உகாரித்து (Ugarit) பண்டைய அண்மை கிழக்கின் தற்கால சிரியா நாட்டின் வடக்கில் நிலநடுக் கடற்கரையில் அமைந்த பண்டைய அண்மைக் கிழக்கு நகரங்களில் ஒன்றாகும். இது சிரியாவின் லடாக்கிய ஆளுநகரத்தின் தலைமையிடமான லடாக்கியா நகரத்தில் வெளிப்புறத்தில் உள்ளது. 1928-இல் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வு வாயிலாக உகாரித்து நகரத்தின் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. உகாரித்து நகரத்தின் தொல்லியல் எச்சங்களை ராஸ் சாம்ரா (Ras Shamra) என அழைப்பர்.[1]

உகாரித்து
உகாரித்து நகரம்
உகாரித்து அரண்மனையின் நுழைவாயில்
உகாரித்து is located in Near East
உகாரித்து
Shown within Near East#Syria
உகாரித்து is located in சிரியா
உகாரித்து
உகாரித்து (சிரியா)
மாற்றுப் பெயர்ரஸ் சாம்ரா (அரபு மொழி: رأس شمرة‎)
இருப்பிடம்லடாக்கியா ஆளுநனரகம், வடக்கு சிரியா
பகுதிபண்டைய அண்மை கிழக்கு
ஆயத்தொலைகள்35°36′07″N 35°46′55″E / 35.602°N 35.782°E / 35.602; 35.782
வகைபண்டைய நகரம்
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 6000
பயனற்றுப்போனதுகிமு 1190
காலம்புதிய கற்காலம்- பிந்தைய வெண்கலக் காலம்
கலாச்சாரம்கானானியப் பண்பாடு
நிகழ்வுகள்வெண்கலக் காலத்தின் முடிவில்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1928–தற்போது வரை
அகழாய்வாளர்கிளவுடு எப். ஏ. சப்பேர்
நிலைசிதிலமான நிலை
உரிமையாளர்பொது
பொது அனுமதிஆம்

மெசொப்பொத்தேமியாவின் இட்டைட்டுப் பேரரசுடன் உகாரித்து நகரம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. மேலும் புது எகிப்திய இராச்சியத்தின் கீழ் ஒரு சிற்றரசு இராச்சியமாக உகாரித்து விளங்கியது. மேலும் உகாரித்து நாட்டவர் நில நடுக் கடலின் தீவு நாடான சைப்ரசு நாட்டவர்களுடன் வணிக மற்றும் இராஜ தந்திர உறவுகள் பூண்டிருந்தனர் என்பதை உகாரித்து நகர தொல்லியல் அகழாய்வில் கிடைத்த கிரேக்க மற்றும் சைப்ரசு நாடுகளின் மட்பாண்டங்கள் மூலம் அறிய முடிகிறது. உகாரித்து நகரத்தின் அரசியல் கிமு 1450 முதல், இதன் அழிவுக் காலமான கிமு 1200 வரை சிறப்புடன் விளங்கியது. உகாரித்து கடற்கரை நகரத்தின் அழிவு கடற்கொள்ளையர்களால் நடந்திருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

வரலாறு தொகு

உகாரித்து எனும் ராஸ் சாம்ரா தொல்லியல் நகரம் நிலநடுக் கடலின் கிழக்கு கடற்கரையில் தற்கால சிரியா நாட்டின் வடக்கில் உள்ள லடாக்கிய நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தோற்றம் மற்றும் கிமு இரண்டாயிரம் ஆண்டு தொகு

 
உகாரித்து அரண்மனையின் சிதிலங்கள்

புதிய கற்காலத்தில் உகாரித்து கடற்கரை நகரம் துறைமுகமாவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக மையமாகவும் விளங்கியது. உகாரித்து கடற்கரை நகர இராச்சியம் கிமு 1800 முதல் கிமு 1200 முடிய, புது எகிப்து இராச்சியம், சைப்பிரசு, ஏஜியன், சிரியா, இட்டைட்டு பேரரசு போன்ற இராச்சியங்களுடன் வணிக உறவுகள் கொண்டிருந்தது.[2]

