மாலதி செந்தூர்

தெலுங்கு எழுத்தாளர்

மாலதி செந்தூர் (Malathi Chendur) (26 டிசம்பர் 1928 - 21 ஆகஸ்ட் 2013) என்பவர் பிரபல இந்திய எழுத்தாளர், புதின ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். 1949 ஆம் ஆண்டில் புதின எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தெலுங்கு மொழியில் 26 புதினங்களை எழுதியுள்ளார். மேலும் இவர் பிற மொழிகளில் இருந்து தெலுங்கு மொழிக்கு 300 இற்கும் அதிகமான புதினங்களை மொழி பெயர்த்துள்ளார். 1992 ஆம் ஆண்டில் ஹிருதயா நேத்ரி என்ற புதினத்திற்காக இவருக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. 47 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்த ஆந்திர பிரபா செய்தித்தாளில் "பிரமாதவனம்" என்ற வாராந்திர கட்டுரையை எழுதினார்.

மாலதி செந்தூர்
மாலதி செந்தூர்
மாலதி செந்தூர்
பிறப்பு(1928-12-26)26 திசம்பர் 1928
நுஸ்விட், கிருஷ்ணா மாவட்டம், மதராஸ் , பிரித்தானிய இந்தியா (தற்போது;ஆந்திர பிரதேசம், இந்தியா)
இறப்பு21 ஆகத்து 2013(2013-08-21) (அகவை 84)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்மொழிப்பெயர்ப்பாளர்
புதின எழுத்தாளர்
கட்டுரையாளர்
கல்விஎஸ்.எஸ்.எல்.சி
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது
துணைவர்செந்தூர் நாகேஸ்வர் ராவ்

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்

தொகு

மாலதி செந்தூர் 1928 ஆம் ஆண்டு திசம்பர் 26 அன்று இந்தியாவின் நுஸ்விட் நகரில் வெங்கடாச்சலம் (தந்தை) மற்றும் ஞானம்பா (தாய்) ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[1][2] மாலதி தனது பெற்றோரின் ஆறாவது குழந்தையும், வீட்டில் இளையவரும் ஆவார். நுஸ்விட் நகரில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தனது உயர்நிலைப் பள்ளி கல்விக்காக எலுருக்கு சென்றார். எலுருவில் மாலதி அவரது தாய்வழி மாமனாரான நாகேஸ்வர் ராவ் செந்தூரின் வீட்டில் தங்கினார். 1947 ஆம் ஆண்டில் அவரும் நாகேஸ்வர் ராவ் செந்தூரும் மதராசிற்கு சென்றனர். மாலதி மதராசில் தனது மேல்நிலைப் பள்ளி சான்றிதழைப் பெற்றார். 1947 ஆம் ஆண்டின் இறுதியில் மாலதி நாகேஸ்வர் ராவ் செந்தூரை மணந்தார். அவர்களின் திருமணம் மதராசின் சுதந்திரத்திற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட முதல் திருமணமாக அறிவிக்கப்பட்டது.[2][3]

மாலதி செந்தூர் 1949 ஆம் ஆண்டில் புதின ஆசிரியராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த நாட்களில் அவர் தனது புதினங்களை வானொலியில் விவரித்தார்.[3] ஆந்திர பிரபா செய்தித்தாளில் "பிரமாதவனம்" என்ற வாராந்திர கட்டுரையை எழுதினார். மேலும் அதில் அவர் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததுடன், சமூக மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். [4][5]ஆந்திர பிரபா செய்தித்தாள் 47 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்தது.

1953 ஆம் ஆண்டில் செந்தூர் தெலுங்கு மொழியில் வண்டலு-பிண்டிவந்தலு என்ற தலைப்பில் ஒரு சமையல் புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகம் குறைந்தது 30 முறை மறுபதிப்பு செய்யப்பட்டது. செந்தூர் பல ஆங்கில புதினங்களை தெலுங்கிற்கு மொழிபெயர்த்து சுவாதி இதழில் பாதகெரதலு என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். அவரது முதல் புதினம் சம்பகம்-சீதாபுருகுலு ஆகும். மேலும் அவரது முதல் கதை "ராவலதுலு" என்பதாகும். அவரது பிரபலமான புதினங்களில் சில சம்பகம்-சீடாபுருகுலு, ஆலோச்சிஞ்சு, சத்தியோகம், ஹ்ருதயா நேத்ரி, சிசிரா வசந்தம், மனசுலோனி மனசு, மற்றும் பூமி புத்ரி என்பனவாகும்.[1] [2]மாலதி வார இதழ்களுக்கும் சிறுகதைகளையும் எழுதினார். அவரது புதினங்களில் பெண்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கியுள்ளார். [6]அவர் தெலுங்கு மொழியில் 26 புதினங்களை எழுதியுள்ளார். மேலும் 300 இற்கும் மேற்பட்ட புதினங்களை பிற மொழிகளில் இருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்துள்ளார். அவற்றை நவால பரிச்சாயலு என்ற தலைப்பில் ஐந்து தொகுதிகளாக வெளியிட்டார். மாலதி செந்தூர் 11 ஆண்டுகள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தில் உறுப்பினராக இருந்தார்.[1][2]

விருதுகள்

தொகு

1987 ஆம் ஆண்டில் செந்தூருக்கு அவரது ஹிருதயா நேத்ரி என்ற புதினத்திற்காக ஆந்திரப் பிரதேச சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டில், அதே புதினத்திற்காக கேந்திரா சாகித்ய அகாதமி விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டில், அவருக்கு மதிப்புமிக்க பாரதிய பாஷா பரிஷத் விருது வழங்கப்பட்டது. [1][2]மேலும் 1996 ஆம் ஆண்டில் அவர் ராஜா-லட்சுமி விருதைப் பெற்றார். அவர் தெலுங்கு பல்கலைக்கழக விருதையும் பெற்றார். 2005 ஆம் ஆண்டில் ஸ்ரீ பத்மாவதி மஹிலா விஸ்வத்யாலத்தினால் கௌரவ முனைவர் பட்டம் மற்றும் கலாப்பிரபூர்ணா பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். [6][5]2005 ஆம் ஆண்டில் செந்தூரும் அவரது கணவரும் யர்லகட லட்சுமிப்பிரசாத் நிறுவிய முதல் லோக் நாயக் அறக்கட்டளை விருதைப் பெற்றனர்.[2]

இறப்பு

தொகு

மாலதி செந்தூர் 2013 ஆம் ஆண்டு ஆகத்து 21 அன்று நோயினால் பீடிக்கப்பட்டு சென்னையில் இறந்தார்.[6][5][2] அவரது உடல் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆராய்ச்சி நோக்கங்களுக்காக வழங்கப்பட்டது.[1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Malathi chandur". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 hansindia (2013-08-25). "The ever fragrant Malathi". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-16.
  3. 3.0 3.1 "తె\తెనుగు.ఆర్గు :: దివాణంలో ఆడుకునేవాళ్లం - మాలతీ చందూర్..." dearnri.org. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-12-16.
  4. hansindia (2013-08-30). "My association with Malathi Chandur". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-16.
  5. 5.0 5.1 5.2 "Andhrapradesh writer- malathi". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. 6.0 6.1 6.2 "Telugu Novelist and Winner of Sahitya Akademi, Malathi Chandur died". Jagranjosh.com. 2013-08-23. பார்க்கப்பட்ட நாள் 2019-12-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி_செந்தூர்&oldid=3567430" இலிருந்து மீள்விக்கப்பட்டது