முகேன் ராவ்

முகேன் ராவ் (Mugen Rao, பிறப்பு:1995) என்பவர் மலேசிய பாடகரும் தமிழ் திரைப்பட நடிகரும் ஆவார்.[1] 2019 இல், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் பருவம் 3 இன் வெற்றியாளர் ஆவார். இவர் சில சமயங்களில் எம்ஜிஆர் என்ற சுருக்கப்பெயருடன் அழைக்கப்படுகிறார்.[2]

முகேன் ராவ்
2020 இல் முகேன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்முகேன் ராவ்
பிறப்பு20 அக்டோபர் 1995 (1995-10-20) (அகவை 29)
தொழில்(கள்)நடிகர், பாடகர்
இசைத்துறையில்2009–முதல்
இணையதளம்www.mugenrao.com

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

முகேன் ராவ் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மூன்று குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார்.[2] இவரது தந்தை பிரகாஷ் ராவ் 2020 இல் இறந்தார்.[3]

தொழில் வாழ்க்கை

தொகு

தனது தந்தையுடன் ஒரு மேடைப் பாடகராகத் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கிய முகேன் ஐம்பது மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.[2][4] மலாய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான சேனந்துங் மலம் மூலம் அறிமுகமான இவர், பின்னர் கெராக் காஸ் மற்றும் கோரா உள்ளிட்ட திரைபடங்களிலும் குறும்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள் மற்றும் விளம்பரங்களில் சிறிய வேடங்களிலும் நடித்துள்ளார்.[2]

2016 இல் இவரது இசை காணொலியான "கயல்விழி" வலையொளியில் தீவிரப்பரவலைத் தொடர்ந்து முகேன் ராவின் இசை வாழ்க்கை தொடங்கியது.[5] இவரது பிற்கால இசைக் காணொலிகளில் "அன்பே ஆருயிரே", "போகிறேன்", "மயக்குறியே" மற்றும் "ஒத்த தாமரை" ஆகியவை அடங்கும். இது 2022 இல் மெய்நிகர் உற்பத்தி தொழில்நுட்பம் மூலம் படமாக்கப்பட்டது.[6]

2019 ஆம் ஆண்டில், இவர் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் பருவம் 3இல் கலந்து கொண்டு முதல் பரிசினை வென்றதன் மூலம் இந்தியாவில் பிரபலமடையத் துவங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் மலேசிய போட்டியாளரும் இவரேயாவார்.[5][7] "சத்தியமா" என்ற இவரது 2019 பாடல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணமாக, அதிகாரப்பூர்வமாக 2020 இல் வெளியிடப்பட்டது.[8] பிக்பாஸ் வெற்றியைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்படத்துறையில் இவருக்கு உருவாகிய மவுசு மற்றும் படவாய்ப்புகள் காரணமாக சென்னைக்கு இடம் பெயர்ந்தார். .[9][10]

இவர் 2020 இல் மூன்று தமிழ்த் திரைப்பட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.[11] வெற்றி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது .[12] இயக்குநர் கவின் மூர்த்தியின் இயக்கத்தில் முன்னணி நாயகனாக நடித்த வேலன் என்ற திரைப்படம் திசம்பர் 2021 இல் வெளியிடப்பட்டது.[13][14][15] 2022 இல், இவர் திவ்ய பாரதியுடன் இணைந்து மதில் மெல் காதல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் .[16]

திரைப்படவியல்

தொகு

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு படம் பங்கு(கள்) குறிப்புகள்
2018 Ghora ஆதித்யா மலேசிய திரைப்படம்
ஹரன் அப்து
ஹே காஃபிலோபர் ராம்
2019 வெண்பா யுவராஜ் பாலகிருஷ்ணன் மலேசிய படம் (தண்டாயுதபாணியே பாடலில் சிறப்புத் தோற்றம் )
2021 வேலன் வேலன் மேலும் பாடகர் மற்றும் பாடலாசிரியர்
அறிவிக்கப்படும் வெற்றி அறிவிக்கப்படும்
அறிவிக்கப்படும் மதில் மெல் காதல் அறிவிக்கப்படும்
அறிவிக்கப்படும் Kaadhal Enbathu Saabama அறிவிக்கப்படும்
அறிவிக்கப்படும் ஜின் அறிவிக்கப்படும்

