மாலிப்டினம்(III) புரோமைடு

மாலிப்டினம்(III) புரோமைடு (Molybdenum(III) bromide) என்பது MoBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் ஒரு திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் பெரும்பாலான கரைப்பான்களில் கரையாது. ஆனால் பிரிடின் போன்ற புரோட்டானை கொடையளிக்கும் கரைப்பான்களில் மட்டும் கரைகிறது.

மாலிப்டினம்(III) புரோமைடு
Molybdenum(III) bromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
மாலிப்டினம்(III) புரோமைடு
மாலிப்டினம் டிரைபுரோமைடு
இனங்காட்டிகள்
13446-57-6 Y
ChemSpider 75310
EC number 236-600-6
InChI
  • InChI=1S/3BrH.Mo/h3*1H;/q;;;+3/p-3
    Key: YPFBRNLUIFQCQL-UHFFFAOYSA-K
  • InChI=1/3BrH.Mo/h3*1H;/q;;;+3/p-3
    Key: YPFBRNLUIFQCQL-DFZHHIFOAV
பப்கெம் 83472
பண்புகள்
MoBr3
வாய்ப்பாட்டு எடை 335.70 கி/மோல்
தோற்றம் அடர் பச்சையும் கருப்பு நிறமுமான திண்மம்
அடர்த்தி 4.89 g/cm3
உருகுநிலை 500 °C (932 °F; 773 K) சிதைவடையும்
கரையாது
கரைதிறன் பிரிடினில் கரையும்
+525.0·10−6 cm3/mol
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

தனிமநிலை மாலிப்டினமும் புரோமினும் 350 பாகை செல்சியசு வெப்பநிலை அல்லது 660 பாகை பாரன்கீட்டு வெப்பநிலையில் வினைபுரிந்து மாலிப்டினம்(III) புரோமைடு உருவாகிறது[1].

 

இதன் கட்டமைப்பில் முகப்பகிர்வு எண்முகப்படிகங்களுடன் குறுகிய மற்றும் நீண்ட Mo-Mo இணைப்புகள் எல்லையற்ற சங்கிலிகளாக உள்ளன. ருத்தேனியம் மற்றும் டெக்னீசியம் டிரைபுரோமைடுகளும் இதே வகையான கட்டமைப்பைக் கொண்டுள்ளன[2][3]. மாறாக உயர் வெப்பநிலையில் தைட்டானியம்(III) அயோடைடு சேர்மத்தில் உள்ள Ti---Ti தொடர்புகள் மாற்றமின்றி உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. F. Hein, S. Herzog "Molybdenum(III) Bromide" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1407.
  2. Dietrich Babel: Die Verfeinerung der MoBr3-Struktur (Refinement of the MoBr3-Structure) In: Journal of Solid State Chemistry. 1972, volume 4, S. 410–416, எஆசு:10.1016/0022-4596(72)90156-9.
  3. Order-Disorder Transformation in RuBr3 and MoBr3: A two-Dimensional Ising Model" Merlino, S.; Labella, L.; Marchetti, F.; Toscani, S. Chemistry of Materials 2004, volume 16, p3895-p3903
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிப்டினம்(III)_புரோமைடு&oldid=3968145" இலிருந்து மீள்விக்கப்பட்டது