மீசைப்புலிமலை

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இரண்டாவது உயரமா

மீசைப்புலிமலை (Meesapulimala) (மலையாளம்: മീശപ്പുലിമല) என்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் மூன்றாவது மிக உயரமான சிகரமாகும். இச்சிகரம் கேரளாவின் இடுக்கி மாட்டத்தில் அமைந்துள்ளது. இந்தச் சிகரமானது கடல் மட்டத்திலிருந்து 2640 மீட்டர் (8661 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. [2] எட்டுச் சிகரங்கள் ஒரு மீசையைப் போல் பரவி அமைந்துள்ளதிலிருந்து இந்த சிகரத்திற்கான பெயர் பிறந்துள்ளது. இச்சிகரமானது ஆனைமலைக் குன்றுகளுக்கும் பழனி குன்றுகளுக்கும் இடையில், மூணாரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியநெல்லிக்கருகில் அமைந்துள்ளது. கொழுக்குமலை தேயிலைத் தோட்டம், டாப் ஸ்டேசன் மற்றும் திரிபாதமலை ஆகியவையும் இச்சிகரத்திற்கு அருகில் அமைந்துள்ளன.

மீசைப்புலிமலை
Meesapulimala
உயர்ந்த புள்ளி
உயரம்1,600 m (5,200 அடி)[1]
ஆள்கூறு10°05′51″N 77°12′12″E / 10.097403°N 77.203417°E / 10.097403; 77.203417
புவியியல்
மீசைப்புலிமலை Meesapulimala is located in கேரளம்
மீசைப்புலிமலை Meesapulimala
மீசைப்புலிமலை
Meesapulimala
தேவிகுளம் வட்ட எல்லை, உடும்பஞ்சோழா வட்ட எல்லை, கேரளாவின் இடுக்கி மாவட்ட எல்லை மற்றும் தமிழ்நாட்டின் தேனி மாவட்ட எல்லை
மூலத் தொடர்மேற்குத்தொடர்ச்சி மலை
ஏறுதல்
எளிய வழிகொச்சி --> அடிமலை-->மூணார் --> மீசைப்புலிமலை

ரோடோ பள்ளளத்தாக்கின் வழியாக இச்சிகரத்திற்கான மலையேற்றமானது[3] மூணாறில் உள்ள கேரள வன மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்படலாம்.[4]

மீசைப்புலிமலையில் மலையேற்ற முன்பதிவானது மிகவும் வரையறுக்கப்பட்டதாகும்.[5]மேலும், கொழுக்குமலையிலிருந்து மீசைப்புலிமலை வரையிலான மலையேற்றப் பாதையும் மிகவும் கட்டுப்பாட்டுக்குரியதாகும்.

நீலகிரி மறிமான் (ஒரு வகை ஆட்டினம்), கடமான், காட்டெருது மற்றும் காட்டு நாய்கள் மற்றும் அசமந்தக் கரடி ஆகிய விலங்கினங்களைப் பார்ப்பதற்கான அரிய வாய்ப்பாகும். முழுமையாக இத்தொலைவை மலையேற்றத்தின் மூலம் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரமானது அவரவர் உடற்தகுதிையப் பொறுத்ததே ஆகும். சாதாரணமாக, இத்தொலைவை முழுமையாகக் கடக்க 7 முதல் 9 மணி நேரங்கள் ஆகும்.

மேற்கோள்க்ள

தொகு
  1. U.S.Army Map Service (LU), Corps of Engineers
  2. toposheet prepared by the Army Map Service (LU), Corps of Engineers, U.S. Army, Washington
  3. "Meesapulimala Trekking Experience" (in en-US). Meesapulimala இம் மூலத்தில் இருந்து 2019-12-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191218185200/https://meesapulimala.in/trekking/. 
  4. "Rhodo Valley - Rhodo Mansion". Kerala Forest Development Corporation Ltd. Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-11-02.
  5. "Meesapulimala Trekking". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீசைப்புலிமலை&oldid=3567732" இலிருந்து மீள்விக்கப்பட்டது