மிருணாளினி முகர்ஜி
மிருணாளினி முகர்ஜி (Mrinalini Mukherjee) (1949 – 15 பிப்ரவரி 2015) ஒரு இந்திய சிற்பியாவார். இவரது கைத்தறி நிறுவல்களும், சிற்பங்களும் குறிப்பிடத்தக்கவை. [1] சிற்பக்கலைக்கு வழக்கத்திற்கு மாறான பொருளான சாயம் ஏற்றப்பட்டு நெய்த சணல் இழைகளின் தனித்துவமான சமகால பாணி மற்றும் பயன்பாட்டிற்கு பெயர் பெற்றவர். முகர்ஜி சிற்பங்களை உருவாக்க மெழுகு, தாமிரம், சணல் மற்றும் களிமண் போன்ற பல்வேறு பொருட்களையும் பயன்படுத்தினார். ஒரு கலைஞராக, இவர் வெவ்வேறு கருப்பொருட்களை பயன்படுத்தினார். இவர் வண்ண ஓவியங்கள், இலைகளின் செதுக்கல்கள், மழை, சூரிய அஸ்தமனம், காற்று மற்றும் சந்திரனின் நன்மைகளை கூறும் இயற்கை ஆய்வுகள் போன்றவை.
மிருணாளினி முகர்ஜி | |
---|---|
பிறப்பு | 1949 மும்பை, இந்தியா |
இறப்பு | புது தில்லி, இந்தியா | 15 பெப்ரவரி 2015
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | வெல்ஹாம் மகளி பள்ளி மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம், வடோதரா வெஸ்ட் சர்ரே, கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரி |
அறியப்படுவது | சிற்பம் |
1970கள் முதல் 2000கள் வரை நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஒரு தொழில் வாழ்க்கையைப் பெற்றார். இவரது பணி அமைப்பு பொது சேகரிப்பின் ஒரு பகுதியாகும். மேலும், நவீன கலை அருங்காட்சியகம், ஆக்சுபோர்டு, புது தில்லி, தேசிய நவீன கலைக்கூடம், ஆம்ஸ்டர்டாமின் ஸ்டெடெலிஜ்க் அருங்காட்சியகம் ஆகியவையும் அடங்கும்.
ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்
தொகுமுகர்ஜி 1949 ஆம் ஆண்டில் இந்தியாவின் மும்பையில் கலைஞர்களான பெனோட் பெஹாரி முகர்ஜி மற்றும் லீலா முகர்ஜி ஆகியோருக்கு பிறந்தார். [2] பெற்றோருக்கு ஒரே குழந்தையான, இவர் மலை நகரமான தேராதூனில் (தற்போதைய உத்தராகண்டம்) வளர்க்கப்பட்டார். அங்கு இவர் வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் பயின்றார். மேலும் தனது கோடை விடுமுறையை சாந்திநிகேதனில் கழித்தார். [3]
முகர்ஜி பரோடா, மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் நுண்கலை இளங்கலை (ஓவியம்) படிக்கச் சென்றார். [4] [5] அதன்பிறகு, இவர் பல்கலைக்கழகக் கலைஞர் கே. ஜி. சுப்பிரமண்யனின் கீழ் அதே பல்கலைக்கழகத்தில் சுவர் ஓவியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் பல்கலைக்கழகத்தில் நுண்கலை பீட உறுப்பினராகவும் இருந்தார். இவரது ஆய்வுகள் இத்தாலிய பிரெஸ்கோ பாணியிலும், பிற வழக்கமான நுட்பங்களையும் உள்ளடக்கியது. இவர் இயற்கை இழைகளுடன் சுவரோவியத்திற்கான ஒரு ஊடகமாக பணியாற்றினார்.