கிமு 1800-இல் எப்லா இராச்சியத்தில் கிடைத்த வரலாற்றுக் குறிப்புகள் மூலம், உகாரித்து நகரத்தைப் பற்றிய முதல் தகவல்கள் வெளிப்பட்டது. உகாரித்துப் பண்பாடு, எகிப்தின் மத்தியகால இராச்சியத்தின் தாக்கங்களுடன் கூடியது. உகாரித்து நகரத்தில் எகிப்திய பார்வோன்களின் சிலைகள் கிடைத்துள்ளது. எகிப்தின் தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட அமர்னா நிருபங்கள் மூலம் எகிப்தின் ஆட்சியாளர்களுக்கும், கானான் மற்றும் உகாரித்து நகரத்தில் இருந்த அரசப் பிரதிநிதிகளுக்குமிடையான தொடர்பாடல்கள் விளக்கப்படுகிறது.

கிமு இரண்டாயிரம் ஆண்டில் உகாரித்து நகரத்தின் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் அமோரிட்டு மக்கள் ஆவார்.[3] உகாரித்து நகர இராச்சியத்தின் பரப்பளவு 2,000 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டிருந்தது. இட்டைட்டு பேரரசுடன் உகாரித்து நகர இராச்சியத்தினர் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை எனினும், அதன் உறவுகளிலிருந்து தள்ளியும் இருக்கவில்லை.

அழிவு தொகு

Destructions at Gibala-Tell Tweini
அழிவின் போதான கிபாலா-தெவ்னி துறைமுக நகரம் மற்றும் கடல் மக்கள்[4]
சேமக் கலன்கள்[4]

வெண்கலக் காலத்தின் இறுதியில் உகாரித்து நகர இராச்சியத்தை ஆட்சி செய்த மன்னர் அம்முராபி (கிமு 1215 - கிமு 1180), இறுதி இட்டைட்டுப் பேரரசர் இரண்டாம் சுப்பிலுலிமாவின் சமகாலத்தவர் ஆவார். அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்களால் உகாரித்து நகரம் அடிக்கடி தாக்கப்பட்டது குறித்து யூதர்களின் பழைய ஏற்பாடு நூலில் குறிக்கப்பட்டது. கிமு 605-இல் புது அசிரியப் பேரரசுக்கும், பாபிலோனியர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் உகாரித்து நகரம் அழிவடைந்தது.

ஆட்சியாளர்கள் தொகு

மொழி மற்றும் இலக்கியம் தொகு

கிமு 1400 காலத்திய உகாரித்து மொழியின் 30 ஆப்பெழுத்து எழுத்துக்களைக் கொண்ட களிமண் பலகைகள் தொல்லியல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது.[6]உகாரித்து மொழி வடகிழக்கு செமித்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இக்குடும்பத்தின் வேறு மொழிகள் எபிரேயம், அரமேயம், பொனீசிய மொழிகள் ஆகும். இதன் இலக்கணம் அக்காதிய மொழியுடன் மிகவும் ஒத்துள்ளது.

 
உகாரித்து நகர தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட வஜ்ராயுதம் தாங்கிய தலைவரின் சிற்பத்தூண்

சமயம் தொகு

உகாரித்து மக்கள் கானானிய சமயங்களையும், பல தெய்வ வணக்க முறையும் கொண்டிருந்தனர்.

