மாஸ்தி
மாஸ்தி (Masthi) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] [2] இது கர்நாடகாத்தின் கோலார் மாவட்டத்தில் மாலூர் வட்டத்தில் அமைந்துள்ளது.
மாஸ்தி | |
---|---|
சிற்றூர் | |
Country | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | கோலார் |
வட்டம் | மாலூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 6,409 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மக்கள்தொகையியல்
தொகு2001 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி, மஸ்தியின் மக்கள் தொலை 6,409 ஆகும். இதில் 3,276 ஆண்களும் 3,133 பெண்களும் அடங்குவர்.[1]
வரலாறு
தொகுஇப்பகுதி பண்டைக் காலத்தில் மாசந்தி நாடு என்று அழைக்கப்பட்டது. இதுவே பிறகு மாஸ்தி என்று மருவியது என்று கூறப்படுகிறது.[3] மாஸ்தின் ஆரம்பகால வரலாறு தெரியவில்லை என்றாலும், மைசூரில் ஆங்கிலேயர் நுழைந்து தங்கள் புதிய ஆட்சி முறையை அறிமுகப்படுத்தப்படும் வரை இந்த இடம் "மஹா ஹஸ்தி" (பஹ்-லே-காரா) (குட்டி தலைவர்கள்) என்பவர்களால் ஆளப்பட்டது என்று அறியப்படுகிறது. மாஸ்தியில் 1900 களின் மத்தியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பிராமண மக்கள் வசித்து வந்தனர். ஆனால் இன்று அவர்களில் பலர் இடம்பெயர்ந்து விட்டனர்.
கன்னட எழுத்தாளரான மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் மாஸ்தியைச் சேர்ந்தவர். மாஸ்தி கிராமத்தில் உள்ள இவரது வீடு நூலகமாக மாற்றப்பட்டு, கர்நாடக அரசால் பராமரிக்கப்படுகிறது.[4] அங்கு ‘மாஸ்தி உறைவிடப் பள்ளி’ என்ற பள்ளியை கர்நாடக அரசு 2006-ல் தொடங்கியது.[5]
மேலும் பார்க்கவும்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Village code= 1945100 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
- ↑ "Yahoomaps India :". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Masthi, Kolar, Karnataka
- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 125.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "Jnanpith writer Masti's house made into a library". Deccan Herald. 16 October 2011. http://www.deccanherald.com/content/30842/content/215869/F. பார்த்த நாள்: 3 October 2013.
- ↑ "Masti school bereft of building, staff". Deccan Herald. 28 May 2010. http://www.deccanherald.com/content/72193/masti-school-bereft-building-staff.html. பார்த்த நாள்: 3 October 2013.