இணைய தொடர்கள்

தொகு
List of web series and roles
வருடம் தலைப்பு கதாபாத்திரம் குறிப்பு பார்வை
2023 MY3 ஆதித்ய சந்திரசேகர் மேலதிக ஊடக சேவை வெளியீடு [17]

குறும்படங்கள்

தொகு
ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2017 நான் பீட்டர்
2018 Light Up Someone's Life

தொலைக்காட்சி

தொகு

நடிகர்

தொகு
ஆண்டு தொடர்/தொலைக்காட்சிப்படம் / நாடகம் பங்கு சேனல் மொழி குறிப்புகள்
2009 செனந்துங் மாலாம் பேப்பர்பாய் மலாய்
2010 டா பாம்பா துணை நடிகர் மலாய்
2011 கெரக் காஸ் துணை நடிகர் டிவி2 மலாய்
2012 சிண்டிகெட் ஃபிக்ஸி துணை நடிகர் மலாய்
2012 ரூமா கெசில் இடு துணை நடிகர் மலாய்
2014 ரெம்ப அடா வைஃபை துணை நடிகர் மலாய்
2016 ஆஸ்ட்ரோ சிட்காம்: முடிதிருத்தும் முக்கிய நடிகர்கள் தமிழ்
2016 வீட்டுக்கு ஒரு பாட்டி முக்கிய நடிகர்கள் தமிழ்
2016 இப்பாடியும் பண்ணலாமா முக்கிய நடிகர்கள் தமிழ்
2017 அகம் புரம் தமிழ்
2018 செகுரிட்டி டிவி2 தமிழ்
2018 Sugamaana Sumaigal தமிழ்
2019 நீ யார் முக்கிய நடிகர்கள் டிவி2 தமிழ் சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகர் விருது
ஆண்டு பாடல் இசை குறிப்புகள்
2014 "அன்பே ஆருயிரே" பிரசான் சீன்
2015 "ஆயிரம் சொர்கம்" எம்சி போய் மேலும் இணை பாடலாசிரியர்
2016 "காதல் என்பது சாபமா" லாரன்ஸ் சூசை
"நன்பா வா" ஜோஸ் பிராங்க்ளின்
2022 "மாயக்கிரியே" அனிவீ
"ஓதை தாமரையே" சாண்டி சாண்டெல்லோ
2023 "ஒற்றை ஆயிட்டேன் டி" தரன் குமார்
"மக்கா மக்கா" ஹாரிஸ் ஜெயராஜ்

