மிசாரி ராசித் அல்-அபாசி


மிசாரி பின் ராசித் அல்-அபாசி (Mishary Bin Rashid Alafasy, அரபு மொழி: الشيخ مشاري بن راشد العفاسي‎; பிறப்பு: 5 செப்டம்பர் 1976) என்பவர் குவைத் நாட்டைச் சேர்ந்த ஒரு இசுலாமியப் பாடகர், இமாம், மற்றும் அறவுரையாளர் ஆவார்.[1] இவர் 1992-1994ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இரண்டு வருடங்களுள் குர்ஆனை மனனமிட்டவராவார். மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் அல்- குர்ஆன் கற்கைகள் பீடத்தில் பயின்று அல்- குர்ஆன் ஓதல் முறைமைக்கான 10 அறிவிப்புக்களிலும் விஷேட கற்கையைப் பூர்த்தி செய்தார். முதன் முறையாக ஹி 1416ம் ஆண்டு " அல்- ஹாபிர், புஸ்ஸிலத், அல்- ஷூரா " என்ற மூன்று அத்தியாயங்களை உள்ளடக்கிய அவரது குர்ஆன்ஓதல் வெளியிடப்பட்டது. முதன் முறையாக ஹி 1420ம் ஆண்டு குவைத்தின் அல்- மஸ்ஜித் அல்- கபீர் எனப்படும் பள்ளிவாயலில் ரமழான் இறுதிப் பத்தில் மக்களுக்கு தொழுகை நடத்தினார்.

மிசாரி ராசித் அல்-அபாசி
Mishary Rashid Alafasy
பிறப்புமிஷாரி இப்னு ராஷித் இப்னி கரீப் இப்னி முஹம்மத் இப்னி ராஷித் அல்- அபாஸி
செப்டம்பர் 5, 1976 (1976-09-05) (அகவை 47)
குவைத் நகரம், குவைத்
இருப்பிடம்குவைத் நகரம், குவைத்
மற்ற பெயர்கள்அபூ நூர்
பணிகுவைத் அல்-மஸ்ஜித் அல்-கபீர் பள்ளிவாயலின் இமாம், குவைத் அவ்காப், இசுலாமிய அலுவல்கள் அமைச்சின் கதீப்
அறியப்படுவதுஇசுலாமியப் பாடகர், காரி
பிள்ளைகள்2 ஆண்கள், 3 பெண்கள்
வலைத்தளம்
www.alafasy.me

மேற்கொண்டுள்ள பணிகள் தொகு

குர்ஆன் தொகு

  • அல்- அபாஸி அலைவரிசைக்கூடாக பத்து விதமான குர்ஆன் ஒதல் முறைமைகளையும் மக்கள் மயப்படுத்தப்பட்ட பெரும் முயற்சி எடுக்கின்றார்கள்.
  • மத்னுஷ் ஷாதிபிய்யஹ், மத்னுத் துர்ரஹ், அல்- துஹ்பா அல்- ஸமன்னூதிய்யஹ் போன்ற முக்கிய கிராஅத் மற்றும் தஜ்வீத் சட்டங்களுடன் தொடர்புடைய சிறிய நூல்களின் ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
  • ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் குர்ஆன் தொடர்பான போட்டிகளில் நடுவராகப் பங்குகொண்டார்.
  • ரத்தில் மஅல் அபாஸி, கலௌனா மஆஹு போன்ற சில குர்ஆன் கற்பித்தல் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துகின்றார்.
  • அல்- குர்ஆன் ஓதற்கலை தொடர்பான பல கருத்தரங்குகளையும் உரைகளையும் ஆற்றியுள்ளார்.
  • அல்- அபாஸி வக்பு திட்டம், ஹாபிழ்களை உருவாக்கும் திட்டம், அல்- குர்ஆன் கற்கைகளுக்கான பிரித்தானிய அகாதமி போன்ற திட்டங்களைத் தீட்டி கண்காணிப்புச் செய்கின்றார்.

இஸ்லாமிய பாடல் துறை தொகு

  • முதன் முறையாக 2013ம் ஆண்டு " அயா மய் யத்தஇல் பஹ்ம " என்ற வரிகளைக்கொண்ட ஒரு பாடலை வெளியிட்டார். அப்பாடல் மக்கள் மன்றத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுவே இஸ்லாமிய பாடல் துறையில் இவர் பணிக்காக வித்தாகவும் இருந்தது எனலாம்.
  • அதன் தொடரில் " உயூனுல் அபாஈ " எனும் ஆல்பம் ஒன்றை முதற் தடவையாக வெளியிட்டார்.

இதற்கெல்லாம் முன்பாக 2002, 2003, 2006ம் ஆண்டுகளில் தஜ்வீத் நூல்களை கவிகளாகப் பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள் தொகு

  1. "Sheikh Mishary leads over 60,000 worshippers". Emirates 247 News. Emirates 247 News. 14 April 2012. http://www.emirates247.com/news/emirates/sheikh-mishary-leads-over-60-000-worshippers-2012-04-14-1.453774. பார்த்த நாள்: 30 March 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசாரி_ராசித்_அல்-அபாசி&oldid=3860038" இலிருந்து மீள்விக்கப்பட்டது