முக்கா கடற்கரை

இந்தியாவின் மங்களூரின் முக்கா எனும் இடத்திலுள்ள ஒரு கடற்கரை

முக்கா கடற்கரை என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலம், மங்களூர் அருகில் உள்ள கர்நாடக தேசிய தொழில்நுட்ப நிறுவன கடற்கரைக்கு வடக்கே அமைந்துள்ள மங்களூரில் உள்ள முக்காவில் உள்ள ஒரு கடற்கரையாகும். இந்த கடற்கரை அரபிக்கடல் கடற்கரையில் அமைந்துள்ளது.[1]

முக்கா கடற்கரை
கடற்கரை
அமைவிடம்முக்கா
நகரம்மங்களூர்
நாடுஇந்தியாஇந்தியா
அரசு
 • நிர்வாகம்மங்களூர் மாநகராட்சி

இந்த கடற்கரையில் ஒருவர் பல்வேறு ஓடுகளைக் காணலாம். முக்கா கடற்கரை தங்க நிற மணல் மற்றும் உயரமான பைன் மரங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த கடற்கரையில் ஒரு பழைய கலங்கரை விளக்கம் உள்ளது.

இடம் தொகு

முக்கா கடற்கரை மங்களூர் நகரின் கிராமப்புறத்தில் அமைந்துள்ளது.[2] இது தேசிய நெடுஞ்சாலை - 66ஐ இணைக்கும் சூரத்கல் வளாகத்தின் வடக்குப் பக்கம் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் நோக்கி அமைந்துள்ளது. முக்கா கிராமம் அமைதியாக வளர்ந்த நகரம்.

இணைப்பு தொகு

பாரத ஸ்டேட் வங்கிலிருந்து முக்காவிற்கு நகரப் பேருந்து (எண். 2A) மூலம் செல்லலாம் .

மேற்கோள்கள் தொகு

  1. "All About Mukka Beach, Karnataka". www.indiamapped.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-02.
  2. Dsouza, Glenn. "Home". www.redrockresidency.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கா_கடற்கரை&oldid=3438447" இலிருந்து மீள்விக்கப்பட்டது