மால்கம் மார்ஷல்

மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்

மால்கம் டென்சில் மார்ஷல் (Malcolm Denzil Marshall 18 ஏப்ரல் 1958 - 4 நவம்பர் 1999) ஒரு பார்பேடிய துடுப்பாட்ட வீரர் ஆவார் . விரை வு வீச்சாளரான மார்ஷல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய மிகச்சிறந்த விரைவு வீச்சாளராக கருதப்படுகிறார். [1] [2] [3] [4] பல சிறந்த மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஜோயல் கார்னர், கர்ட்லி ஆம்ப்ரோஸ் மற்றும் கோர்ட்னி வால்ஷ் ஆகியோர் 6 அடி இருந்த போது இவர் 5 அடி மட்டுமே இருந்தார்.இவர் 81 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1810 ஓட்டங்களை 18.85 எனும் சராசரியோடு எடுத்தார். இதில் அதிகபட்சமாக 92 ஓட்டங்கள் எடுத்தார்.பந்துவீச்சில் 376 இழப்புகளை எடுத்தார். இவர் 136 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 955 ஓட்டங்களை 14.92 எனும் சராசரியோடு எடுத்தார். இதில் அதிகபட்சமாக 66 ஓட்டங்கள் எடுத்தார்.பந்துவீச்சில் 157 இழப்புகளை எடுத்தார்.

2009 ஆம் ஆண்டில், மார்ஷல் ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் . [5]

ஆரம்ப ஆண்டுகளில் தொகு

மார்ஷல் பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் பிறந்தார். அவரது தந்தை, டென்ஸில் டிகோஸ்டர் எட்கில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார், அவர் செயின்ட் பிலிப்பில் கிங்ஸ்பார்க் கிரிக்கெட் கிளப்பில் விளையாடியவர் ஆவார்.மார்ஷலுக்கு ஒரு வயதாக இருந்தபோது இவரது தந்தை ஒரு போக்குவரத்து விபத்தில் இறந்தார். அவரது தாயார் எலினோர் (நீ வெல்ச்) ஆவார். மால்கமுக்கு மூன்று இளைய சகோதரர்களும் மூன்று இளைய சகோதரிகளும் இருந்தனர். பார்படோஸின் செயிண்ட் மைக்கேல் திருச்சபையில் வளர்ந்த அவர் 1963 முதல் 1969 வரை செயின்ட் கில்ஸ் பாய்ஸ் பள்ளியிலும் பின்னர் 1969 முதல் 1973 வரை பார்கின்சன் பள்ளியிலும் கல்வி பயின்றார். [6]

அவரது தாத்தாவால் அவருக்கு துடுப்பாட்டம் கற்பிக்கப்பட்டது. அவர் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவரை வளர்க்க உதவினார். அவர் 1976 முதல் பேங்க்ஸ் பிரிவெரி அணிக்காக துடுப்பாட்டம் விளையாடினார். மேற்கிந்தியத் தீவுகள் இளையோர் அணிக்காக ஆகஸ்ட் 1976 இல் பாயிண்ட்-இ-பியர், டிரினிடாட் மற்றும் டொபாகோவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட இளையோர் அணிக்கு எதிராக 40 நிறைவுகள் போட்டியில் விளையாடினார். 8 நிறைவுகள் வீசி 53 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 53 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இழப்பினைக் கைப்பற்றவில்லை.

நோய் மற்றும் இறப்பு தொகு

1996 ஆம் ஆண்டில், மார்ஷல் ஹாம்ப்ஷயர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இருப்பினும் இந்த காலகட்டத்தில் அணிகளின் வெற்றி எண்ணிக்கையானது குறைந்து வந்த காரணத்தினால் இவர் விமர்சனத்திற்கு உள்ளானது.1999 ஆம் ஆண்டில், உலகக் கோப்பையின் போது மார்ஷலுக்கு பெருங்குடல் மலகுடலுக்கிரிய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக அவர் உடனடியாக தனது பயிற்சியாளர் பணியினை ராஜினாமா செய்தார். அவர் தனது நீண்டகால தோழியான கோனி ராபர்ட்டா எர்லேவை ரோம்ஸியில் 25 செப்டம்பர் 1999 இல் திருமணம் செய்து கொண்டார்.அதன்பின்னர் தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். அங்கு அவர் நவம்பர் 4 ஆம் தேதி நாற்பத்தொன்று வயதில் இறந்தார். [7]2009 ஆம் ஆண்டில், மார்ஷல் ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் . [8]

ஒவ்வொரு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களிலும் முன்னணி விக்கெட் வீழ்த்தியவருக்கு வழங்கப்படும் மால்கம் மார்ஷல் மெமோரியல் டிராபி அவரது நினைவாக திறக்கப்பட்டது. பார்படாஸ் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ இடையேயான வருடாந்திர ஆட்டத்தில் அதே பெயரில் மற்றொரு கோப்பை பரிசாக அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Malcolm Marshall, player profile Mike Selvey et al, Cricinfo.
  2. Wasim Akram interview பரணிடப்பட்டது 25 ஆகத்து 2011 at the வந்தவழி இயந்திரம் Mohsin Abbas, Toronto Star, 19 April 2007.
  3. Gibson can show Flintoff and co the joys of the keep-it-simple life Mike Selvey, தி கார்டியன், 4 October 2007.
  4. Bangladesh v South Africa – as it happened Rob Smyth, தி கார்டியன், 19 March 2011.
  5. Cricinfo (2 January 2009). "ICC and FICA launch Cricket Hall of Fame". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
  6. Pat Symes, ‘Marshall, Malcolm Denzil (1958–1999)’, Oxford Dictionary of National Biography, Oxford University Press, Sept 2011 accessed 21 Dec 2011
  7. Symes 2008.
  8. Cricinfo (2 January 2009). "ICC and FICA launch Cricket Hall of Fame". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்கம்_மார்ஷல்&oldid=3315980" இலிருந்து மீள்விக்கப்பட்டது