மாகே மாவட்டம்

புதுச்சேரியின் ஒரு மாவட்டம்
(மாஹே மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாகே மாவட்டம் (Mahé district) என்பது புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திற்கு உட்பட்ட நான்கு மாவட்டங்களில் ஒன்று. இது மாஹே நகரம் முழுவதையும் உள்ளடக்கியது. இதன் பரப்பளவு, 8.69 சதுர கிலோமீட்டர்கள் (3.36 sq mi) ஆகும்.[1][2] இது மலபார் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் மலையாளம் பேசுகின்றனர்.அழியூர் என்னும் கிராமத்தின் பகுதியாக இருந்தது மய்யழி. அழி என்றால் கடலும் புழையும் சேரும் இடம் என்று பொருள். மய்யம் என்றால் நடுவில் என்றொரு பொருளும் உண்டு. அழியூருக்கும் மற்றொரு ஊருக்கும் நடுவில் இருப்பதால் "மய்யழி" என்ற பெயரைப் பெற்றது எனவும் கூறுவர். பிரஞ்சுக்காரர் இந்நகரைக் கைப்பற்றியதிலிருந்து இது மாகே என்று அழைக்கப்படுகிறது.

வரலாறு தொகு

பிரஞ்சுக்காரர்களின் வருகைக்கு முன்பு இம்மாவட்டம் குறித்த ஆவணங்கள் இல்லை. அவர்களின் வருகைக்குப் பின்னர் தான் இம்மாவட்டம், அவர்கள் உருவாக்கிய வரைப்படத்தில் தான், முதன்முதல் இடம் பெற்றுள்ளது.[3] மகேயில் பிரெஞ்சு வரலாறு, 1721 இல் தொடங்கியது. ஆங்கிலேயர் தமது ஆட்சியை மேற்கு கடற்கரையில் நிறுவியபோது, பிரெஞ்சுக்காரர்கள் மாகே(மாஹே)யில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கினர். கேரளாவில் அவர்களின் முதல் இடம் தலசேரி ஆகும். ஆனால், பின்னர் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான, பாதுகாப்பான தலைமையகமாக மகேவைத் தேர்ந்தெடுத்தனர். அந்த காலகட்டத்தில் மாகே, வடகாரா வஜுன்னூர் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர் ‘கடத்தநாடு மன்னரால்’ அறியப்பட்டார். மேலும், ஏழாம் நூற்றாண்டு வரை, ‘கோலதிரி’ கட்டுப்பாட்டில் இருந்தார். சிலரின் ஆதரவோடு, 1670 ஆம் ஆண்டில் பிரெஞ்சுக்காரர்கள் தலசேரியில்,கோட்டையைக் கட்டினர். உள்ளூர் ஆட்சியாளர்களின் ஆதரவைக் கொண்டிருந்தாலும், அவர்களால் கிழக்கிந்திய கம்பெனி மீது போராட முடியவில்லை. பின்னர் 1702 இல், அவர்கள் புன்னூலில் சரக்குக் கிடங்கினைக் கட்டினார்கள். புன்னூலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, 1721 இல் அவர்கள் மாகேயில் இடம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. செங் லூயி கப்பலைக் கொண்டு, மகேவை அடைந்த பிரெஞ்சு பிரதிநிதி மல்லாந்தனை, அப்போதைய ஆட்சியாளர் “வடகாரா வாழுன்னோர்” வரவேற்றார். மேலும் அவர்கள் 1739 ஆம் ஆண்டில் செருக்கலையில், செயின்ட் ஜார்ஜ் என்ற பெயரில் முதல் கோட்டையை கட்டினர். அவருடைய அனுமதியுடன் தான், அந்த சரக்குக் கிடங்குக் கட்டப்பட்டது. 1769 ஆம் ஆண்டில், அவர்கள் "கோட்டை மாகே" என்ற பெயரில், மற்றொரு பெரிய கோட்டையைக் கட்டினர். இந்த கோட்டையானாது, ஆங்கிலயருடன் நடந்த போரின் போது அழிக்கப்பட்டது. இந்த கோட்டையின் எச்சங்கள் இன்னும் “மல்யம்மெல் பரம்பு” இல் காணப்படுகின்றன. மகேயில் டுஃபான், காந்தே கோட்டைகளை கட்டினார்கள். 1761 ஆம் ஆண்டு பிரெஞ்சு-ஆங்கிலப் போரின் தாக்கத்தின் காரணமாக, அப்போதைய ஆங்கிலேயத் தளபதி தாமஸ் ஹாட்ஜ், பிரெஞ்சுக்காரர்களை சரணடையுமாறு கோரினார். அதனை பிரெஞ்சுக்காரர்கள் சில விதிமுறைகளுடன், நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டார். பாரிஸ் அமைதி ஒப்பந்தத்தை, 1763 அமல்படுத்தியதன் மூலம், பிரெஞ்சுக்காரர்கள் மகேவைத் தக்க வைத்துக் கொண்டனர். ஆனால் 1779 இல், ஆங்கிலேயர், மீண்டும் பிரெஞ்சு மஹேவைக் கைப்பற்றினார். 1817 ஆம் ஆண்டில் பிரெஞ்சுக்காரர்கள், மீண்டும் மகேயைக் கைப்பற்றினர். அந்த நேரத்தில், முழு மலபார் பிராந்தியமும், ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்தது, எனவே, பிரெஞ்சுக்காரர்கள் மகேயை, சில வரம்புகளுடன் ஆட்சி செய்ய கட்டாயப்படுத்தப் பட்டனர்.

அரசியல் தொகு

இது புதுச்சேரி சட்டமன்றத்துக்கு மாகி சட்டமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியப் பாராளுமன்றத் தேர்தலுக்கு புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.[4] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[4]

நிருவாகம் தொகு

இம்மாவட்டத்தில் ஐந்து வருவாய் வட்டங்கள் உள்ளன. அவை மாகே, சாலக்கரை, பந்தக்கல், பள்ளூர், செறுகல்லாயி என்பன ஆகும். அதனுள் வார்டுகளும் உள்ளன. அவ்வார்டுகளே, இங்கு ஊர்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

காளியாறு தொகு

கேரளத்தின்| நான்காவது நீளமான ஆற்றின் பெயர், காளியாறு ஆகும். இந்த ஆறானது 169 கி. மீ. நீளமானது. இது கடலை அண்மிக்கும் போது, சுலிகா ஆறு என்றும் பேப்பூர் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.

சான்றுகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகே_மாவட்டம்&oldid=3567039" இருந்து மீள்விக்கப்பட்டது