கோழஞ்சேரி

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டதில் உள்ள ஊர்

கோழஞ்சேரி (Kozhencherry) என்பது தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தில், மத்திய திருவிதாங்கூர் பிராந்தியத்தின் (தென் மத்திய கேரளம்) பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். 2011 ஆண்டைய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஊரில் மொத்தம் 3,393 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 12,021 ஆகும்.[1]

கோழஞ்சேரி
பஞ்சாயத்து
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்பத்தனம்திட்டா
அரசு
 • நிர்வாகம்பேரூராட்சி
பரப்பளவு
 • மொத்தம்8 km2 (3 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்12,021
 • அடர்த்தி1,750/km2 (4,500/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்689 641
தொலைபேசி குறியீடு91-468
வாகனப் பதிவுKL-03
அருகில் உள்ள நகரம்திருவல்லா, பத்தனம்திட்டா, செங்கன்னூர்
பாலின விகிதம்29:33 /
எழுத்தறிவு96%
மக்களவைத் தொகுதிபத்தனம்திட்டா
சட்டமன்றத் தொகுதிஆறன்முளா
குடிமையியல் முகமைகிராம பஞ்சாயத்து

இந்த ஊரானது பம்பை ஆற்றின் கரையில் பத்தனம்திட்டாவிலிருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பம்பை ஆற்றின் கரையில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மாரமான் கிருஸ்தவ மாநாட்டிற்கு ஆசியா முழுவதிலிருமிருந்து பெருமளவில் கூடுவார்கள். ஆசியாவின் மிகப்பெரிய கிருஸ்தவ மாடாக இது கருதப்படுகிறது. இம்மாநாட்டில் இந்தியாவிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் வரும் அறிஞர்கள் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றுவார்கள்.[2]

குறிப்புகள் தொகு

  1. "Search Details: Kozhenchery". Census of India. பார்க்கப்பட்ட நாள் 1 September 2016.
  2. கேரளா ஒரு சுற்றுலா பார்வை, நூல், கலைமாமணி வி.கே.டி. பாலன், மதுரா வெளியீடு, 2005, பக்கம். 274
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழஞ்சேரி&oldid=3028678" இலிருந்து மீள்விக்கப்பட்டது