மீனாறு 2 அணை
மீனாறு 2 அணை (Meenar-2 Dam) என்பது இந்தியாவின் கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தின் சீதத்தோடு கிராமத்தில் பம்பை ஆற்றின் துணை ஆறான மீனாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பைஞ்சுதை, ஈர்ப்பு வகை அணையாகும். இந்த அணை சபைகிரி மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டுள்ளது.[1]
மீனாறு 2 அணை | |
---|---|
மீனாறு 2 அணை | |
நாடு | இந்தியா |
அமைவிடம் | பத்தனம்திட்டா, கேரளா |
புவியியல் ஆள்கூற்று | 9°24′36″N 77°10′43″E / 9.41000°N 77.17861°E |
நோக்கம் | மின் உற்பத்தி |
நிலை | செயல்பாட்டில் |
திறந்தது | 1991 |
உரிமையாளர்(கள்) | கேரள மாநில மின்சார வாரியம் |
அணையும் வழிகாலும் | |
வகை | பைஞ்சுதை-ஈர்ப்பு |
தடுக்கப்படும் ஆறு | மீனாறு |
உயரம் (அடித்தளம்) | 17.07 m (56 அடி) |
நீளம் | 82 m (269 அடி) |
வழிகால் வகை | கதவில்லா-வழிந்தோடும் அணை |
மின் நிலையம் | |
நிறுவப்பட்ட திறன் | 340 மெ.வா. |
இணையதளம் https://dams.kseb.in |
சபரிகிரி நீர்மின் திட்டம் (340 மெகாவாட்) கேரளாவின் இரண்டாவது பெரிய நீர்மின் திட்டமாகும். இது பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கம் மீனாறு 1 நீர்த்தேக்கத்திலிருந்தும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்தும் தண்ணீரைப் பெறுகிறது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து திறக்கப்படும் நீர் திறந்த நிலைக் கால்வாய் வழியாகப் பம்பை அணைக்குத் திருப்பி விடப்படுகிறது. இரன்னி, கோன்னி, கோழஞ்சேரி, திருவல்லா, செங்கன்னூர், குட்டநாடு, மாவேலிக்கரை, கார்த்திகைப்பள்ளி ஆகிய வட்டங்கள் வழியாக நீர் திறக்கப்படுகிறது.
விவரக்குறிப்புகள்
தொகு- ஊராட்சி: சீதத்தோடு
- வகைப்பாடு: நடுத்தர உயரம்
- ஆற்றுப் படுகை: பம்பை
- அணையிலிருந்து நீர் விடுவிக்கப்படும் ஆறு: பம்பை
- திட்டத்தின் பெயர்: சபரிகிரி நீர்மின் திட்டம்
- அதிகபட்ச நீர் மட்டம்: 1043.5 மீ
- முழு நீர்த்தேக்க நிலை: 1041.5 மீ
- நீர் சேமிப்பு: 0.06 Mm3
- உயர் மட்ட மட்டம்: 1041.5 மீ
- நீர் வெளியேற்றம்: 1, வட்ட வகை, 60 செமீ விட்டம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kerala State Electricity Board Limited - Kerala State Electricity Board Limited". www.kseb.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.