தேசிய நெடுஞ்சாலை 66 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 66 இந்தியாவில் புதுச்சேரியை பெங்களூருடன் இணைக்கும் ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது புதுச்சேரியிலுள்ள இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து துவங்கி, வடமேற்கே திண்டிவனம் வரை சென்று பின்னர் மேற்கில் திருவண்ணாமலை வழியாக ஊத்தங்கரை வரைச் செல்கிறது. இங்கிருந்து தே. நெ. 46இல் அமைந்துள்ள கிருட்டிணகிரியில் இணைகிறது. இந்த சந்திப்பிலிருந்து 1 km (0.62 mi) தொலைவிலுள்ள நே.நெ. 7இலிருந்து தே.நெ. 46 துவங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 66இன் மொத்த தொலைவு 214 km (133 mi) ஆகும்.[1] [2]
வழித்தட தகவல்கள் | ||||
---|---|---|---|---|
நீளம்: | 214 km (133 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | புதுச்சேரி | |||
முடிவு: | கிருஷ்ணகிரி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 210 km (130 mi) புதுச்சேரி: 4 km (2.5 mi) | |||
முதன்மை இலக்குகள்: | திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, மாத்தூர், | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுபுதுச்சேரி - திருச்சிற்றம்பலம் - கிளியனூர் - திண்டிவனம் - வல்லம் - செஞ்சி - பென்னாத்தூர் - திருவண்ணாமலை - பாச்சல் - செங்கம் - சிங்காரப்பேட்டை - ஊத்தங்கரை - சாமல்பட்டி - மத்தூர் - கன்னடஹள்ளி - கிருட்டிணகிரி.
சாலை மேம்பாடு
தொகுபுதுச்சேரிக்கும் திண்டிவனத்திற்கும் இடையே 38.61 km (23.99 mi) தொலைவுள்ள சாலை நான்குவழிப் பாதையாக மேதாசு-என்சிசி கூட்டிணைவு கட்டமைத்துள்ளது.[3][4]
சான்றுகோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Details of National Highways in India-Source-Govt. of India
- ↑ "National Highways and their lengths". Ministry of Road Transport & Highways, Government of India. National Highways Authority of India. Archived from the original on 2010-02-10. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.
- ↑ .:NHAI:.Completed Stretches on Golden Quadrilateral பரணிடப்பட்டது 2012-05-17 at the வந்தவழி இயந்திரம் Dindivanam to Pondicherry widening
- ↑ KV, Ramana (2009-07-14). "Nagarjuna to go on sans Maytas". Daily News and Analysis. Hyderabad. http://www.dnaindia.com/money/report_nagarjuna-to-go-on-sans-maytas_1273790. பார்த்த நாள்: 2012-07-20.