மீரா அகர்வால்
மீரா அகர்வால் (இந்தி: मीरा अग्रवाल), (பிறப்பு 15 மே 1961) அவர்கள் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் புதிதாக உருவாக்கப்பட்ட வடக்கு தில்லி மாநகராட்சியின் முதல் மேயர் ஆவார்.[1] மேலும் முதல் பெண் துணை மேயராக 1998 ஆம் ஆண்டு தில்லியில் பணியில் அமர்த்தப்பட்டார். இவர் மூன்றாவது முறையாக சவான் பார்க் வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
மீரா அகர்வால் | |
---|---|
![]() | |
வடக்கு தில்லி மேயர் | |
பதவியில் 30 ஏப்ரல் 2012 – 8 ஏப்ரல் 2013 | |
நியமனக்குழு தலைவர் | |
பதவியில் 1 ஏப்ரல் 2010 – 30 மார்ச்சு 2012 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 15 மே 1961 தில்லி, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி(1990–முதல்) |
வாழ்க்கை துணைவர்(கள்) | அனில் அகர்வால் |
பிள்ளைகள் | வைபவ் (மகன்) சாம்பவ் (மகன்) |
படித்த கல்வி நிறுவனங்கள் | அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, தில்லி, இந்து கல்லூரி, தில்லி, தில்லி பல்கலைக்கழகம். |
தொழில் | வழக்கறிஞர் |
சமயம் | இந்து |
இணையம் | இணையதளம் |
ஆரம்ப வாழ்க்கை தொகு
மீரா அகர்வால் இந்தியாவின் தில்லியைச் சார்ந்த ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை திரு.லாலா ராம் பிலாசு குப்தா ஆவார். இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி ஆவார். மீரா அவர்களின் தந்தை ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஆவார் மேலும் இவர் தில்லியில் உள்ள சமூக ஆர்வலராக அறியப்பட்டார்.[3] மீரா அவர்கள் தம் ஆரம்ப பள்ளி படிப்பை தில்லியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயின்றார். உயர்கல்வியை தில்லியில் உள்ள இந்து கல்லூரியில் தொடர்ந்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். தில்லை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். மீரா அகர்வால் அவர்கள் தனது அரசியல் ஈடுபாட்டை கல்லூரியில் பயிலும்போதே அகில பாரத வித்தியார்த்தி பரிசத் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயலாற்றினார்.