மாலிப்டினம் மோனோபாசுபைடு
வேதிச் சேர்மம்
மாலிப்டினம் மோனோபாசுபைடு (Molybdenum monophosphide) என்பது MoP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாலிப்டினமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பாசுபேனைலிடின்மாலிப்டினம்
| |
இனங்காட்டிகள் | |
12163-69-8 | |
EC number | 235-312-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
MoP | |
வாய்ப்பாட்டு எடை | 126.92 g·mol−1 |
தோற்றம் | கருப்பு படிகங்கள் |
அடர்த்தி | 7.34 கி/செ.மீ3 |
கரையாது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஉருகிய மாலிப்டினம் அறுமெட்டாபாசுபேட்டை மின்னாற்பகுப்பு செய்து மாலிப்டினம் மோனோபாசுபைடு தயாரிக்கப்படுகிறது:[1]
- 4Mo(PO3)6 -> 4MoP + 10P2O5 + 9O2
கார்பன் உருக்குக் கலனில் மாலிப்டினம் மற்றும் மெட்டாபாசுபாரிக்கு அமிலத்தின் கலவையை சேர்த்து சூடாக்குவதன் மூலமும் இதை தயாரிக்கலாம்:
- 2Mo + 2HPO3 + 5C -> 2MoP + 5CO + H2O
பண்புகள்
தொகுமாலிப்டினம் மோனோபாசுபைடு அறுகோண படிக அமைப்பின் கருப்பு படிகங்களை P6m2 என்ற இடக்குழுவுடன் உருவாகிறது.[4] தண்ணீரில் இது கரையாது. காற்றில் சூடுபடுத்தப்பட்டால் சிதைவடையும்.
- 4 MoP + 11O2 -> 4MoO3 + 2P2O5
பயன்கள்
தொகுமாலிப்டினம் மோனோபாசுபைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Conrad, Ulrich (1935). Die Elektrolyse von Molybdänsäure in Phosphatschmelzen (in ஜெர்மன்). Technische Hochschule zu Breslau. p. 13. பார்க்கப்பட்ட நாள் 8 March 2024.
- ↑ Yao, Z. W.; Wang, Li; Dong, Haitao (3 April 2009). "A new approach to the synthesis of molybdenum phosphide via internal oxidation and reduction route". Journal of Alloys and Compounds 473 (1): L10–L12. doi:10.1016/j.jallcom.2008.05.048. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0925838808008207?via%3Dihub. பார்த்த நாள்: 8 March 2024.
- ↑ Hui, Ge; Xingchen, Liu; Shanmin, Wang; Tao, Yang; Xiaodong, Wen (8 February 2017). Innovative Applications of Mo(W)-Based Catalysts in the Petroleum and Chemical Industry: Emerging Research and Opportunities: Emerging Research and Opportunities (in ஆங்கிலம்). IGI Global. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5225-2275-1. பார்க்கப்பட்ட நாள் 8 March 2024.
- ↑ "mp-219: MoP (Hexagonal, P-6m2, 187)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 8 March 2024.
- ↑ Xiao, Peng; Sk, Mahasin Alam; Thia, Larissa; Ge, Xiaoming; Lim, Rern Jern; Wang, Jing-Yuan; Lim, Kok Hwa; Wang, Xin (18 July 2014). "Molybdenum phosphide as an efficient electrocatalyst for the hydrogen evolution reaction" (in en). Energy & Environmental Science 7 (8): 2624–2629. doi:10.1039/C4EE00957F. பன்னாட்டுத் தர தொடர் எண்:1754-5706. https://pubs.rsc.org/en/content/articlelanding/2014/ee/c4ee00957f. பார்த்த நாள்: 8 March 2024.
- ↑ Issues in Chemical Engineering and other Chemistry Specialties: 2011 Edition (in ஆங்கிலம்). ScholarlyEditions. 9 January 2012. p. 560. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4649-6354-4. பார்க்கப்பட்ட நாள் 8 March 2024.