தொல்லியல் தொகு

 
உகாரித்து நகரத்தின் கிமு 14-13ஆம் நூற்றாண்டின் பன்றியின் பளிங்குச் சிற்பம், இலூவா அருங்காட்சியகம்

கிமு 12-ஆம் நூற்றாண்டில் உகாரித்து நகரம் அழிந்த பின்னர், 1928-இல் ஒரு விவசாயி மேட்டு நிலத்தை உழுத போது தற்செயலாக ஒரு தொல்லியல் மேட்டில் ஒருகுவிமாடத்தைக் கண்டுபிடித்தார். தொல்லியல் அறிஞர்கள் 1928-இல் இவ்விடத்தை அகழ்வாய்வு செய்தனர். அகழாய்வில் இவ்விடத்தில் சிதைந்து போன பண்டைய உகாரித்து நகரத்தின் 6,000 ஆண்டுகள் பழையான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.[7] கானான் பிரதேசத்தின் உகாரித்து நகரத்தின் தொல்லியல் மேடு 65 அடி உயரம் கொண்டது.[8]

1928-இல் லியோன் அல்போன்சா எனும் தொல்லியல் அறிஞர் உகாரித்து நகரத்தின் ராஸ் சாம்ரா தொல்லியல் மேட்டை கண்டுபிடித்தார்.[9] 1970-இல் தொல்லியல் அறிஞர் கிளவுடு சாப்பர் உகாரித்து மற்றும் ராஸ் சாம்ரா தொல்லியல் களங்களை மீண்டும் அகழாய்வு செய்தார்.[10]

 
உகாரித்து நகரத்தின் சிதிலங்கள்

அகழாய்வில் உகாரித்து நகரத்தின் 90 அறைகளுடன் கூடிய பண்டைய அரண்மனையின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது.[11] மேலும் ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டது.

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Sometimes written "Ras Shamrah"; அரபு மொழி: رأس شمرة‎, literally "Cape Fennel"). See [1].
  2. Bahn, Paul (1997). Lost Cities: 50 Discoveries in World Archaeology. London: Barnes & Noble. பக். 98–99. 
  3. Pardee, Dennis. "Ugaritic", in The Ancient Languages of Syria-Palestine and Arabia (2008) (pp. 5–6). Roger D. Woodard, editor. Cambridge University Press, ISBN 0-521-68498-6, ISBN 978-0-521-68498-9 (262 pages).
  4. 4.0 4.1 Bretschneider, Joachim; Otto, Thierry (8 June 2011). "The Sea Peoples, from Cuneiform Tablets to Carbon Dating" (in en). PLOS ONE 6 (6): 1–20. doi:10.1371/journal.pone.0020232. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட் சென்ட்ரல்:3110627. https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0020232. 
  5. Smith, Mark S. (1994). The Ugaritic Baal Cycle: Volume I, Introduction with text, translation and commentary of KTU 1.1-1.2. பக். 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004099951. 
  6. [2] பரணிடப்பட்டது 2012-10-08 at the வந்தவழி இயந்திரம் Dennis Pardee, "The Ugaritic Alphabetic Cuneiform Writing System in the Context of Other Alphabetic Systems", (in Studies in Ancient Oriental Civilization, vol. 60, pp. 181–200, Oriental Institute, 2007)
  7. Yon, Marguerite (2006). The City of Ugarit at Tell Ras Shamra. Singapore: Eisenbrauns. பக். 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57506-029-3. https://books.google.com/books?id=2YWQZ6x56dAC&lpg=PA180&pg=PA15#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 16 May 2015. 
  8. Tubb, Jonathan N. (1998), "Canaanites" (British Museum People of the Past)
  9. Léon Albanèse, "Note sur Ras Shamra", Syria, vol. 10, pp.16–21, 1929
  10. Charles Virolleaud, "Les Inscriptions Cunéiformes de Ras Shamra", Syria, vol. 10, pp. 304–310, 1929; Claude F. A. Schaeffer, The Cuneiform Texts of Ras Shamra-Ugarit, 1939
  11. Caubet, Annie. "Stela Depicting the Storm God Baal". Musée du Louvre. பார்க்கப்பட்ட நாள் 27 October 2012.

