மிடல் ரோக் தீவு
மிடல் ரோக் தீவு அல்லது மிடல் ரோக்ஸ் (மலாய்: Batuan Tengah; ஆங்கிலம்:Middle Rocks; சாவி: باتون تڠه ; சீனம்: 中岩礁; பின்யின்: Zhōngyánjiāo) என்பது மலேசியா, ஜொகூர், தென் சீனக் கடலின், சிங்கப்பூர் நீரிணையில் உள்ள ஒரு தீவு. 250 மீட்டர் (820 அடி) திறந்தவெளி நீரால் பிரிக்கப்பட்ட இரண்டு பாறைகளைக் கொண்ட நிலவியல் அமைப்பு.
புவியியல் | |
---|---|
அமைவிடம் | சிங்கப்பூர் நீரிணை, தென் சீனக் கடல் ஜொகூர் மலேசியா தென் கிழக்கு ஆசியா |
ஆள்கூறுகள் | 1°19′17″N 104°24′32″E / 1.32139°N 104.40889°E |
தீவுக்கூட்டம் | தீபகற்ப மலேசியா; மலேசியா |
மொத்தத் தீவுகள் | 1 |
நிர்வாகம் | |
இந்தப் பாறைத் தீவுகள், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே சர்ச்சைக்குரிய பிரதேசமாக உள்ளது. அந்தச் சர்ச்சை (பெத்ரா பிராங்கா சர்ச்சை (Pedra Branca Dispute) என அழைக்கப்படுகிறது. 23 மே 2008 அன்று, அனைத்துலக நீதிமன்றம்; ஒன்றுக்கு 15 வாக்குகள் வேறுபாட்டில் மிடல் ராக்ஸ் தீவின் மீதான இறையாண்மை மலேசியாவிற்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியது.
புவியியல்
தொகுமலேசியாவின் ஜொகூர் மாநிலத்தின் தென்கிழக்கில் 8.0 கடல் மைல்கள் (14.8 கிமீ; 9.2 மைல்) தொலைவிலும்; மற்றும் பெத்ரா பிராங்காவிற்கு தெற்கே 0.6 கடல் மைல்கள் (1.1 கிமீ; 0.69 மைல்) தொலைவிலும்; கடல் மட்டத்திலிருந்து 1.0 மீட்டர் (3.3 அடி) உயரத்திலும் மிடல் ரோக் தீவு உள்ளது.[1]
இறையாண்மை சர்ச்சை
தொகுபெத்ரா பிராங்கா; மற்றும் சவுத் லெட்ஜ் என அழைக்கப்படும் மற்றொரு பாறை விளிம்பு; மற்றும் மிடல் ரோக் தீவு ஆகியவை மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே பெத்ரா பிராங்கா சர்ச்சைக்கு உட்பட்ட பிரதேசங்கள் ஆகும்.
மிடல் ரோக் தீவு மற்றும் சவுத் லெட்ஜ் பாறை விளிம்பு; இரண்டு தீவுகளையும் 1993-இல் சிங்கப்பூர் உரிமை கொண்டாடியபோது பெத்ரா பிராங்கா சர்ச்சை எழுந்தது.[2]
2008-ஆம் ஆண்டு அனைத்துலக நீதிமன்றத்தால் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டது. மிடல் ரோக் தீவு மலேசியாவுக்கும், பெத்ரா பிராங்கா தீவு சிங்கப்பூருக்கும் சொந்தமானவை என்று அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[3] இருப்பினும் சவுத் லெட்ஜ் பாறை விளிம்பு பிரச்சினை இதுவரையிலும் தீர்க்கப்படாமல் உள்ளது.[4][5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ V. Anbalagan (25 May 2008). "Pulau Batu Puteh decision: Fishermen can access Middle Rocks". New Straits Times. AsiaOne. பார்க்கப்பட்ட நாள் 22 June 2018.
- ↑ "Malaysia files new application to ICJ on Pedra Branca ruling; Singapore says it's 'without merit'". Channel NewsAsia. 1 July 2017. Archived from the original on 1 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 22 June 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Coalter G. Lathrop (2008). "Sovereignty over Pedra Branca/Pulau Batu Puteh, Middle Rocks and South Ledge". The American Journal of International Law 102 (4): 828–834. doi:10.2307/20456682. https://scholarship.law.duke.edu/faculty_scholarship/1910.
- ↑ "Court leaves sovereignty over South Ledge open". New Straits Times. AsiaOne. 24 May 2008. பார்க்கப்பட்ட நாள் 21 May 2014.
- ↑ "Malaysia inaugurates new maritime base on Middle Rocks, near Pedra Branca". Today Online. The Malay Mail. 5 August 2017. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.
- ↑ "Malaysia deploys first warship to maritime base near Pedra Branca". Today Online. 11 August 2017. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
மேலும் காண்க
தொகுமேலும் படிக்க
தொகு- "Malaysians can now go fishing off Middle Rocks". The Star. 24 May 2008. Archived from the original on 28 June 2011.
- "Don't go to Middle Rocks yet, police warn Malaysians". AsiaOne. 25 May 2008. Archived from the original on 28 May 2008.