மாலினி 22 பாளையங்கோட்டை

சிறீபிரியா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாலினி 22 பாளையங்கோட்டை இது 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை நடிகை சிறீபிரியா எழுதி இயக்கியுள்ளார். இது இவர் இயக்கிய முதல் திரைப்படம் ஆகும். இவர் இதற்கு முன் தொலைக்காட்சி தொடர்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் மாலினி என்ற கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக நடிகர் கிரிஷ் ஜே.சதார் நடிக்கிறார் இவர்களுடன் கோவை சரளா, வித்யுலேகா ராமன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது.

மாலினி 22 பாளையங்கோட்டை
விளப்பரம்
இயக்கம்சிறீபிரியா
தயாரிப்புராஜ்குமார் சேதுபதி
திரைக்கதைஆஷிக் அபு
இசைஅரவிந்த்-ஷங்கர்
நடிப்புநித்யா மேனன்
கிரிஷ் ஜே.சதார்
ஒளிப்பதிவுமனோஜ் பிள்ளை
படத்தொகுப்புபவன் ஸ்ரீகுமார்
கலையகம்ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்
வெளியீடு2014-01-24
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஒளிப்பதிவு - இசை தொகு

இந்த திரைப்படத்துக்கு இசை அரவிந்த்-ஷங்கர் அமைத்துள்ளார் இது இவரின் மூன்றாவது தமிழ் திரைப்படம் ஆகும். இவர் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே மற்றும் காதல் FM போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கீழ்கண்ட பாடல்கள் இடம்பெறுகின்றன.

  • ஹாய் மை நேம் இச் மாலினி
  • கண்ணீர் துளியே
  • மாதர்தம்மை
  • விண்மீன்கள்
  • மாதர்தம்மை - ரீமிக்ஸ்

வெளியீடு தொகு

இந்த 2012ம் ஆண்டு வெளியான 22 Female Kottayam என்ற மலையாளம் திரைபடத்தின் மறு தயாரிப்பாகும். இந்த திரைப்படம் 24ம் திகதி தை மாதம் 2014ம் ஆண்டு திரைஅரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது. இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது.

வெளி இணைப்புகள் தொகு