகேசன்ச். Archived from the original on 2010-07-11. பார்க்கப்பட்ட நாள் 2010-05-16.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|month=
(help) - ↑ 2.0 2.1 2.2 சுதீப் கீதிகா (திசம்பர் 12, 2009). "Houseful!". மெட்ரோ ப்லச். திருவனந்தபுரம்: THE HINDU. Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2010-05-16.
{{cite web}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help)CS1 maint: date and year (link) - ↑ 3.0 3.1
பிந்து மேளன். எம். (2009). "Romancing history and historicizing romance". Circuits of Cinema: a symposium on Indian cinema in the 1940s and '50s. புது தில்லி: செமினார்: கணிணி இணய பதிப்பு.
{{cite web}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help) - ↑ "Documentation". Search on Cinema. பூனே: National Film Archive of India. பார்க்கப்பட்ட நாள் சனவரி 30, 2009.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ கய் ராண்டூர் (அக்டோபர் 18, 2001). "Mylapore and movies". Reflections/Reminiscences. சென்னை: THE HINDU. Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2010-05-16.
{{cite web}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help)CS1 maint: date and year (link) - ↑ Mending the moving image: South India’s cinematic heritage has seen huge loss, The Hindu, 27 August 2017