முகம்மது ரிஸ்வான்

பாக்கித்தான் துடுப்பாட்டக்காரர்

முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan பஷ்தூ: محمد رضوان  ; பிறப்பு 1 ஜூன் 1992) 2008 ஆம் ஆண்டு முதல் முதல் தரத் துடுப்பட்டப் போட்டிகளில் விளையாடிய பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் வலது கை மட்டையாளர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார் . இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார். ஆகஸ்ட் 2018 இல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) 2018–19 ஆண்டிற்கான மைய ஒப்பந்தத்தை பெற்ற முப்பத்து மூன்று வீரர்களில் ஒருவராக இருந்தார்.[1][2]

உள்ளூர் போட்டிகள்

தொகு

2014–15 ஆம் ஆண்டில் நடந்த காயிட்-இ-அசாம் டிராபியின் இறுதிப் போட்டியில் சுய் நார்தர்ன் கேஸ் பைப்லைன்ஸ் லிமிடெட் அணி சார்பாக விளையாடிய ரிஸ்வான் 224 ரன்கள் எடுத்து அணியின் ஓட்டங்களை அதிகரிக்க உதவினார். இதன்மூலம் அந்த அணி 301 ஓட்டங்கள் முதல் ஆட்டப் பகுதியில் முன்னிலை பெற்றது. மேலும் அந்தப் போட்டியினை வென்றது. இது அந்த அணி வெல்லும் இரண்டாவது கோப்பையாகும்.[3] 2014 ஆம் ஆண்டில் கென்யத் துடுப்பாட்ட அணிக்காக பாக்கித்தான் அ அணி சார்பாக இவர் அரிமுகமானார்.[4]

ஏப்ரல் 2018 இல், 2018 பாகிஸ்தான் கோப்பைக்கான பஞ்சாப் துடுப்பாட்ட அணியின் துணைத் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6] 1 மே 2018 அன்று, பட்டியல் அ போட்டியில் இவர் பெடரல் பகுதி துடுப்பாட்ட அணிக்கு எதிராக 123 பந்துகளில் 140 ஓட்டங்கள் எடுத்தார். இதுவே பட்டியல் அ போட்டிகளில் இவரின் சிறந்த மட்டையாட்டம் ஆகும்.[7] மார்ச் 2019 இல், இவர் 2019 பாகிஸ்தான் கோப்பைக்கான பெடரல் ஏரியாஸ் துடுப்பாட்ட அணியின் தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.[8][9]

செப்டம்பர் 2019 இல், ரிஸ்வான் 2019–20 குவைத்-இ-அசாம் கோப்பைத் தொடருக்கான கைபர் பக்துன்க்வா துடுப்பாட்ட அணியின் தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.[10][11] அக்டோபர் 2019 இல், 2019–20 தேசிய இருபது20 கோப்பையில் 215 ரன்கள் எடுத்தார்.மேலும் பந்துவீச்சில் ஆறு இலக்குகளை வீழ்த்தியதற்காக ஆட்ட நாயகன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[12]

சர்வதேச போட்டிகள்

தொகு

இவர் ஏப்ரல் 2015 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி சார்பாக தனது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இவர் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் 58 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்தார்.[13] அதே தொடரில் பாகிஸ்தானுக்காக தனது இருபதுக்கு -20 சர்வதேச அறிமுகமானார்.[14] இவர் நவம்பர் 25, 2016 அன்று நியூசிலாந்திற்கு துடுப்பாட்ட அணிக்கு எதிராக பாகிஸ்தானுக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[15] இவர் தனது முதல் டெஹெர்வுத் துடுப்பட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.[16]

2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் அணிகள் ஆசியா கோப்பையில் பாகிஸ்தான் அணியின் தலைவராக இருந்தார்.[17] பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்தது.[18] மார்ச் 2019 இல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, ரிஸ்வான் ஒருநாள் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். அந்தப் போட்டியில் இவர் 115 ஓட்டங்கள் எடுத்து இவர் ஆட்டமிழந்தார்.[19]

குறிப்புகள்

தொகு
  1. "PCB Central Contracts 2018–19". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
  2. "New central contracts guarantee earnings boost for Pakistan players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
  3. National Bank of Pakistan v Sui Northern Gas Pipelines Limited 2014–15
  4. Kenya in Pakistan 2014–15
  5. "Pakistan Cup one-day tournament to begin in Faisalabad next week". Geo TV. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018.
  6. "Pakistan Cup Cricket from 25th". The News International. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018.
  7. "Pakistan Cricket Cup: Kamran hammers 170 off 96 balls". The News International. பார்க்கப்பட்ட நாள் 2 May 2018.
  8. "Federal Areas aim to complete hat-trick of Pakistan Cup titles". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 25 March 2019.
  9. "Pakistan Cup one-day cricket from April 2". The International News. பார்க்கப்பட்ட நாள் 25 March 2019.
  10. "PCB announces squads for 2019-20 domestic season". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  11. "Sarfaraz Ahmed and Babar Azam to take charge of Pakistan domestic sides". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  12. "Northern beat Balochistan to be crowned National T20 Cup champions". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
  13. "Pakistan tour of Bangladesh, 1st ODI: Bangladesh v Pakistan at Dhaka, Apr 17, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 April 2015.
  14. "Pakistan tour of Bangladesh, Only T20I: Bangladesh v Pakistan at Dhaka, Apr 24, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 April 2015.
  15. "Pakistan tour of New Zealand, 2nd Test: New Zealand v Pakistan at Hamilton, Nov 25–29, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 November 2016.
  16. "A rare slump for Younis Khan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 November 2016.
  17. "Pakistan squad announced for Emerging Asia Cup 2018 to Co-Host by Pakistan and Sri Lanka". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
  18. "Asian Cricket Council Emerging Teams Cup 2018". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 February 2019.
  19. "Ton-up Rizwan guides Pakistan to 284-7 in second ODI". Yahoo News. பார்க்கப்பட்ட நாள் 24 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_ரிஸ்வான்&oldid=2867954" இலிருந்து மீள்விக்கப்பட்டது