மிகை மேய்தல்

மீண்டு வளர்வதற்கு நேரம் அளிக்கப்படாமல், தாவரங்கள் கால்நடைகளால் நீண்ட நேரங்களுக்கு மேயப்படும் போது, மிகை மேய்தலானது நடக்கிறது.[1] செறிநிலை வேளாண்மை கடைப்பிடிக்கப்படாத போதும் கால்நடைகளை ஒழுங்காக கட்டுப்படுத்தாத போதும் மிகை மேயப்படுகிறது. மிகை மேய்ச்சலால் முதன்மை உற்பத்தி குறையும். உயிரியற் பல்வகைமை பாதிக்கப்படும். பாலைவனமாதல் நிகழ்வதற்கும் மண்ணரிப்பு ஏற்படுவதற்கும் மிகை மேய்ச்சல் காரணியாகக் கருதப்படுகிறது.[2][3]

ஆத்திரேலியாவின் மிகை மேய்ப்புக்கு உள்ளான நியூ சௌத் வேல்சு பகுதி) தரிசாகி இருக்கிறது
இசுரேல் மற்றும் எகிப்துக்கு இடையிலான எல்லைக் கோட்டின் செயற்க்கைக்கோள் புகைப்படம். இடதுபுறம் உள்ள எகிப்திய நிலம் மிகையாக மேயப்பட்டிருக்கிறது

மிகைமேய்ச்சல் தற்காப்பு தொகு

மனிதனால் நிகழ்த்தப்படும் மிகைமேயப்பைத் தடுத்தல்
மிகைமேய்ப்புக்கு உள்ளான இடத்தில் இருக்கும் ஆட்டுக் கொட்டகை
இடம்பெயர்ந்து நிலம் மேயும் காட்டெருதுக் கூட்டம்

பேண்தகு விவசாயம் புல்தரை பராமரிப்பு, கால்நடை பராமரிப்பு மற்றும் மேய்த்தல் அளவீடு உள்ளிட்டவையை அடிப்படையாகக் கொண்டது. இதைக் கடைப்பிடிப்பதின் மூலமும் நிலைகொள் வேளாண்மை பயிற்சிகளை மேற்கொள்வதும் மூலமும் மிகை மேய்ச்சலை தடுக்க முடியும். [4]

மிகைமேய்ப்புக்கான அறிகுறிகள் தொகு

ஒரு நிலம் அதிகமாக மேயப்படுகிறதா என்றறிய ஒரு சில அறிகுறிகள் உள்ளன. முக்கியமான அறிகுறி கால்நடைகளுக்கு உணவின்மை. தொடர்ச்சியான மேய்ச்சல் குட்டைப் புற்கள் வளர வழிவகுத்துவிடும். இவை இரண்டு அல்லது மூன்று அங்குலங்கள் தானிருக்கும். மிகை மேய்ப்புக்கு உள்ளாகாத பகுதிகளில் ஒரு மீட்டருக்கும் உயரமான புற்களை பார்க்க முடியும். கால்நடைகளை மேய விடும் போது, ஓரு மேய்ச்சலுக்கும் அடுத்த மேய்ச்சலுக்கும் புற்கள் வளரும் வரை இடைவெளி விடவேண்டும். இதன்மூலம் மிகைமேய்ச்சலைத் தவிர்க்கலாம்.[5]

சூழலியல் சீர்கேடுகள் தொகு

மிகைமேய்ச்சல் மண்ணரிப்பை அதிகரிக்கும். மண்வளத்தையும் கணிசமாக குறைக்கும். கால்நடைகள் நடத்தல் மண்ணின் இறுக்கத்தை குறைத்து விடுவதால், நிலச்சரிவு நிகழ்வதற்கும் மிகை மேய்ச்சல் ஒரு காரணியாக அமைகிறது. தாவரங்களும் மிகை மேய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. [6]

மேற்கோள் தொகு

  1. Mysterud, Atle (2006). "The concept of overgrazing and its role in management of large herbivores" (in en). Wildlife Biology 12 (2): 129–141. doi:10.2981/0909-6396(2006)12[129:TCOOAI]2.0.CO;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0909-6396. 
  2. Laduke, Winona (1999). All Our Relations: Native Struggles for Land and Life. Cambridge, MA: South End Press. பக். 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0896085996. https://archive.org/details/allourrelationsn00ladu. பார்த்த நாள்: 30 March 2015. 
  3. Duval, Clay. "Bison Conservation: Saving an Ecologically and Culturally Keystone Species" (PDF). Duke University. Archived from the original (PDF) on March 8, 2012. பார்க்கப்பட்ட நாள் April 13, 2015.
  4. Savory, Allan. "How to green the world's deserts and reverse climate change". youtube.com. TED. பார்க்கப்பட்ட நாள் 14 September 2015.
  5. Savory, Allan. "Can sheep save the planet?". youtube.com. IWTOCHANNEL. பார்க்கப்பட்ட நாள் 14 September 2015.
  6. C.Michael Hogan. 2009. Overgrazing பரணிடப்பட்டது 2010-07-11 at the வந்தவழி இயந்திரம். Encyclopedia of Earth. Sidney Draggan, topic ed.; Cutler J. Cleveland, ed., National council for Science and the Environment, Washington DC

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகை_மேய்தல்&oldid=3091164" இலிருந்து மீள்விக்கப்பட்டது