முகமது ரபீக் தாரர்

முஹம்மது ரபீக் தாரர் (Muhammad Rafiq Tarar) [1] 1929 நவம்பர் 2 அன்று பிறந்த இவர் ஒரு பாக்கித்தான் அரசியல்வாதியும், நீதிபதியுமவார். இவர் 1998 சனவரி முதல் 2001 சூனில் பதவியிலிருந்து விலகும் வரை பாக்கித்தானின் 9 வது அதிபராக பணியாற்றினார். அதற்கு முன்னர் 1997இல் பஞ்சாபிலிருந்து செனட்டராக பணியாற்றினார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, இவர் 1991 முதல் 1994 வரை பாக்கித்தான் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாகவும், 1989 முதல் 1991 வரை லாகூர் உயர் நீதிமன்றத்தின் 28 வது தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார் .

இவர் குஜ்ரான்வாலாவின் காகர் மண்டியில் பிறந்தார். 1951 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டங்களில் இளையர் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி தொடங்கினார்.[2] 1966 ஆம் ஆண்டில், இவர் ஒரு நீதிபதியாக தனது பணியைத் தொடர்ந்தார். இவர் பின்னர் பாக்கித்தானின் உச்ச நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றினார். 65 வயதில் ஓய்வு பெற்ற பின்னர், நவாஸ் ஷெரீப்பின் சட்ட ஆலோசகராக அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்தார். தாரர் 1997 இல் பஞ்சாபிலிருந்து செனட்டரானார், அதே ஆண்டு பாக்கித்தான் முஸ்லிம் லீக்கின் தலைவர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிபர் தேர்தலில் பாக்கித்தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 457 வாக்குகளில் 374 வாக்குகளைப் பெற்றார்.[3]

பாக்கித்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக தனது அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வதை சட்டவிரோதமாக நியாயப்படுத்தியதாக குற்றம் சாட்டிய முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் எதிர்ப்பின் கடுமையான விமர்சனங்களுடன் 1998 சனவரியில் பதவியேற்றார். ஒரு [[நாட்டுத் தலைவர்|தலைவராஇவர் பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் பாக்கித்தானின் அரசாங்க முறையை இரட்டை நிர்வாக முறையிலிருந்து நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு மாற்றினார். பிரதமரை பதவி நீக்கம் செய்தல், புதிய தேர்தல்களைத் முன்னெடுத்தல் மற்றும் தேசிய சட்டமன்றத்தை கலைத்தல் ஆகியவற்றுக்கான தனது இருப்பு அதிகாரத்தை இவர் விட்டு கொடுத்தார். அரசியலமைப்பின் பதினான்காம் மற்றும் பதினைந்தாம் திருத்தத்தில் இவர் கையெழுத்திட்டார். அது அதிபர் பதவிகளை நிர்வாகத்திலிருந்து ஒரு நபராக மட்டுப்படுத்தியது.[4]

1999 பாக்கித்தான் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இவர் 2001இல் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.[5] 1999 அக்டோபர் 12 அன்று ராணுவ ஆட்சி மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் எதிர்த்தார். இதனால் அப்போதைய தலைமை நிர்வாகி பர்வேஸ் முஷாரஃப் பதவி விலக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இறுதியில் 2002 இல் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் முஷாரஃப் வெற்றி பெற்றார்.[6] ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இருபது மாதங்களுக்குப் பிறகு, அதிபர் முஷாரஃப் மாநிலத்தின் சத்தியப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு அதிபரான நான்காவது இராணுவ ஆட்சியாளரானார்.[7]


ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

இவர் பாக்கித்தானின் குஜ்ரான்வாலாவில் உள்ள காகர் மண்டி என்ற ஊரில் 1929 நவம்பர் 2 ஆம் தேதி தாரர் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவரது மூதாதையர்கள் ஹபீசாபாத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பாக்கித்தான் சுதந்திரத்திற்கு முன்னர், சையத் அட்டா உல்லா ஷா புகாரிடமிருந்து செல்வாக்கு பெற்றார். மேலும் இவர் மஜ்லிஸ்-இ-அஹ்ரர்-இ-இஸ்லாத்தின் அரசியல் அமர்வுகளில் பங்கேற்றார். தனது கல்லூரி காலங்களில், இவர் முஸ்லிம் லீக்கின் ஆர்வலராகவும், முகம்மது அலி ஜின்னாவை பின்பற்றுபவராகவும் இருந்தார்.[8] பாக்கித்தான் பிரிவினையின் போது, இந்திய குடியேறியவர்களுக்காக முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு அமைத்த முகாம்களில் நிவாரணப் பணியாளராக தன்னார்வ கடமையைச் செய்தார். 1949 இல் குஜ்ரான்வாலாவின் இசுலாமியக் கல்லூரியில் இசுலாமிய ஆய்வில் இளங்கலை பட்டம் பெற்றார். 1951 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பஞ்சாப் சட்டக் கல்லூரியில் சட்டங்களில் இளையர் பட்டம் பெற்றார்.[2]

பதவி இறக்கம்

தொகு

பாக்கித்தான் இராணுவத்தால் 1999 ஆம் ஆண்டு நடந்த ஆட்சி மாற்றத்திற்கு இவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது நவாஸ் ஷெரீப்பின் நியமன உறுப்பினராக இருந்ததால், கூட்டுப் பணியாளர்கள் குழுவின் தலைவர் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை உயர்த்தியது. பாக்கித்தான் இராணுவம் இவரை ஐந்து ஆண்டு காலத்திற்கு அதிபராக தக்க வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தது. 2001 சூன் 21 அன்று, தலைமை நிர்வாகியாக செயல்பட்ட அதிபர் முஷாரஃப், சட்ட கட்டமைப்பின் உத்தரவு, 2002 என்பதை அமல்படுத்தி இவரை பதவி நீக்கிவிட்டார்.

அதிபருக்குப் பின் (2001-தற்போது வரை)

தொகு

இவர் தேசிய அரசியலில் இருந்து ஓய்வு பெற்று லாகூரில் குடியேறினார். இவ நவாஸ் ஷெரீப்புடன் நல்ல நட்பைத் தக்க வைத்துக் கொண்டார். மேலும் ஷெரீப் குடும்பத்தின் நெருக்கமாக இருக்கிறார். இவரது மருமகள், சாய்ரா தாரர், ஷெரீப்பின் மூன்றாவது அமைச்சகத்தின் உறுப்பினராக இருந்தார். தேசிய சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.[9]

மறைவு

தொகு

உடல்நல குறைவு காரணமாக மார்ச் 7, 2022 அன்று காலமானார்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Rafiq Tarar's BirthPlace".
  2. 2.0 2.1 "Rafiq Tarar's Academic career".
  3. "Previous Presidents: Mr. Muhammad Rafiq Tarar". Presidency of the Islamic Republic of Pakistan. Archived from the original on 25 April 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  4. 12th Parliament of Pakistan (1973). Constitution of the Islamic Republic of Pakistan (13th Amendment ed.). 12th Parliament of Pakistan.{{cite book}}: CS1 maint: numeric names: authors list (link)
  5. "Tarar claims he is still president".
  6. "Rafiq Tarar forced to quit?". The Hindu. 21 June 2001 இம் மூலத்தில் இருந்து 28 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150128021108/http://www.thehindu.com/2001/06/21/stories/01210002.htm. பார்த்த நாள்: 28 January 2015. 
  7. "Coup chief declares himself president".
  8. (Chitkara 2001)
  9. "State Minister List—Saira Afzal tarar". Prime Minister Office Website. Archived from the original on 24 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 November 2014.
  10. Former Pakistani President Rafiq Tarar dies at 92. The Hindu. 7 march 2022. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_ரபீக்_தாரர்&oldid=3712692" இலிருந்து மீள்விக்கப்பட்டது