முகேசு தலால்
முகேசுகுமார் சந்திரகாந்த் தலால் (Mukesh Dalal) குசராத்தினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2024 முதல் சூரத் மக்களவைத் தொகுதியிலிருந்து 18ஆவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.[1] பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான இவர், முன்பு சூரத்தில் கட்சியின் செயலாளராகப் பணியாற்றினார்.[2]
முகேசு தலால் | |
---|---|
மக்களவை உறுப்பினர்-இந்திய நாடாளுமன்றம்-சூரத் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 சூன்2024 | |
முன்னையவர் | தர்சனா ஜர்தோசு |
பெரும்பான்மை | எதிர்ப்பின்றி தேர்வு[a] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1961 (அகவை 63–64) சூரத்து, குசராத்து, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (1981 முதல்) |
கல்வி | இளங்கலை வணிகவியல், இளங்கலைச் சட்டம், முதுகலை வணிக மேலாண்மை (நிதி) |
முன்னாள் கல்லூரி | வீர் நர்மத் தெற்கு குசராத்துப் பலகலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி, வணிகவியலாளர் |
Other offices
| |
பிறப்பும் கல்வியும்
தொகுதலால் 1961-இல் சூரத்தில் பிறந்தார். இவர் மோத் வனிக் சமூகத்தைச் சேர்ந்தவர்.[3] 1995ஆம் ஆண்டில் வீர் நர்மத் தெற்கு குசராத்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகம் மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். 1988ஆம் ஆண்டில் வி. டி. சோக்சி சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்றார்.[2][4]
ஆரம்பகால தொழில்
தொகுதலால் 1981 முதல் பாஜகவில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.[5] இவர் சூரத் மாவட்ட துடுப்பாட்டச் சங்கக் குழுவில் உறுப்பினரானார்.[6] இவர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் ஆவார்.[4]
2005 முதல் 2020 வரை அதாஜன்-பால்-பாலன்போர் பகுதியிலிருந்து சூரத் மாநகராட்சிப் பகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு மாநகராட்சியில் நிலைக்குழுத் தலைவராக ஐந்து முறை பணியாற்றினார்.[7]
தலால் மூன்று ஆண்டுகள் நகரத்தின் பாஜக கட்சி செயலாளராகப் பணியாற்றினார்.[8] சூரத்தில் உள்ள மக்கள் கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.[9]
மக்களவை உறுப்பினர்
தொகுசூரத் தொகுதியிலிருந்து ஏழு வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றதாலும், காங்கிரசு வேட்பாளரின் பிரமாணப் பத்திரம் நிராகரிக்கப்பட்டதும், மே 7 அன்று தேர்தலுக்கு முன்னரே 18ஆவது மக்களவைக்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினராகத் தலால் 22 ஏப்ரல் 2024 அன்று தேர்வு செய்யப்பட்டார்.[10][11][12]
குறிப்புகள்
தொகு- ↑ 22 ஏப்ரல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "BJP candidate Mukesh Dalal elected unopposed from Surat Lok Sabha seat" (in en-IN). The Hindu. 2024-04-22. https://www.thehindu.com/elections/lok-sabha/bjp-candidate-mukesh-dalal-elected-unopposed-from-surat-lok-sabha-seat-gujarat/article68093700.ece.
- ↑ 2.0 2.1 "Who Is Mukeshbhai Dalal, 1st BJP MP Of 18th Lok Sabha Who Won Before Poll Results". Times Now (in ஆங்கிலம்). 2024-04-22. பார்க்கப்பட்ட நாள் 2024-04-22.
- ↑ "Who is Mukesh Dalal, the first candidate to be declared winner in LS polls 2024?". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-04-23. பார்க்கப்பட்ட நாள் 2024-05-06.
- ↑ 4.0 4.1 "Mukeshkumar Chandrakaant Dalal(Bharatiya Janata Party(BJP)):Constituency- SURAT(GUJARAT) - Affidavit Information of Candidate:". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-05-17.
- ↑ "BJP candidate Mukesh Dalal wins Surat Lok Sabha seat unopposed". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-04-22. பார்க்கப்பட்ட நாள் 2024-04-22.
- ↑ "BJP candidate from Surat declared elected after all candidates in fray withdrew nominations". BusinessLine (in ஆங்கிலம்). 2024-04-22. பார்க்கப்பட்ட நாள் 2024-04-22.
- ↑ "Who is Mukesh Dalal, BJP Lok Sabha candidate for Surat seat". DeshGujarat (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-03-13. பார்க்கப்பட்ட நாள் 2024-04-22.
- ↑ "Gujarat Lok Sabha Elections 2024: BJP's Mukesh Dalal wins Surat seat unopposed". Business Today (in ஆங்கிலம்). 2024-04-22. பார்க்கப்பட்ட நாள் 2024-04-22.
- ↑ "A first for BJP, wins Surat Lok Sabha seat 'unopposed': After Congress candidate rejected, 8 withdraw". The Indian Express (in ஆங்கிலம்). 2024-04-22. பார்க்கப்பட்ட நாள் 2024-04-23.
- ↑ "BJP wins Lok Sabha seat even before voting, but it isn't so rare". India Today (in ஆங்கிலம்). 2024-04-22. பார்க்கப்பட்ட நாள் 2024-04-22.
- ↑ Hindustan Times (22 April 2024). "BJP candidate Mukesh Dalal wins Surat Lok Sabha seat unopposed" (in en) இம் மூலத்தில் இருந்து 22 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240422113542/https://www.hindustantimes.com/cities/others/bjp-candidate-mukesh-dalal-wins-surat-lok-sabha-seat-unopposed-101713780739137.html.
- ↑ The Hindu (22 April 2024). "BJP candidate Mukesh Dalal elected unopposed from Surat" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 22 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240422114333/https://www.thehindu.com/elections/lok-sabha/bjp-candidate-mukesh-dalal-elected-unopposed-from-surat-lok-sabha-seat-gujarat/article68093700.ece. பார்த்த நாள்: 22 April 2024.