மிட்சுபிசி தானுந்துகள்

தானுந்து உற்பத்தி நிறுவனம்

மிட்சுபிசி மோட்டார்சு கார்ப்பொரேசன் (Mitsubishi Motors Corporation Mitsubishi Jidōsha Kōgyō, Kabushiki gaisha?, [2]) யப்பானின் ஐந்தாவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராகவும் உலகளாவிய தானுந்து உற்பத்தியில் உலகில் ஆறாவதாகவும் விளங்குகிற பன்னாட்டு தானுந்து உற்பத்தி நிறுவனம்.[3]. முந்நாளைய யப்பானின் மிகப்பெரும் தொழிற் குழுமமாகிய மிட்சுபிசி (keiretsu)வின் அங்கமாக அதன் மிட்சுபிசி கனரக தொழிலகத்தின் பிரிவாக 1970ஆம் ஆண்டு நிறுவப்பட்டது[4]. இதன் தலைமையகம் டோக்கியோவின் புறநகர்ப்பகுதி மினாடோவில் அமைந்துள்ளது.[5]. உலகில் 17 வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக உள்ளது.

மிட்சுபிசி மோட்டார்சு கார்பொரேசன்
Mitsubishi Motors Corporation
வகைபொது
நிறுவுகைஏப்ரல் 22, 1970
தலைமையகம்33-8, ஷிபா 5-சோம், மினாடோடோக்கியோ 108-8410 யப்பான்
முதன்மை நபர்கள்டாகஷி நிஷியோகா (மேலாண்குழுத் தலைவர்)
ஒசாமு மாசுகோ (தலைவர்)
ஹெகி காசுகை (செயல் உதவித்தலைவர்)
தொழில்துறைதானுந்து தயாரிப்பாளர்
உற்பத்திகள்தானுந்துகள் மற்றும் இலகு சுமையுந்துகள்
வருமானம்¥1,445,616 மில்லியன் (2009)[1]
நிகர வருமானம்¥4,758 மில்லியன் (2009)[1]
பணியாளர்33,202 (2007)
இணையத்தளம்மிட்சுபிசி தானுந்துகள் வலைத்தளம்

இந்தியாவில் இயக்கம்

தொகு

தனது உலகளாவிய விரிவாக்கத் திட்டத்தின்படி 1998ஆம் ஆண்டு மிட்சுபிசி இந்தியாவில் தனது செயலாக்கத்தைத் துவக்கியது. இந்துசுதான் மோட்டார்சின் தொழில்நுட்ப இணைவாக்கத்துடன் சென்னையில் ஓர் தொழிற்சாலையை ஏற்படுத்தி உள்ளது. இங்கு தற்போது ஆண்டுக்கு 6,000 சீருந்துகள் தயாரிக்கும் திறன் உள்ளது; இதனை அடுத்த சில ஆண்டுகளில் ஆண்டுக்கு 24,000 சீருந்துகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இங்கு உருவாக்கப்படும் சீருந்து வகைகள்:

  • லான்சர் - 6வது தலைமுறை மிட்சுபிசி லான்சர்
  • லான்சர் சீடியா - 7வது தலைமுறை மிட்சுபிசி லான்சர்
  • பெஜேரோ* - 2வது தலைமுறை மிட்சுபிசி பெஜேரோ
  • மோன்டெரோ* - 3வது தலைமுறை மிட்சுபிசி பெஜேரோ
  • அவுட்லாண்டர்*

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்சுபிசி_தானுந்துகள்&oldid=3707091" இலிருந்து மீள்விக்கப்பட்டது