மீனாட்சி விஜயகுமார்

மீனாட்சி விஜயகுமார் (Meenakshi Vijayakumar) முதல் இந்திய பெண் தீயணைப்பு அதிகாரி ஆவார்.  இவர் தற்போது சென்னை தாம்பரத்தில் உள்ள மாநில பயிற்சி மையத்தின் இணை இயக்குனராக பணிபுரிகிறார். இரண்டு உயிர்களைக் காப்பாற்றியதற்காக 2013 ஆம் ஆண்டில் இவர் வீரதீரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தை பெற்றார். இவர் 2019 இல் புகழ்பெற்ற சேவைக்கான ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றுள்ளார். தென்கொரியா, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் நடைபெற்ற உலக தீயணைப்பு வீரர்கள், உலக காவல் போட்டிகளிலும் மற்றும் நாக்பூரில் நடைபெற்ற தீ விளையாட்டுக்களில் பதக்கம் வென்ற முதல் இந்திய தீயணைப்பு அதிகாரி ஆவார்.[1]

மீனாட்சி விஜயகுமார்

கல்வி

தொகு

இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னை பரத் சீனியர் செகண்டரி பள்ளியில் பயின்றார்.[2] சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். 1991 இல் புதுதில்லியில் உள்ள பாரதிய வித்யா பவனில் இருந்து தொழில்துறை உறவு மற்றும் பணியாளர் மேலாண்மையில் முதுகலை பட்டயப் படிப்பை முடித்தார். 1994 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். தேசிய தீ சேவை கல்லூரியில் மேம்பட்ட பட்டய படிப்புகளையும் முடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் தீயணைப்பு பொறியாளர் நிறுவனத்தால் "பட்டதாரி உறுப்பினர்" சான்றிதழ் இவருக்கு வழங்கப்பட்டது மற்றும் 2014 ஆம் ஆண்டில் யுனைடெட் கிங்டமில் மார்ஷில் உள்ள மார்டன் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபயர் சயின்ஸ் மற்றும் ஃபயர் சேஃப்டி (HL) மூலம் IFE நிலை 4 சான்றிதழ் வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் தேசிய தேர்வு வாரியத்தால் தொழில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான NEBOSH சர்வதேச பொதுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.  முதுகலை வணிக மேலாண்மை (MBA) 2017 ஆம் ஆண்டு முடித்தார்.

தொழில்

தொகு

மீனாட்சி விஜயகுமார் 1990 ஆம் ஆண்டு சென்னை செல்லம்மாள் கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். புது தில்லியில் உள்ள ஃபாதர் ஆக்னல் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் கம்யூனிகேஷன் டெக்னிக் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவர் 1998 இல் குரூப் 1 சேவை தேர்வில் தேர்ச்சி பெற்றார், ஆனால் தீயணைப்பு சேவையில் பெண் அதிகாரிகளை சேர்க்கலாம் என்று முடிவு செய்யப்படுவதற்கு முன்பு 2003 வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

இவர் வட சென்னையில் நான்கரை ஆண்டுகள் மற்றும் புறநகர் சென்னை ஒன்றரை ஆண்டுகள் கோட்ட தீயணைப்பு அதிகாரியாக பணியாற்றினார்.[3][4] இவர் 400 க்கும் மேற்பட்ட தீ மற்றும் மீட்பு அழைப்புகளில் கலந்து கொண்டார்.[5][6][7][8][9]  சுனாமி பேரழிவில் இவர் மீட்புப் பணிகளில் பங்கேற்றார்.[9] இவரது பிரிவில் தீ பாதுகாப்புத் திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் இவர் பொறுப்பாக இருந்தார்.[10] இந்தியா முழுவதிலுமிருந்து 30 க்கும் மேற்பட்ட தொகுதி தீயணைப்பு அதிகாரிகளுக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார்.[11]

இவருக்கு 2013 ஆம் ஆண்டில், வீரத்திற்கான ஜனாதிபதி தீயணைப்பு சேவை பதக்கம் வழங்கப்பட்டது.[12] இவர் இளம் இந்தியப் பெண்களைத் தொழிலைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் பேசுகிறார். [13]

தனிப்பட்ட விவரங்கள்

தொகு

இவர் முன்னாள் இணை பதிவாளர், கூட்டுறவு சமூகம் காலஞ்சென்ற திரு பி.கே. பத்மநாதன் மற்றும் முன்னாள் இயக்குநர், எழும்பூரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர் வி. கிருஷ்ணகுமாரியின் மகளாவார்.[14]  இவர் காமராசர் ஆட்சியில் அமைச்சராக இருந்த பி. கக்கனின் மூத்த பேத்தியும் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rediff E Magazine". First Woman Fire Officer "Meenakshi Vijayakumar".
  2. Founder's Day, Alumni meet organised at Bharath school - The Hindu
  3. "Major fire in Manali polymer unit". The Hindu.
  4. 'Step Out of Comfort Zone'. New Indian Express. By Priyadarshini S - Chennai 8 March 2014
  5. "Fire in leather goods firm" - The Hindu
  6. "Fire in Perambur". The Hindu.
  7. "Fire at Kilpauk Garden department store complex" - The Hindu
  8. "Fire destroys warehouse in Manali". The Hindu.
  9. 9.0 9.1 "major rescues by TNFRS". Archived from the original on 2018-10-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
  10. "Firecracker shops told to strictly adhere to safety norms". The Hindu.
  11. Teaching students to tackle disasters.
  12. "Woman fire officer to get President's Gallantry Medal". The New Indian Express. Archived from the original on 2016-06-02. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
  13. "Female Students Urged to Crush Hurdles and Achieve Success". by India Express News Service - Chennai Published: 7 March 2014
  14. Former Minister Kakkan's grand daughter Meenakshi Vijayakumar achieves in Fire Service. Successfully Stories of Wo... பரணிடப்பட்டது 2015-04-02 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Meenakshi Vijayakumar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_விஜயகுமார்&oldid=4166917" இலிருந்து மீள்விக்கப்பட்டது