மீன் மழை

வானியலின் அரிய நிகழ்வு
சிங்கப்பூரில்1861 இல் மூன்று நாட்கள் பெய்த மீன் மழையில் அதிகப்படியான மீன்கள் கிடைத்ததாக உள்ள பதிவு.
1680 இல் பாம்பு மழை.

மீன் மழை அல்லது விலங்கு மழை என்பது வானிலையில் ஒரு அரிதான நிகழ்வு ஆகும். பறக்க இயலாத விலங்குகள் மழையின்போது வானில் இருந்து மழையுடன் சேர்ந்து விழுவது ஆகும். இது போன்ற சம்பவங்கள் வரலாறு முழுவதும் பல நாடுகளில் நடந்ததாக தகவல்கள் உள்ளன.[1] இது எதனால் ஏற்படுகிறது என்றால், ஒரு கருத்தின்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின்போது கூடவே வேகமாக மாறும் வானிலை மாற்றத்தின்போது ஏற்படும் நீர்ப்பீச்சு என்பதுதான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது கடல் அல்லது ஏரி போன்றவற்றின் மேற்பரப்பில் திடீரென்று காற்று சூடாகும்போது அது விரைந்து மேலெழும்பும். இவ்வாறு காற்று மேலெழும்பும்போது அந்த வெற்றிடத்தை நோக்கி கடல்நீர் எழும்பிவரும். இவ்வாறு கடல்நீர் உறிஞ்சப்படுகையில் அதனுடன் சேர்த்து அப்பகுதியில் வாழும் தவளைகள், மீன்கள், சிப்பிகள் போன்றவை என எல்லாம் நீருடன் சேர்ந்து மேலெழும்பி காற்றுடன் பயணப்பட்டு சிறிது தொலைவில் கடலிலோ அல்லது கடற்கரை நகரங்களிலோ மழையாய் பொழியும்.[1][2] எனினும், இது இந்த நிகழ்வு குறித்த அறிவியலாளர்களின் அணுமானமே, இதற்கு இதுவரை அறிவியலில் சான்று இன்னும் கணப்படவில்லை.[3]

குறைந்த காற்றழுத்ததாழ்வின்போது இதுபோல ஏற்படும் நீர்பீச்சின்போது காற்றில் இழுக்கப்படும் விலங்குகள் மழையாக பொழிகின்றன.

வரலாறுதொகு

பறக்கமுடியாத உயிரினங்கள் மற்றும் பொருட்கள் மழையாக பொழிந்தது குறித்து வரலாறு முழுவதும் தகவல் வருகிறது.[1] முதல் நூற்றாண்டில், உரோம இயற்கையியலாளர் மூத்த பிளினி மீன், தவளை மழை குறித்து பதிவுசெய்துள்ளார். 1794 இல், பிரெஞ்சு படைவீரர்கள் இம்மாதிரியான மழையை பிரெஞ்சு நகரான லீல் அருகில் உள்ள லலெய்ன் என்ற இடத்தில் கண்டதாக பதிவுசெய்துள்ளனர். 18 ஆம் நூற்றாண்டில் நடு அமெரிக்கா நாடான ஹொண்டுராஸ் நாட்டில் கனமழைக்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்மழை என்பது பெய்ததாக தகவல் உண்டு.[4] இந்த நீர்ப்பீச்சு கடலில் மட்டுமல்ல, மிகப் பெரிய ஏரிகளிலும்கூட ஏற்படும் 1939 ஆம் ஆண்டு சூன் 17 அன்று ஈரான் நாட்டிலுள்ள டாப்ரெஜ் என்ற நகரில் விநோதமாக தவளை மழை பெய்தது. இந்த தவளை மழைக்கு அந்த நகரை ஒட்டிய ரிஜாயே ஏரியில் ஏற்பட்ட நீர்ப்பீச்சுதான் காரணம் என்பர்.[5]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்_மழை&oldid=2747551" இருந்து மீள்விக்கப்பட்டது