முகுந்த் நாயக்

முகுந்த் நாயக் (Mukund Nayak) (பிறப்பு 1949), ஓர் இந்தியக் கலைஞரும், நாட்டுப்புறப் பாடகரும், பாடலாசிரியரும் , நடனக் கலைஞருமாவார். மேலும் இவர், நாக்புரி நாட்டுப்புற நடனமான ஜுமரில் நிபுணத்துவம் பெற்றவராவார். [1] [2] இவர், பத்மசிறீ, சங்கீத நாடக அகாதமி விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். [3] [4] [5] [6]

முகுந்த் நாயக்
பிறப்புமுகுந்த் நாயக்
15 அக்டோபர் 1949 (1949-10-15) (அகவை 74)
பக்போ, சிம்டேகா, பீகார் (தற்போதைய சார்க்கண்டு), இந்தியா
கல்விதியோகர் வித்யாபீடத்தில் இளங்கலைப் பட்டம்
பணிநாட்டுப்புறப் பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடனக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1974–தற்போது வரை
அறியப்படுவதுநாக்புரி நாட்டுப்புற இசை
வாழ்க்கைத்
துணை
திரௌபதி தேவி
பிள்ளைகள்
  • நந்தினி நாயக்
  • பிரதுமன் நாயக்
  • சந்த்ரகாந்தா நாயக்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

இவர் 1949இல் பீகார் (இப்போது ஜார்க்கண்ட் சிம்டேகா மாவட்டத்தின் போக்பா கிராமத்தில் பிறந்தார். இவர், பாரம்பரியமாக இசைக்கலைஞர்களாக இருந்த காசி சமூகத்தைச் சேர்ந்தவர். தியோகர் வித்யாபீடத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.[7][8][9]

தொழில்

தொகு

பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், முகுந்த் நாயக், பாரத் நாயக், பவ்யா நாயக், பிரபுல் குமார் ராய், லால் ரன்வீர் நாத் சகாதேவ், சசிதிஜ் குமார் போன்ற பிற கலாச்சார ஆர்வலர்களுடன் பொது இடங்களில் பாடத் தொடங்கினார். 1974ஆம் ஆண்டில், ஆகாஷ்வானியில் நடிகராக சேர்ந்தார். ராஞ்சியில் உள்ள ஜெகநாத்பூர் மேளாவில் இவரது முதல் நடிப்பு பெரிய அளவில் பார்வையாளர்களை ஈர்த்தது. 1980 ஆம் ஆண்டில், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பிராந்திய மற்றும் பழங்குடி மொழித் துறை உருவானபோது, இவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்தார். 1981ஆம் ஆண்டில், தென் பீகாரின் கரம் இசை குறித்த ஆராய்ச்சியாளரான முனைவர் கரோல் மெர்ரி பேபியுடன் தொடர்பு கொண்டார். அவருடன் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது. 1988ஆம் ஆண்டில், சீன கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான ஆங்காங் நிறுவனத்தின் மூன்றாவது "ஆங்காங் சர்வதேச நடன விழாவில்" இவரது குழு நிகழ்த்தியது. 1985ஆம் ஆண்டில், நாக்புரி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக "குஞ்ச்பன்" என்ற அமைப்பை நிறுவினார். குஞ்ச்பன் நாக்புரி கலாச்சாரத்தை, குறிப்பாக நாக்புரி ஜுமரை ஊக்குவிக்கிறது.[7]

விருதுகள்

தொகு
 
மார்ச் 30, 2017 அன்று புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடந்த ஓர் விழாவில் பத்மஸ்ரீ விருதைப் பெறுகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Dashboard (7 June 2014). "Out of the Dark". democraticworld.
  2. "Song of India". thecollege.syr.edu. 25 August 2017.
  3. "Padma Shri duo, take a bow". telegraphindia. 26 January 2017.
  4. Pioneer, The (26 January 2017). "Balbir Dutt, Mukund Nayak bag Padma Shri".
  5. "Sangeet Natak Akademi Awards: President Ram Nath Kovind Honours 42 Artistes". indiatoday. 6 February 2019.
  6. "Sangeet Natak Akademi Awards: President Kovind Honours the Achievers". new18. 6 February 2019.
  7. 7.0 7.1 Dashboard (7 June 2014). "Out of the Dark". democraticworld.
  8. "Song of India". thecollege.syr.edu. 25 August 2017.
  9. "Mukund Nayak - Ranchi. - Lens Eye, Neither tomorrow nor today, it's now". 20 May 2012.
  10. "Mukund Nayak - Ranchi. - Lens Eye, Neither tomorrow nor today, it's now". 20 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுந்த்_நாயக்&oldid=4090800" இலிருந்து மீள்விக்கப்பட்டது