மினா (அலகு)
மினா அல்லது மேனே (mina அல்லது mĕnē, அராமைக் ; எபிரேயம்: מָנֶה ) [a] என்பது பண்டைய அண்மைக் கிழக்கின் ஒரு எடை அலகு ஆகும். இது 60 ஷெக்கல்கள்கள் கொண்டது. ஷேக்கலைப் போலவே மினாவும் நாணய அலகாகவும் இருந்தது.
வரலாறு
தொகுமினா என்ற சொல் பண்டைய செமிடிக் மூலமான m-n-w / m-n-y 'to count' என்பதிலிருந்து வந்தது.[1] அக்காடியன் manû ,[2] எபிரேயம்: מָנָה ( mana ), அராமைக் / מְנָא ( mana / mena ) [3] செவ்வியல் சிரியக் ܡܢܳܐ ( mena ),[4] உகாரிடிக் 𐎎𐎐 ரோமானியம்: mn. என பல்வேறு மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் சாலமன் 300 கேடயங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது, ஒவ்வொரு கேடயமும் 3 "மைனா" தங்கம் ( எபிரேயம்: מָנֶה ) செலவில் செய்யப்பட்டது,[5] அடுத்து பாரசீகத்தின் இரண்டாம் சைரசு ஆணைக்குப் பிறகு, எருசலேமில் உள்ள சாலமோனின் கோவில் புனரமைப்புக்காக மக்கள் 5000 மினா வெள்ளியை நன்கொடையாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.[6]
ஆரம்பகால சுமேரியர்கள் காலத்திலிருந்தே, மினா என்பது ஒரு எடை அலகாக இருந்துள்ளது. அப்போது, தாலத்துகள், ஷெக்கல்கள் போன்றவை அறிமுகமாகவில்லை. ஊர்-நம்மு காலத்தில் (கிமு 2000க்கு சற்று முன்பு), மினாவின் மதிப்பு1⁄60 60 சேக்கல்கள். இந்த மினாவின் எடை 1.25 pounds (0.57 kg) என கணக்கிடப்படுகிறது.[7][8]
உகாரித்தில் கிடைத்த எழுத்துக்கள் ஒரு மினாவின் மதிப்பை ஐம்பது சேக்கல்களுக்குச் சமமாகக் குறிப்பிடுகின்றன.[9] எசேக்கியேல் தீர்க்கதரிசியின் நூலான எசேக்கியோல் 45:12 இல் ஒரு மினாவை ( கிங் ஜேம்ஸ் பதிப்பில் உள்ள மனேஹ் ) 60 ஷெக்கல்கள் என்றும் குறிப்பிடுகிறது. நாசரேத்தின் இயேசு லூக்கா 19:11-27 வில் "மினாசின் உவமை "யைச் சொல்கிறார். மேலும் மத்தேயுவில் எடையின் தாலத்து அலகுடன் கூறுகிறார். யூதர்களின் பயன்பாட்டில், மினாவின் எடை 100 டெனாரிக்கு சமம்.
அக்காடியன் காலத்திலிருந்து, 2 மினா என்பது 1 சிலா நீருக்கு சமமாக இருந்தது (cf. clepsydra, நீர் கடிகாரம்).
பண்டைய கிரேக்கத்தில், இது முதலில் 70 டிராக்மேக்கு சமமாக இருந்தது, பின்னர் 100 டிராக்மேகளாக அதிகரிக்கப்பட்டது.[10] கிரேக்கச் சொல்லான mna ( μνᾶ ) செமிட்டிக்கிலிருந்து கடன் பெறப்பட்டது; இதனுடன் எபிரேய māneh , அராமிக் mĕnē , சிரியாக் manyā , mn , அக்காடியன் manū ஆகியவற்றை ஒப்பிடலாம்.
கிரேக்க மினா
தொகுஏஜினெட்டன் மினா 623.7 கிராம் எடை கொண்டது .
அட்டிக் மினா 436.6 கிராம் எடை கொண்டது .
பொருட்களை வாங்கும் மதிப்பு
தொகு- பிளாட்டசின் சூடோலஸில் (கிமு 191) ஒரு அடிமையின் விலை 20 மினா; 1912 இல் எழுதப்பட்ட வர்ணனையாளரின் கூற்றுப்படி, "சுமார் US$18.05 அல்லது £3 14s. 4d." [11] 1912 இல் US$18.05 என்பது 2021 இல் $507 க்கு சமமாக இருக்கும். [17]
- கி.பி முதல் நூற்றாண்டில் [கிரீஸில்?], இது ஒரு வேளாண் தொழிலாளி ஆண்டுதோறும் சம்பாதிக்கும் ஊதியத்தில் நான்கில் ஒரு பங்காக இது இருந்தது.[ மேற்கோள் தேவை ]
படங்கள்
தொகு-
ஏதென்சின் மினா.
-
சியோசின் மினா.
-
அந்தியோகஸ் நான்காம் எபிபேன்சின் மினா.
-
அந்தியோக்கியாவின் மினா.
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "mina", The American Heritage Dictionary of the English Language
- ↑ "manû", Akkadian Dictionary, Association Assyrophile de France
- ↑ Jastrow, Marcus (1903), Dictionary of the Targumim, Talmud Bavli, Talmud Yerushalmi and Midrashic Literature, London, W.C.: Luzac & Co. ; New York: G. P. Putnam's Sons
{{citation}}
: Unknown parameter|trans_title=
ignored (help) - ↑ "Search Entry", Sureth dictionary, Association Assyrophile de France
{{citation}}
: Unknown parameter|trans_title=
ignored (help) - ↑ 1 Kings 10:17.
- ↑ Ezra 2:69.
- ↑ Edwards, Tom. "Bible Weights, Measures, and Monetary Values". SpiritRestoration.org. Archived from the original on 21 January 2012. பார்க்கப்பட்ட நாள் 28 November 2008.. Calculation of weight by number of shekels.
- ↑ "Money". Jewish Encyclopedia. (1901–1906).
- ↑ Tenney, Merril ed., The Zondervan Pictorial Encyclopedia of the Bible, vol. 5, "Weights and Measures," Grand Rapids, MI: Zondervan, 1976.
- ↑ Aristotle (unknown date). Constitution of the Athenians, 10.2.
- ↑ Perseus Project Ps.1.3