தொழில்
தொகுமுகர்ஜியின் முதல் தனி கண்காட்சி 1972இல் புதுதில்லியின் உள்ள சிறீதரணி கலைக்கூடத்தில் நடைபெற்றது. இது சாயம் பூசப்பட்ட இயற்கை இழைகளில் நெய்த வடிவங்களைக் கொண்டிருந்தது. இது போன்ற தொடர்ச்சியான படைப்புகள் இவருக்கு அங்கீகாரத்தைக் கொண்டுவந்தது. இவரது சமகாலத்தவர்கள் பலரும் முறையான ஓவியங்களில் கவனம் செலுத்தியபோது, இவர் இயற்கை இழைகளில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். முக்கியமாக பெண்கள் பேய்கள், யோனிகள் மற்றும் பிற மனித உருவங்களைக் கொண்ட தொல்பொருட்களைப் பயன்படுத்தினர். இவர் தனது சிற்பங்களுக்கு கருத்தரிப்பிற்கான தெய்வங்களுக்குப் பெயரிட்டார். மேலும் இது சிற்றின்பமாகவும் அறிவுறுத்தலாகவும் காணப்பட்டது. முகர்ஜி 1971ஆம் ஆண்டில் சிற்பக்கலைக்கான பிரிட்டிசு அமைப்பின் உதவித்தொகையைப் பெற்றார். இது இவரை வெஸ்ட் சர்ரே கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரிக்கு அனுப்பியது. அங்கு இவர் 1978 வரை கட்டப்பட்ட நெய்தல் பணிகளைத் தொடர்ந்தார். [6]
முகர்ஜியின் ஆரம்பகால படைப்புகளில் பெரும்பாலானவை இயற்கையான சணல் மூலம் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், இவர் பின்னர் சுட்டாங்கல் மற்றும் வெண்கலத்துடன் விரிவாக பணியாற்றத் தொடங்கினார். [6] [7] 2000களில் இவரது வெண்கலப் படைப்பு வெளிப்பட்டது.[8]
1994 ஆம் ஆண்டில் டேவிட் எலியட் நடத்திய கண்காட்சியை நடத்த முகர்ஜி ஆக்சுபோர்டின் நவீன கலை அருங்காட்சியகத்திற்கு அழைக்கப்பட்டார். இதே கண்காட்சி அடுத்த சில மாதங்களில் ஐக்கிய இராச்சியத்தின் பிற நகரங்களுக்கும் பயணித்தது. முகர்ஜி பின்னர் 1996 இல் நெதர்லாந்தில் நடைபெற்ற ஒரு சர்வதேச பட்டறையில் பங்கேற்றார். [9]
நுட்பமும் நடை
தொகுபாரம்பரிய இந்திய மற்றும் வரலாற்று ஐரோப்பிய சிற்பம், நாட்டுப்புற கலை, நவீன வடிவமைப்பு, உள்ளூர் கைவினைப்பொருட்கள் மற்றும் துணி ஆகியவற்றால் முகர்ஜி செல்வாக்கு பெற்றார். முடிச்சு இவரது முக்கிய நுட்பங்களில் ஒன்றாகும். இவர் உள்ளுணர்வாக பணியாற்றினார். ஓவியங்கள், மாதிரிகள் அல்லது ஆயத்த வரைபடங்களின் அடிப்படையில் ஒருபோதும் பணிபுரியவில்லை. [10]
சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய சமகால கலை ஆசிரியர்கள் முகர்ஜியை "சமகால இந்திய கலையில் தனித்துவமான குரல்" என்று அழைத்தனர்.
இறப்பு
தொகுசிறு காலம் நோய்வாய்பட்டிருந்த மிருணாளினி முகர்ஜி தனது 65 வயதில், இறந்தார். [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ Dalmia, and Datta, and Sambrini, and Jakimowicz, and Datta (1997) Indian Contemporary Art Post-Independence. p.206
- ↑ Dalmia, and Datta, and Sambrini, and Jakimowicz, and Datta (1997) Indian Contemporary Art Post-Independence. p.206
- ↑ "Education". Nature Morte.
- ↑ Gupta, Trisha (23 May 2015). "Secular Deities, Enchanted Plants: Mrinalini Mukherjee at the NGMA". The Wire. பார்க்கப்பட்ட நாள் 25 June 2019.
- ↑ Ghoshal, Somak (8 November 2013). "Mrinalini Mukherjee – Nature as art". Live Mint. பார்க்கப்பட்ட நாள் 26 June 2019.
- ↑ 6.0 6.1 "ArtAsiaPacific: Indian Sculptor Mrinalini Mukherjee Dies At65". artasiapacific.com. பார்க்கப்பட்ட நாள் 4 February 2019.
- ↑ "Mistress of texture". http://indianexpress.com/article/opinion/columns/mistress-of-texture/.
- ↑ "Mrinalini Mukherjee: Force(s) of Nature". ocula.com (in ஆங்கிலம்). 2020-11-25. பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
- ↑ Bent, Siobhan (5 February 2016). "Indian Sculptor Mrinalini Mukherjee Dies at 65". ArtAsiaPacific. பார்க்கப்பட்ட நாள் 9 April 2017.
- ↑ Jhaveri (2019).
- ↑ Bent, Siobhan (5 February 2015). "Indian Sculptor Mrinalini Mukherjee Dies at 65". ArtAsiaPacific Magazine. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.
நூலியல்
தொகு- Dalmia, Yashodharea and Datta, Ella and Sambrini, Chaitnya and Jakimowicz, Martha and Datta, Santo (1997). Indian Contemporary Art Post-Independence (English). New Delhi: Ajanta Offset Ltd.
- Jhaveri, Shanay, ed. (2019). Mrinalini Mukherjee. Mumbai: Shoestring. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190472098.
- Khullar, Sonal (2015). Worldly Affiliations: Artistic Practice, National Identity, and Modernism in India, 1930-1990. California: University of California Press.
மேலும் படிக்க
தொகு- Ananth, Deepak, et. al.. Mrinalini Mukherjee. New York: The Shoestring Publisher, 2019.
- Cotter, Holland (11 July 2019). "Sculpture, Both Botanical and Bestial, Awe at the Met Breuer". The New York Times. https://www.nytimes.com/2019/07/11/arts/design/met-breuer-mrinalini-mukherjee-review.html.
- Gardner, Andrew (11 December 2019). "Mrinalini Mukherjee: Textile to Sculpture". Post. New York: Museum of Modern Art.