முகம்மது அப்துல் அலி

அல்-ஹஜ் நவாப் குலாம் முகம்மது அப்துல் அலி கான் பகதூர் (பிறப்பு 9 ஆகத்து 1951) தற்போதைய ஆற்காடு இளவரசராக பட்டம் ஏற்றிருப்பவராவார். இவர் 1993 சூலையில் தமது தந்தை குலாம் முகம்மது அப்துல் காதிரின் மறைவிற்குப் பிறகு இப்பட்டத்திற்கு உரியவரானார்.[1] இவரது குடும்பத்தினர் இரண்டாவது கலீபாவான உமறு இப்னுல் கத்தாபின் வழித்தோன்றல்களாவர்.[2]

ஆற்காடு இளவரசர் என்ற நிலையில் இவர் பல சமய அறக்கட்டளைகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் தலைவராக உள்ளார். மக்கா, மதீனா நகரங்களை நிர்வகிக்கும் வக்பு குழுவின் உறுப்பினராக உள்ளார்.[சான்று தேவை] அரச விழாக்களிலும் வரவேற்புகளின் போதும் ஆற்காடு இளவரசருக்கு தமிழ்நாட்டின் ஆய அமைச்சர்களுக்கு இணையான நிலை வழங்கப்படுகிறது.

மேற்சான்றுகள்தொகு

  1. Staff writers (1 February 2004). "Web site on Nawabs of the Carnatic". The Hindu.
  2. Staff writers (15 August 2004). "Web site on Nawabs of the Carnatic". The Hindu.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அப்துல்_அலி&oldid=2711760" இருந்து மீள்விக்கப்பட்டது