மினர்வாரியா கீர்த்திசிங்கேய்
மினர்வாரியா கீர்த்திசிங்கேய் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | மி. கீர்த்திசிங்கேய்
|
இருசொற் பெயரீடு | |
மினர்வராயா கீர்த்திசிங்கேய் (மானமெந்திரா-அராச்சி & காபாடேக, 1996) | |
இலங்கையில் பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
லிம்னோனெக்டசு கீர்த்திசிங்கேய் மானமெந்திரா -அராச்சி & காபாடேக, 1996 |
மினர்வாரியா கீர்த்திசிங்கேய் (Minervarya kirtisinghei) என்பது டைக்ரோக்ளோசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இங்கு இது தென்-மத்திய மலைப்பகுதியிலிருந்து தென்மேற்கு தாழ் நிலப் பகுதிகளில் காணப்படுகிறது.[2]
மினர்வாரியா கீர்த்த்சிங்கேய் ஒரு பொதுவான தவளைச் சிற்றினம். இவை வெப்பமண்டலக் காடுகள், புல்வெளிகள், புல்வெளிகள் மற்றும் ஈரநிலங்கள், மலைப்பாங்கான மற்றும் தாழ் நிலப் பகுதிகள், ரப்பர் மற்றும் பனை எண்ணெய் தோட்டங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் போன்ற சில மனிதனால் உருவாக்கப்பட்ட வாழ்விடங்களிலும் காணப்படுகின்றன. முதிர்ச்சியடைந்த தவளை பகுதி நீர்வாழ் உயிரினங்களாகும்; இவற்றின் இளம் உயிரிகள் நீர்வாழ்வன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Manamendra-Arachchi, K.; de Silva, A. (2016). "Fejervarya kirtisinghei". IUCN Red List of Threatened Species 2016: e.T58274A91233634. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T58274A91233634.en. https://www.iucnredlist.org/species/58274/91233634.
- ↑ Frost, Darrel R. (2014). "Zakerana kirtisinghei (Manamendra-Arachchi and Gabadage, 1996)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 12 February 2014.