மித்ரநந்தபுரம் மும்மூர்த்தி கோயில்
மித்ரநந்தபுரம் மும்மூர்த்தி கோயில் (Mithrananthapuram Trimurti Temple) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. கேரளாவில் இந்த ஒரு கோயில் மட்டுமே சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களையும் ஒரே கோயிலுள் கொண்டுள்ளது. இக்கோயிலானது திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ளது.
மித்ரநந்தபுரம் மும்மூர்த்தி கோயில் | |
---|---|
கேரளாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: | 8°28′57″N 76°56′24″E / 8.48250°N 76.94000°E |
பெயர் | |
பெயர்: | மித்ரநந்தபுரம் மும்மூர்த்தி கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | திருவனந்தபுரம் |
அமைவு: | மேற்குக் கோட்டை |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை (கோயில்) |
தெய்வங்கள்
தொகுஇக்கோயிலினுள் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய சிலைகள் உள்ளன. மேலும் விநாயகர் மற்றும் நாகராஜா கடவுள் சிலைகளும் உள்ளன. கடவுள் பிரம்மனின் சிலை உட்கார்ந்த விதத்திலும், கடவுள் விஷ்ணுவின் சிலை நின்றவாக்கிலும் அமைக்கப்பட்டுள்ளது. எல்லாக் கடவுள் சிலைகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.[1]
வரலாறு
தொகுஇக்கோயிலின் மூலத்தைப் பற்றிய எந்தவித ஆதாரபூர்வத் தகவல்களும் இல்லை. முன்பு இக்கோயிலானது திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது..[2] முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் திருவாங்கூர் அரசர்கள் இக்கோயிலில் வழிபாடு செய்துள்ளனர்.[2] சுயநந்துர புராணத்தின் படி இக்கோயிலானது பொது வருடம் 1168 (C.E 1168 அல்லது பொ.ஊ 1168) கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறது. வரலாற்று ஆவணங்களின் படி இக்கோயில் பொ.ஊ 1196-ல் புதுப்பிக்கப்பட்டது. மீண்டும் இக்கோயிலானது பொ.ஊ 1748-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவர்களால் புதுப்பிக்கப்பட்டது.[2] இப்போது இக்கோயிலானது திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்திடம் இருக்கிறது. முன்பு இக்கோயிலின் பராமரிப்பை திருவாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்கள் இணைந்து செய்தன.[3]
திருவிழாக்கள்
தொகுஇக்கோயிலில் மகாசிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sreejith N. "Mithrananthapuram Thrimoorthy". Kerala Temples. Retrieved 2012-12-04.
- ↑ 2.0 2.1 2.2 "Welcome to Kerala window". Keralawindow.net. Retrieved 2013-05-09.
- ↑ "Welcome to Kerala window". Keralawindow.net. Retrieved 2012-12-04.