மின்பொறி விளக்கு

"மின்பொறி விளக்குகள் " (Arc lamp) அல்லது "வில் விளக்குகள்" என்பவை மின்பொறி (அல்லது மின்னழுத்த வில்) கொண்டு ஒளி உமிழும் விளக்கு வகைகளாகும். இந்த விளக்குகளில் இரு மின்வாயிகள் இடையே வளிமம் நிரப்பப்பட்டு பிரிக்கப்பட்டிருக்கும். இந்த மின்வாயிகள் துவக்க காலங்களில் கரிமத்தால் ஆனவையாக இருந்தன. தற்காலங்களில் டங்க்ஸ்டனால் செய்யப்படுகின்றன. இந்த மின்வாயிகள் மூலம் மின்னழுத்தம் கொடுக்கப்படும்போது வளிமத்தின் குறைகடத்தி பண்பு உடைபட்டு மின்பொறி பிறக்கிறது. இதன்மூலம் மின்சார ஓட்டம் நிகழ்கிறது. அடைக்கப்பட்ட வளிமத்தின் பண்புக்கேற்ப இந்த உடைதலின்போது வெவ்வேறு வண்ண ஒளி உமிழப்படுகிறது.

ஐமாக்ஸ் திரையரங்குகளில் பயன்படுத்தப்படும் 15 கிவாட் செனான் வில் விளக்கு.
ஓர் உடனொளிர் நுண்நோக்கியிலிருந்து பாதரச வில் விளக்கு.
கிரிப்டான் நீண்ட வில்விளக்கும் (மேலே) செனான் பிளாஷும். சீரொளி ஏற்றத்திற்கு பயன்படுத்தப்படும் இவற்றின் மாறுபட்ட மின்வாயிகளை, குறிப்பாக இடதுபுறமுள்ள எதிர்மின் வாயியைக் காணவும்.

இந்தவகை மின்பொறி விளக்குகள் அவற்றில் அடைக்கப்பட்டிருக்கும் வளிமத்தினால் அடையாளப் படுத்தப்படுகின்றன. இந்த வளிமங்கள்: நியான், ஆர்கான், செனான், கிரிப்டான், சோடியம், மாழை ஆலைடு, மற்றும் பாதரசம் ஆகும். கரிம வில் விளக்குகளில் மின்வாயிகளின் வகையைக் கொண்டு அழைக்கப்படுகின்றன. வழமையான உடனொளிர்வு விளக்கு குறைந்த அழுத்த பாதரச மின்பொறி விளக்காகும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Chen, Kao (1990). "Fluorescent Lamps". Industrial Power Distribution and Illuminating Systems. Electrical Engineering and Electronics. 65. New York: Dekker. பக். 350. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8247-8237-5. "The fluorescent lamp is ... activated by ... a low-pressure mercury arc." 

மேலும் அறிய தொகு

  • Braverman, Harry (1974). Labor and Monopoly Capital. New York: Monthly Review Press. https://archive.org/details/labormonopolycap00harr. 
  • MacLaren, Malcolm (1943). The Rise of the Electrical Industry during the Nineteenth Century. Princeton: Princeton University Press. 
  • David F. Noble (1977). America by Design: Science, Technology, and the Rise of Corporate Capitalism. New York: Oxford University Press. பக். 6–10. 
  • Prasser, Harold C. (1953). The Electrical Manufacturers. Cambridge: Harvard University Press. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்பொறி_விளக்கு&oldid=3582457" இலிருந்து மீள்விக்கப்பட்டது