சீதத்தோடு

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்ட சிற்றூர்

சீதத்தோடு (Seethathodu) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சித்தர் நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூராகும். இந்த கிராமப்புற பிராந்தியத்தில் வேளாண்மை மிக முக்கியமான துறையாகும். அரசாலும், தனியாராலும் இயக்கப்படும் பேருந்துகள் சீதத்தோடை பத்தனம்திட்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுடன் இணைகின்றன.

சீதத்தோடு
சிற்றூர்
சீதத்தோடு is located in கேரளம்
சீதத்தோடு
சீதத்தோடு
இந்தியா, கேரளத்தில் அமைவிடம்
சீதத்தோடு is located in இந்தியா
சீதத்தோடு
சீதத்தோடு
சீதத்தோடு (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°19′30″N 76°58′0″E / 9.32500°N 76.96667°E / 9.32500; 76.96667
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பத்தனம்திட்டா
அரசு
 • வகைஉள்ளாட்சி
 • நிர்வாகம்சீதத்தோடு கிராமப் பஞ்சாயத்து
பரப்பளவு
 • மொத்தம்651.94 km2 (251.72 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்18,222
 • அடர்த்தி28/km2 (70/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
689667
தொலைபேசி குறியீடு04735
வாகனப் பதிவுKL-62
அருகில் உள்ள நகரம்சித்தர், அங்கமூழி
Literacy98%
மக்களவைத் தொகுதிபத்தனம்திட்டா
கிடிமையியல் முகமைகிராம பஞ்சாயத்து
ஊராட்சித் தலைவர்லேகா சுரேஷ்

நிலவியல்

தொகு

சீதத்தோடு என்பது பத்தனம்திட்டா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அழகிய மலைப்பாங்கான கிராமப்புறப் பகுதியாகும். பல மலைகள், பள்ளத்தாக்குகள், செங்குத்தான சரிவுகள் இதன் புவியியல் பின்னணியை அழகுபடுத்துகின்றன. 90% பரப்பளவு அடர்த்தியான காப்புக் காடுகளாகும். இது குட்ரிகல் மலைத்தொடரின் ஒரு பகுதியாகவும், பெரியாற்றுத் தேசியப் பூங்காவின் பகுதியாகவும் உள்ளது. இவை போக மீதமுள்ள நிலப்பரப்பில் மக்கள் வாழ்கின்றனர். இங்கு முக்கிய சாகுபடி இரப்பர் ஆகும். சீதாதோடுவின் முக்கிய ஈர்ப்பு இந்து மலையாத்திரை தலமான சபரிமலை ஆகும்.

  • கக்காட் நீர்மின் நிலையத் திட்டத்தின் நீர்மின் நிலையம் சீதாத்தோடில் அமைந்துள்ளது (50 மெகாவாட் திறன்). இது 2 அலகுகளைக் கொண்டுள்ளது. முதல் பிரிவு 1998 இல் தொடங்கப்பட்டது, அடுத்து 1999 இல் இயக்கப்பட்டது. இது கேரள மாநில மின்சார வாரியத்தால் இயக்கப்படுகிறது.
  • சபரிகிரி - கேரளத்தின் இரண்டாவது பெரிய நீர்மின் திட்டம் சபரிகிரி இந்த கிராமத்தில் அமைந்துள்ளது.
  • சுமார் 651.94 கிமீ 2 பரப்பளவு கொண்ட கேரளத்தின் மிகப்பெரிய பஞ்சாயத்துகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் கிட்டத்தட்ட 602.7   கிமீ 2 பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. மக்கள் வாழும் பகுதி சுமார் 4924 ஏக்கர் மட்டுமே.

வரலாறு

தொகு

நிர்வாக வசதிக்காக பந்தளத்தின் கொய்கல் அரசர்கள் தங்கள் இராச்சியத்தை வலியாகோயிக்கல் (பந்தளத்தின் பகுதிகள் உட்பட) மற்றும் கொச்சுக்கோய்கல் (மேற்கு பகுதிகள்) என இரண்டு பகுதிகளாகப் பிரித்தனர். கொச்சுகோய்கல் இன்று சீதத்தோடு பஞ்சாயத்தின் ஒரு பகுதியாகும். கி.பி 52 இல், புனித தோமா இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட நிலைக்கல் என்ற கிராமத்தை அடைந்து ஒரு சிலுவையை நிறுவினார். வழக்கறிஞர் கொச்சுகோய்க் தலச்சிரா பரயானன் இந்த பிராந்தியத்தில் முதல் பள்ளியை (எஸ்.என்.டி.பி பள்ளி) நிறுவினார். சீதாத்தோடு பஞ்சாயத்து 20 நவம்பர் 1968 இல் உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக டி. கே. ராகவன் தேர்ந்தெடுக்கபட்டார்.

சீதத்தோடு பஞ்சாயத்தில் வார்டுகள்

தொகு
  • சீதத்தோடு
  • கவி
  • அங்கமூழி
  • கோட்டமொன்பரா
  • பலததியர்
  • வாலுபாறை
  • கம்பிலின்
  • கொச்சுகோய்கல்
  • கோட்டகுழி
  • குருநாதன்மன்னு
  • சீதகுழி
  • மூணுகல்லு
  • அல்லுங்கல்
  • முண்டன்பாறை

மக்கள் வகைப்பாடு

தொகு

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீதாத்தோடு பஞ்சாயத்தில் சுமார் 18222 மக்கள் வாழ்கின்றனர். இதில் 9268 பேர் ஆண்கள், 8954 பேர் பெண்களாவர். இந்த கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 92.4% ஆகும். இங்குள்ளவர்களில் 95% க்கும் அதிகமான மக்கள் மலையாளம் பேசுகிறார்கள், 4% பேர் தமிழ் பேசுகிறார்கள். ஆங்கிலம் மற்றும் இந்தி பேசுபவர்கள் சிலர் உள்ளனர். இந்தி பேசுபவர்கள் வட இந்தியாவில் இருந்து புதியதாக குடியேறிய தொழிலாளர்களாவர்.

