முகம்மது மாக்கான் மாக்கார்

சேர் முகம்மது மாக்கான் மாக்கார் (Mohamed Macan Markar, 7 செப்டம்பர் 1877 - 10 மே 1952) என்பவர் இலங்கையின் குடியேற்றக்கால பிரபலமான அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார்.[1] இவர் இலங்கை அரசாங்க சபையில் உட்துறை அமைச்சராகவும்,[2] சட்டவாக்கப் பேரவை உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும் இருந்தவர்.

சேர் முகம்மது மாக்கான் மாக்கார்
Sir Mohamed Macan Markar
தகவல், மற்றும் உட்துறை அமைச்சர்
பதவியில்
1931–1936
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 7, 1877(1877-09-07)
காலி
இறப்பு மே 10, 1952(1952-05-10) (அகவை 74)
கொழும்பு
தேசியம் இலங்கையர்
படித்த கல்வி நிறுவனங்கள் உவெசுலி கல்லூரி, கொழும்பு
பணி தொழிலதிபர், அரசியல்வாதி

இலங்கையின் தெற்கே காலியில் பிரபலமான தொழிலதிபராக இருந்த உதுமா லெப்பை மரிக்கார் மாக்கான் மாக்கார் என்பவருக்குப் பிறந்தவர். கொழும்பு உவெசுலி கல்லூரியில் கல்வி கற்றவர். கல்லூரியில் துடுப்பாட்ட IX அணியில் சேர்ந்து விளையாடினார். படிப்பை முடித்த பின்னர் கொழும்பு நகரில் குடும்பத் தொழிலான நகை வணிகத் தொழிலில் ஈடுபட்டார்.[3]

அரசியலில்தொகு

1924 ஆம் ஆண்டில் இலங்கை சட்டவாக்கப் பேரவையிலும், பின்னர் அரசாங்க சபையிலும் உறுப்பினரானார். தகவல், மற்றும் உட்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1948 முதல் 1952 வரை மேலவை உறுப்பினராக இருந்தார். 1938 ஆம் ஆன்டில் இவருக்கு சேர் வழங்கப்பட்டது.

இவரது பிள்ளைகள் அகமது உசைன் மாக்கான் மாக்கார் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார். முகம்மது அஜ்வார்ட் மாக்கான் மாக்கார், அலவி இப்ராகிம் மாக்கான் மாக்கார் ஆகியோர் மருத்துவர்கள் ஆவர்

இவரது நினைவாக கொழும்பில் கொம்பனித் தெருவில் உள்ள வீதி ஒன்றிற்கு சேர் முகம்மது மாக்கான் மாக்கார் மாவத்தை எனப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

  1. Muhammad Macan Markar
  2. "Sir Don Baron Jayatilaka — a great legacy". 2015-09-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-12 அன்று பார்க்கப்பட்டது.
  3. "100 years in business: O.L.M. Macan Markar into real estate from jewellery". டெய்லி நியூஸ். 5 ஆகத்து 2003. 12 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு