முக்கல்நாயக்கன அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

முக்கல்நாயக்கன அள்ளி (Mukkalnaickanahalli) ன்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

முக்கல்நாயக்கன அள்ளி
முக்கல்நாயக்கன ஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636704

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவ் உள்ளது.


மேல் இராஜாேதோப்பு


தருமபுரி மாவட்டத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. முக்கல்நாயக்கன் அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமமாகும். இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ்ந்தும், கரும்பு, மஞ்சள், நெல், மல்லிகை பூ வியாபாரம் என வேளாண்மையில் தலைச் சிறந்து விளங்கும் ஊராகவும் திகழ்கிறது. இவ்வூரில் 300 மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையமும், மாணவர்கள் பயில உயர்நிலைப் பள்ளியும் உள்ளது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் அமைந்துள்ள ஊராகத் திகழ்கிறது. இச்சுகாதார நிலையம் அருகிலுள்ள ஊர்களிலிருந்து வரும் மக்களின் நோய்களை குணப்படுத்தும் மையமாகச் செயல்படுகிறது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1,587 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 6,576 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3,172 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3,404 என்றும் உள்ளது.[2]

மேற்கோள்

தொகு
  1. https://vlist.in/sub-district/05888.html
  2. https://villageinfo.in/tamil-nadu/dharmapuri/dharmapuri/mukkalnaickanahalli.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கல்நாயக்கன_அள்ளி&oldid=3828730" இலிருந்து மீள்விக்கப்பட்டது