கல்வி நிறுவனங்கள்

தொகு

பள்ளிகள்

தொகு
  • கே.ஆர்.பி.எம் எச்.எஸ்.எஸ் சீதாத்தோடு
  • அரசு மேல்நிலைபள்ளி, சித்தர்
  • அரசு மாதிரி எல்.பி.எஸ்., சித்தர்
  • வி.கே.என்.எம்.வி.எச்.எஸ் எஸ், வயையட்டுப்புழா
  • புனித பேமிலி பொது பள்ளி, சித்தார்
  • கோமலா விலாசம் பள்ளி, படயணிப்பரா
  • லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில வழிப் பள்ளி சித்தர்
  • சாயல் ராயல் பேரலல் கல்லூரி
  • சாந்தி நிகேதன் இணை கல்லூரி, சித்தார்
  • ஐடியல் பேரலல் கல்லூரி, சித்தார்
  • மவுண்ட்ஜியன் யுபிஎஸ் (முன்பு குர்குளம் யுபிஎஸ்) அங்கமூழி
  • எஸ்ஏவிஎச்எஸ் அங்கமூழி
  • செருபுஷ்பம் ஆங்கிலவழி பள்ளி அங்கமூழி
  • அரசுப் பழங்குடி யுபி ஸ்கூல், முண்டன்பாரா
  • எம்.எம்.ஏ.எம் ஆங்கில வழிப் பள்ளி, கொச்சுகோய்கல்

அருகிலுள்ள கல்லூரிகள்

தொகு
  • மார் இவானியோஸ் ஐ.டி.சி, சீதத்தோடு
  • எஸ்.என்.டி.பி கல்லூரி, சித்தார்
  • எஸ்.ஏ.எஸ் எஸ்.என்.டி.பி யோகம் கல்லூரி, கொன்னி
  • என்.எஸ்.எஸ் கல்லூரி, கொன்னி
  • கார்மல் பொறியியல் கல்லூரி, ராணி-பெருநாடு
  • முசலியார் பொறியியல் கல்லூரி, மலையாளப்புழா
  • மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி, கடமண்ணிட்டா
  • புஷ்பகிரி மருத்துவக் கல்லூரி, திருவல்லா
  • முத்தூத் செவிலியர் கல்லூரி, பதனம்திட்டா
  • செயின்ட் தாமஸ் கல்லூரி, ராணி
  • கத்தோலிக்க கல்லூரி, பதானம்திட்டா

சுகாதார பராமரிப்பு

தொகு
  • அரசு பி.எச்.சி சீதத்தோடு மற்றும் அங்கமூழி
  • மருத்துவ மருத்துவமனை மூன்னுகல்லு

போக்குவரத்து

தொகு
  • விமான நிலையங்கள்  : திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் மற்றும் கொச்சி சர்வதேச விமான நிலையங்கள் சீதத்தோடிலிருந்து கிட்டத்தட்ட ஒரே தொலைவில் உள்ளன (சுமார் மூன்று மணி நேர பயணம்). அருகிலுள்ள வானூர்தி நிலையம் வரவிருக்கும் வானூர்தி நிலைய திட்டமானது எருமேலி- சபரிகிரி சர்வதேச வானூர்தி நிலையம் ஆகும்.
  • தொடருந்து  : அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் செங்கன்னூர் (60)   கி.மீ), மற்றும் திருவல்லா (65)   கி.மீ).
  • சாலைகள்: முக்கிய சாலைகளாக வடசேரிக்கரா - சித்தார் -அங்கமூழி - பிளாபளே சாலை, பத்தனம்திட்டா - அங்கமூழி - குமுளி.
  • பேருந்துகள்  : அனைத்து முக்கிய தொலைதூரப் பேருந்துகளும் சீதத்தோடு சந்திப்பில் நிறுத்தப்படுகின்றன.
  • உள்ளூர் போக்குவரத்து  : வாடகை மகிழுந்துகள் (தானிகள், மகிழுந்துகள் போன்றவை) ஒவ்வொரு சாலையிலும் கிடைக்கின்றன, எல்லா முக்கிய சந்திப்புகளிலும் அவற்றின் நிறுத்தங்கள் உள்ளன. குறுகிய சாலைகளாக இருப்பதால், சிறுறுந்துகள் உள் இடங்களுக்கு சீரான இடைவெளியில் செல்கின்றன.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  • "Seethathodu grama panchayath-ward details". Archived from the original on 2016-08-21. பார்க்கப்பட்ட நாள் 2020-09-04.
  • வலைஒளி  : https://www.youtube.com/watch?v=_uQF7NWhyAA
  • கேரள சுற்றுலா  : http://www.keralatourism.org/routes-locations/seethathodu/id/41340
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதத்தோடு&oldid=3554741" இலிருந்து மீள்விக்கப்பட்டது