மேற்கோள்கள் தொகு

  • Ugarit Forschungen (Neukirchen-Vluyn). UF-11 (1979) honors Claude Schaeffer, with about 100 articles in 900 pages. pp 95, ff, "Comparative Graphemic Analysis of Old Babylonian and Western Akkadian", ( i.e. Ugarit and Amarna (letters), three others, Mari, OB,Royal, OB,non-Royal letters). See above, in text.
  • Bourdreuil, P. 1991. "Une bibliothèque au sud de la ville : Les textes de la 34e campagne (1973)". in Ras Shamra-Ougarit, 7 (Paris).
  • Caquot, André & Sznycer, Maurice. Ugaritic Religion. Iconography of Religions, Section XV: Mesopotamia and the Near East; Fascicle 8; Institute of Religious Iconography, State University Groningen; Leiden: E.J. Brill, 1980.
  • Drews, Robert. 1995. The End of the Bronze Age: Changes in Warfare and the Catastrophe ca. 1200 BC (Princeton University Press). ISBN 0-691-02591-6
  • de Moor, Johannes C. The Seasonal Pattern in the Ugaritic Myth of Ba'lu, According to the Version of Ilimilku. Alter Orient und Altes Testament, Band 16. Neukirchen – Vluyn: Verlag Butzon & Berker Kevelaer, Neukirchener Verlag des Erziehungsvereins, 1971
  • Gibson, J.C.L., originally edited by G.R. Driver. Canaanite Myths and Legends. Edinburgh: T. and T. Clark, Ltd., 1956, 1977.*K. Lawson and K. L. Younger Jr, "Ugarit at Seventy-Five," Eisenbrauns, 2007, ISBN 1-57506-143-0
  • L'Heureux, Conrad E. Rank Among the Canaanite Gods: El, Ba'al, and the Repha'im. Harvard Semitic Museum, Harvard Semitic Monographs No. 21, Missoula MT: Scholars Press, 1979.
  • Meletinskii, E. M., 2000 The Poetics of Myth
  • Mullen, E. Theodore, Jr. The Assembly of the Gods: The Divine Council in Canaanite and Early Hebrew Literature. Harvard Semitic Museum, Harvard Semitic Monographs No. 24, Cambridge, MA: Harvard Press, 1980/ Atlanta, GA: Scholars Press Reprint, 1986. (comparison of Ugaritic and Old Testament literature).
  • Dennis Pardee, Ritual and Cult at Ugarit, (Writings from the Ancient World), Society of Biblical Literature, 2002, ISBN 1-58983-026-1
  • William M. Schniedewind, Joel H. Hunt, 2007. A primer on Ugaritic: language, culture, and literature ISBN 0-521-87933-7 p. 14.
  • Smith, Mark S. The Ugaritic Baal Cycle: Volume 1. Introduction with Text, Translation and Commentary of KTU 1.1–1.2, (Vetus Testamentum Supplements series, volume 55; Leiden: Brill, 1994).
  • _____. The Ugaritic Baal Cycle: Volume 2. Introduction with Text, Translation and Commentary of KTU 1.3–1.4, (Vetus Testament Supplement series, volume 114; Leiden: Brill, 2008). Co-authored with Wayne Pitard.
  • Smith, Mark S., 2001. Untold Stories. The Bible and Ugaritic Studies in the Twentieth Century ISBN 1-56563-575-2 Chapter 1: "Beginnings: 1928–1945"
  • Tubb, Jonathan N. (1998), Canaanites (British Museum People of the Past).
  • Wyatt, Nicolas (1998): Religious texts from Ugarit: the worlds of Ilimilku and his colleagues, The Biblical Seminar, volume 53. Sheffield, England: Sheffield Academic Press, paperback, 500 pages.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ugarit
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உகாரித்து&oldid=3732959" இலிருந்து மீள்விக்கப்பட்டது