மின்சார விலாங்கு

வெப்ப மண்டலத்தில் வாழும் நன்னீர் மீன்வகை

மின்சார விலாங்கு என்று பரவலாக அறியப்படும் பேரினமான எலெக்ட்ரோ போரஸ் வெப்ப மண்டலத்தில் வாழும் ஒரு நன்னீர் மீன்வகை ஆகும். இது தன் இரை மீது மின்சாரம் பாய்ச்சி அதை அதிர வைக்கும் தன்மை கொண்டிருப்பதால் மின்சார விலாங்கு என்று பெயர் பெற்றது.[1]

மின்சார விலாங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
ஜிம்நோட்டிபோர்ம்ஸ்
குடும்பம்:
ஜிம்நோட்டிடே
பேரினம்:
எலெக்ட்ரோபோரஸ்

டி.என்.கில், 1864

உடலமைப்பு

தொகு
 
மின்சார விலாங்கின் உடலமைப்பு

ஒரு மின்சார விலாங்கின் வயிற்றுப் பகுதியை மூன்றாகப் பிரிக்கலாம். முதனுறுப்பு, அண்டருறுப்பு, சாக்குறுப்பு என்று அறியப்படும் இம்மூன்று உறுப்புகள் விலாங்கினுள் மின்னுற்பத்திக்கு காரணமாகின்றன. மின்பகு பொருட்களால் ஆன இம்மூன்று உறுப்புகளுள் தேவைப்படும்போது அயனிகள் அடுத்தடுத்து அடுக்கப் பெற்று மின்னழுத்த வேறுபாடு உருவாகின்றது. இந்த வேறுபாட்டினால் உயர்மின்னழுத்தம் மற்றும் குறைமின்னழுத்தம் ஒரு விலாங்கின் உடலில் சாத்தியமாகிறது.[2]

பண்புகள்

தொகு

மின்சார விலாங்குகள் ஒண்டியானவை என்று வெகுகாலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வறிக்கையின் படி, அவைகள் கூட்டமாக வேட்டையாடுவது அறியப்பட்டிருக்கிறது.[3][4]

யேல் பல்கலைக்கழக மற்றும் அமெரிக்க தொழில்நுட்ப தரவரிசை கல்வியக ஆய்வறிஞர்கள் மின்னுற்பத்தி செய்யும் மின்சார விலாங்குகளின் உயிரணுக்களை செயற்கை முறையில் நகலெடுப்பதன் மூலம் மனித உடலுக்குள் பொருத்தப்படும் நுண்மருத்துவக் கருவிகளுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க முடியுமா என்று ஆராய்ந்து வருகின்றனர்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "மீன்களின் வகைப்பாடு - ஜார்டன் டி.எஸ், ஸ்ட்டான்போர்டு பல்கலைக்கழகம்".
  2. "உயிரணுக்களில் உற்பத்தி ஆகும் மின்சாரம் - நேச்சர் நேனோடெக்".
  3. "குழுக்களாக வேட்டையாடும் மின்சார விலாங்குகள் - நியூ யார்க் டைம்ஸ்".
  4. "குழுக்களாக வேட்டையாடும் மின்சார விலாங்குகள் - பிபிசி நியூஸ்".
  5. "செயற்கை உயிரணுக்களால் மின்னுற்பத்தி - அரசாங்க வலைத்தளம்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்சார_விலாங்கு&oldid=3197582" இலிருந்து மீள்விக்கப்பட்டது