முகமது அமீன் (வரலாற்றாசிரியர்)

முகமது அமீன் (Mohammad Amin ) (பிறப்பு:1928 சனவரி 22- இறப்பு: 2012 திசம்பர் 15 ) இவர் ஒரு இந்திய வரலாற்றாசிரியர் ஆவார். இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள பல்கலைக்கழகமான ஜாமியா அம்டார்ட் என்ற உயர் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தராக இருந்த இவர் 2010 இல் பத்ம பூசண் விருது பெற்றுள்ளார். [1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

முன்னாள் ஐக்கிய மாகாணங்களின் அலகாபாத் மாவட்டத்தில் கங்கை நதிக்கரையில் உள்ள கசுபா மௌ- அய்மாவில் அமீன் பிறந்தார். [2]

அமீன் குர்சத் என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு வரலாற்றாசிரியரும் உரோட்சு பல்கலைகழகத்தின் அறிஞருமான சாகித் அமீன் என்ற ஒரு மகனும், [1] ஒரு ஊடக ஆளுமையாகவும், ஆசிரியராக உள்ள கசலா என்ற மகளும் இருக்கின்றனர்.

இவரது பள்ளி கல்வி அலகாபாத்தில் தொடங்கியது, அங்கிருந்து முகலாய சராய் மற்றும் இறுதியாக பனாரசில் உள்ள குயின்ஸ் கல்லூரி பள்ளிக்கு சென்றார். [1] அதைத் தொடர்ந்து, புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான சர் சபாத் அகமது கானின் கீழ் 1945 இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் பட்டம் பெற்றார். 1949 ஆம் ஆண்டில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் சட்டம் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு

முகமது அமீன் ஒரு வழக்கறிஞராக, 1947 இல், பச்சன் என்ற வழக்கறிஞரின் கீழ் பயிற்சி பெற்றார். இருப்பினும், ஒரு வழக்கறிஞராக இவரது வாழ்க்கை குறுகிய காலமாக இருந்தது. இவர் 1949 இல் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். 1952 இல் இவர் கார்னெல் பல்கலைக்கழகத்திலும் பின்னர் இசுடான்போர்டு பல்கலைக்கழகத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார் (1962 ). [1] [2] இவர் வரலாற்றுத் துறையின் தலைவராக 1989 இல் ஓய்வு பெறும் வரை 39 ஆண்டுகள் புனித ஸ்டீபன்ஸில் கற்பித்தார்.

1994-96 வரை உஸ்பெகிஸ்தான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அல் பெரூனி நிறுவனத்தில் நிபுணர் வரலாற்றாசிரியராக பணியாற்றினார். [2]

நிர்வாகம்

தொகு

இவர் 1990 இல் ஜாமியா அம்டார்ட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு, [3] 1993 வரை அங்கு பணியாற்றினார். [1] [2][4]

இந்திரா காந்தி உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் இருந்தார் [5] [2] தேசிய கல்வி மன்றம், மக்கள் தொகை மையம், மத்திய ஆலோசனைக் குழு போன்ற பல கல்வி நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களின் உறுப்பினர்களை இவர் வகித்துள்ளார் கலாச்சார அமைச்சகம், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் ஆலோசனைக் குழு மற்றும் கொல்கத்தாவின் விக்டோரியா நினைவிடத்தின் அறங்காவலர் குழு ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

தொகு

இறப்பு

தொகு

அமீன் வயது தொடர்பான நோய்களுக்கு ஆளாகி டிசம்பர் 15, 2012 அன்று தனது 84 வயதில் இறந்தார். [7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Interview with Dr Mohammed Amin". St Stephen's College. Archived from the original on 21 August 2014. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "About Us". Amin Saab. Archived from the original on 21 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Prof Mohammed Amin". Aligarh movement. Archived from the original on 15 October 2016. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.
  4. "Jamia Hamdard". பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.
  5. "Governing Body". Indira Gandhi Institute of Physical Education and Sports Sciences. 2016. Archived from the original on 24 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "This Year's Padma Awards announced". Press Information Bureau. Government of India. 25 January 2010. பார்க்கப்பட்ட நாள் 7 August 2014.
  7. "Former Jamia VC Mohammad Amin dead". DNA India. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.

    - "Former Jamia VC Mohammad Amin dead". Yahoo News. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.

    - "Former Jamia VC Mohammad Amin dead". Siasat. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.

    - "Historian Mohammed Amin dies at 86". பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.

    - "Memories". aminsaheb.com. Archived from the original on 12 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)