சாமல்பட்டி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

சாமல்பட்டி (Samalpatti) என்பது இந்தியா, தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது சாமல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

சாமல்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
ஏற்றம்
346 m (1,135 ft)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635306

பெயர்க்காரணம்

தொகு

ஆங்கிலேயர் காலத்தில் நீராவியால் இயங்கும் புகை வண்டிகள் பயன்படுத்தும் நிலக்கரிச் சாம்பலை இப்பகுதியில் கொட்டியதால் "சாம்பல்பட்டி" என்று அழைக்கப்பட்டு, பின்னர் அது மருவிச் "சாமல்பட்டி" என்ற பெயர் வந்தது.[சான்று தேவை]

அமைவிடம்

தொகு

இவ்வூரின் வழியாக இந்திய தேசிய நெடுஞ்சாலை 66 செல்கிறது. இவ்வூரில் தொடர்வண்டி நிலையம் உள்ளது. இந்த நிலையம் சேலம் தொடர்வண்டி கோட்டத்தைச் சேர்ந்ததாகும்.[2] இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இவ்வூருக்கு அருகில் உள்ள வானூர்தி நிலையங்கள் சேலம் வானூர்தி நிலையமும், பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையமும் ஆகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 965, மொத்த மக்கள் தொகை 4,001, இதில் 1,962 ஆண்களும், 2,039 பெண்களும் அடங்குவர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  2. http://www.india9.com/i9show/Samalpatti-Railway-Station-64567.htm About Samalpatti Railway Station
  3. "Samalpatti Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமல்பட்டி&oldid=3599988" இலிருந்து மீள்விக்கப்பட்டது