மேற்கோள்கள்

தொகு
  1. Sriram Ranganath (2 October 2019). "Bigg Boss Tamil 3, Day 100 Written Update: How Mugen Rao Made The 100th Day Extra Special" இம் மூலத்தில் இருந்து 2 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191002133651/https://www.ndtv.com/entertainment/bigg-boss-tamil-3-day-100-written-update-how-mugen-rao-made-the-100th-day-extra-special-2110848. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Bigg Boss Tamil 3: From being influenced by gangster culture in Malaysia to a talented lyricist, lesser known facts of Mugen Rao". 24 June 2019 இம் மூலத்தில் இருந்து 23 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221123024919/https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/bigg-boss-tamil-3-from-being-influenced-by-gangster-culture-in-malaysia-to-a-talented-lyricist-lesser-known-facts-of-mugen-rao/photostory/69927524.cms.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Times" defined multiple times with different content
  3. "Mugen Rao's father passes away". IndiaGlitz. 28 January 2020 இம் மூலத்தில் இருந்து 20 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221120062808/https://www.indiaglitz.com/mugen-rao-father-prakash-rao-passed-away-bigg-boss-3-title-winner-tamil-news-252210. 
  4. "EXCLUSIVE: Velan Interview With Malaysian Actor Mugen Rao - Varnam MY". 31 December 2021. Archived from the original on 28 September 2023. பார்க்கப்பட்ட நாள் 5 October 2023.
  5. 5.0 5.1 "Malaysian Mugen Rao wins India's 'Bigg Boss 3' reality TV show". 27 October 2019 இம் மூலத்தில் இருந்து 20 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221120062812/https://www.malaymail.com/news/malaysia/2019/10/07/malaysian-mugen-rao-wins-indias-bigg-boss-3-reality-tv-show/1797830.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "MM" defined multiple times with different content
  6. "Shoot at Site: Mugen's new music video is shot using virtual production technology". 25 March 2022 இம் மூலத்தில் இருந்து 20 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221120062810/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/shoot-at-site-mugens-new-music-video-is-shot-using-virtual-production-technology/articleshow/90426376.cms. 
  7. "Mugen Rao wins Bigg Boss Tamil season 3 MGR". 7 October 2019 இம் மூலத்தில் இருந்து 20 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221120062807/https://www.thehindu.com/entertainment/mugen-rao-wins-bigg-boss-tamil-season-3/article29612665.ece. 
  8. "WATCH: Mugen Rao's Infamous Tune, Sathiyama is Finally on YouTube! - Varnam MY". 2 May 2020. Archived from the original on 28 September 2023. பார்க்கப்பட்ட நாள் 5 October 2023.
  9. Gautam Sunder (15 October 2019). "Mugen Rao can't wait to conquer the world, beginning with Kollywood first" இம் மூலத்தில் இருந்து 20 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221120062811/https://www.thehindu.com/entertainment/movies/bigg-boss-tamil-winner-mugen-rao-cant-wait-to-conquer-the-world-beginning-with-kollywood-first/article29690101.ece. 
  10. "Mugen Rao Ranks 11th on the Chennai Times 30 Most Desirable Men 2019 - Varnam MY". 16 March 2020. Archived from the original on 28 September 2023. பார்க்கப்பட்ட நாள் 5 October 2023.
  11. "Malaysian artiste Mugen Rao signs deal to star in 3 Kollywood movies". The Star. 29 September 2020. Archived from the original on 20 November 2022. பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
  12. "'Bigg Boss' winner Mugen Rao, Miss India Anukreethy Vas to debut in 'Vettri'". 28 September 2020. Archived from the original on 20 November 2022. பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
  13. "Mugen looked perfect for the role of Pollachi native boy in Velan: Director Kavin". 22 December 2021 இம் மூலத்தில் இருந்து 20 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221120063145/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/mugen-looked-perfect-for-the-role-of-pollachi-native-boy-in-velan-director-kavin/articleshow/88433733.cms. 
  14. Bhuvanesh Chandar (26 April 2021). "Velan to feature Mugen Rao in two looks; first look out" இம் மூலத்தில் இருந்து 20 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221120062816/https://www.cinemaexpress.com/stories/news/2021/apr/26/velan-to-feature-mugen-rao-in-two-looks-first-look-out-24169.html. 
  15. "Mugen Rao's Velan cleared with a clean 'U' certificate". Times Of India. 7 November 2021. Archived from the original on 20 November 2022. பார்க்கப்பட்ட நாள் 20 November 2022.
  16. Sharanya CR (2 December 2021). "Mugen Rao & Divya Bharathi's Mathil Mel Kadhal is a love story set in Chennai" இம் மூலத்தில் இருந்து 20 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221120064007/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/mugen-rao-divya-bharathis-mathil-mel-kadhal-is-a-love-story-set-in-chennai/articleshow/88034505.cms. 
  17. "'MY3': First look of Hansika, Shanthnu, Mugen's web series out". www.thehindu.com (in ஆங்கிலம்). 22 August 2023. Archived from the original on 4 September 2023. பார்க்கப்பட்ட நாள் 5 October 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகேன்_ராவ்&oldid=4152873" இலிருந்து மீள்விக்கப்பட்டது